முக்கால் வாசி விளம்பரங்கள் கண்கவரும் வண்ணம் இருந்தாலும் அவை உண்மை என்று நம்பத் தோணுவதில்லை .மக்களை பொருட்கள் வாங்குவதற்காக செய்யப் படும் கண்ணுக்குத் தெரியாத மோசடிகளே !
ரொம்பவே அதிகமாக செய்யப்படும் விளம்பரங்கள், மக்களை முட்டாளாக்கி பொருட்களைத் தலையில் கட்டுவதற்காக செய்யப் படும் கட்டுக் கதைகள்.
வெண்மை நிறத்திற்காக கொண்டுவரப் படும் கிரீம்கள் நிஜமாகவே வெண்மை நிறம் கொடுக்கும் என்றால் இந்த விளம்பரங்கள் என்றோ மார்கெட் டிலிருந்து போயிருக்கும். அது இத்தனை காலம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை..
கருமை நிறமானவர்களே இருந்திருக்க மாட்டார்கள் !
விளம்பரத்துக்காகத் தேர்ந்தெடுக்கும் பெண்மணிகள் நிஜத்திலே சிகப்போ, வெண்மையானவர்களே. அவர்களைமேலும்வெளுப்பாகககாட்டி கருமையானவர்களையோ,மாநிறமானவர்களையோ மனம் தளரவைப்பவைகளே இந்த விளம்பரங்கள் .
No comments:
Post a Comment