அந்தப் பணக்காரர் வீட்டில் மூணு நீச்சல்குளம் இருக்கு. ஒண்ணுல சுடுதண்ணீர், இன்னொண்ணுல பச்சைத்தண்ணீர்...
மூணாவதுல?
அது காலியாக இருக்கும். அது தண்ணீர்னா பயப்படுகிறவர்களுக்கு.
...............................................................................
என் பெண்டாட்டிய என்னதான் செய்யறது?
ஏன் என்ன பண்றாங்க?
நான் எது செஞ்சாலும் என் பெண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டிப் பாரேன்...
.....................................................................................
பாடம் எல்லாம் முடிஞ்சிபோச்சு. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.
சார் உங்க பொண்ணு பேர் என்ன சார்?
.................................................................................
(ஒரு இன்டர்வியூவில்)
தேர்வாளர்: டேபிள்மேல அஞ்சு ஈ இருந்தது. ஒண்ணை நான் அடிச்சதும் மீதி எத்தனை இருக்கும்?
வந்தவர்: ஒண்ணு.
தேர்வாளர்: ஒண்ணா, எப்படி?
வந்தவர்: நீங்க அடிச்சுப்போட்ட ஈ மேஜைமேலதானே இருக்கும்.
..........................................................................
சினிமாவுக்குப்போக டிக்கட் வாங்கிவந்திருக்கேன்.
இன்னும் அரைமணிதானே இருக்கு, சரிங்க, நான்போய் டிரஸ்பண்ணிட்டு வந்திடறேன். கொஞ்சம் லேட்டான என்னங்க பண்ணறது?
ஒண்ணும் பிரச்சினை இல்லை. டிக்கட் நாளைக்குத்தான் வங்கிவந்திருக்கேன்!
..................................................................................
தாய்: ஏண்டா உனக்கு மருந்தை எப்பவும் பாட்டியே கொடுக்கணும்னு சொல்றே?
சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும், அதனால பாதி மருந்து கீழேயே போயிடும்!
.................................................................................................
அவர்: எங்கிட்ட எவ்வளவு பெரிய்ய நிலம் இருக்கு தெரியுமா? காலைல கிழக்கு எல்லைலேர்ந்து கார்ல கிளம்பினா, மேற்கு எல்லையைத்தொட சாயங்காலமாயிடும்!
நண்பர்: கொஞ்சநாளைக்கு முன்னாடி என்கிட்டகூட அந்தமாதிரி கார் இருந்தது!
.............................................................................................
மனைவி: ரோஸிங்கறது யாருங்க?
கணவன்: ஏன், நான் தூக்கத்தில் ஏதாவது உளறினேனா? அது பந்தயத்தில் நான் பணம்கட்டப்போகும் குதிரையின் பெயர். சரி எதுக்குக் கேக்கறே?
மனைவி: அப்படியா, அந்தக் குதிரை இன்னிக்கு மத்த்யானம் உங்களுக்கு ஃபோன் பண்ணியது..
......................................................................................
கணவன்: நமக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷத்தில ஒரு விஷயத்துக்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே எப்பவுமே எதிர்க்கருத்து சொல்லிடுவே.
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க. நமக்குக் கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு.
............................................................................................
அம்மா: எதுக்குடா அழுதுகிட்டே வரே?
சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும்போது சுத்தியல் தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா.
அம்மா: இதுக்குப்போய் அழலாமா? நானா இருந்தா சிரிச்சிருப்பேன்.
சிறுவன்: நானும் அதைத்தான்மா செஞ்சேன்!
..........................................................................................
திருடனுக்குப் பிடிச்ச ராகம் எது?
சுருட்டி!
........................................................................................
செருப்பைத் திருடினவன் மாட்டிக்கிட்டான்.
எங்கே?
கால்ல!

உங்கள் ஊரில் பெரியமனிதர்கள் யாராவது பிறந்திருக்கார்களா?
இல்லை, குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.
............................................................................
போஸ்ட்மேனுக்குக் கல்தடுக்கினா எப்பாடி விழுவார் தெரியுமா?
எப்படி?
தபால்னு விழுவார்!
...............................................................................
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தெரியலையே?
குன்னக்குடி வயலனிஸ்ட், காந்திஜி நான்-வயலனிஸ்ட்!
..................................................................................
(வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்ற போர்டைப் பர்த்துவிட்டு ஒருவர்)
கான்ஸ்டபிள் நான் இந்த ரோடுல போகலாமா?
வாகனங்கள்தான் போகக்கூடாது, நீங்கள் போகலாமே?
என் பெயர் மயில்வாகனன் சார்!
...........................................................................
நம்ம மக்கு ஒரு கேள்வி கேட்டான்பாரு, அப்படியே ஆடிப்போய்ட்டேன்!
அவனுக்கு ஒண்ணும் தெரியாதேப்பா, என்ன கேட்டான் அப்படி?
எல்லா பேங்க் ஏ.டீ.ம்.களையும் பார்த்திருக்கேன், ரிசர்வ் பேங்க் ஏ.டீ.ம். எங்க இருக்குன்னான்!
.........................................................................................
காலைல தூங்கி எழுந்ததும் நான் என் மனைவி முகத்தைப் பார்ப்பேன்.
அவ்வளவு பாசமா?
அதெல்லாமில்லை, நரி முகத்துல விழிச்சா நல்லதுங்கற நம்பிக்கைதான்!

. ஸ்டார்ட், ஆக்ஷன்னு சொன்னதும் நீங்க மலை உச்சி அருவியிலிருந்து கீழே குதிக்கிறீங்க!
அப்புறம்?
நாங்க பேக்-அப் பண்ணிட்டு சென்னைக்குப்போயிடுவோம்.
..........................................................................................
அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்க யாரும் கிடையாது.
ஏன்?
எல்லாருக்கும் அவர்தான் ஆபரேஷன் பண்ணினாரு.
.............................................................................................................

No comments:
Post a Comment