Friday, September 28, 2012

கடி ஜோக்ஸ் -12


 என்னது, அவர் ரெண்டு சுயசரிதை எழுதியிருக்காரா?

ஆமாம், அவருக்கு ’ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி’ நோய் இருக்கே!
..............................................


 காதலிச்ச உங்களைக் கைவிட முடியலை.

அதனாலே?

கல்யாணம் பண்ணிகிட்டு டைவர்ஸ் பண்ணப்போறேன்.
....................................................


 என் கணவர் எப்போதுமே டாக்டர் அட்வைஸ்படிதான் நடப்பார்.

அட, நடக்கறதுக்குக்கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன?
................................................


. உங்க பையன் படிப்பில இவ்வளவு பெரிய சாதனை செஞ்சதுக்கு நீங்க ஊக்குவித்ததுதானே முதல் காரணம்?

தப்பா சொல்றீங்க, பாக்குவித்துதான் என் பையனைப் படிக்க வெச்சேன்.
..............................................


. எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம், டாக்டர் சொல்லிட்டாரு!

டாக்டர் இருக்கும்போது எதுக்கு மேஜர் ஆபரேஷன் பண்றாரு?

.......................................


. ஹீரோயின்க்கு எதிர்ப்பதம் என்ன?

ஹீரோ.

இல்ல, ஹீரோஅவுட்.
........................................................................


 எங்க ஸ்கூல் வாத்தியாரப்பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி வெச்சிருக்கேன்.

குரு நாவல்னு சொல்லு!
..........................................................


 டாக்டர் சாதம் சாப்பிட்டா வெயிட் போடுமா?

இல்லையே, வெயிட் போட்டாத்தானே சாதம் சாப்பிடமுடியும்?

என்ன சொல்றீங்க?

நான் குக்கர்ல போடர வெயிட்டைச் சொன்னேன்

......................................

அந்தக்கப்பல் எங்க சொந்தக்காரருடையது.

அப்போ ரிலேஷன்-ஷிப்னு சொல்லுங்க!
.............................................................


 டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐநூறு ரூபாய் ஆகுது.

டாக்டரோட செலவைப்போய் நீங்க ஏன் பண்றீங்க?
.............................................


காது   கேட்கலைன்னுதானே சொன்னீங்க... கண்ணாடி போட்டுட்டு வர்றீங்க?

தெரியாத்தனமா கண்டாக்டர்கிட்ட போயிட்டேன்.

............................................



சிங்காரச் சென்னையை ரீங்காரச் சென்னைன்னு மாத்தனும்னு அவங்க போராட்டம் நடத்தறாங்களே, ஏன்?

சென்னை முழுக்கக் கொசுத்தொல்லை அதிகமா இருக்கற காரணத்தினாலேதான்.

.....................................................................


 என்ன கல்யாணப்பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச்சுத்தி அனுப்பியிருக்காங்க?

பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தால் போதும்னு சம்பந்தி வீட்டுல சொல்லி இருந்தாங்களாம்.
....................................


 தன்னோட கட்சி ஆட்சி அமைக்கும்கிற நம்பிக்கை தலைவருக்கே இல்லைன்னு எப்படிச் சொல்றே?
ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு வாக்கு தர்றாரே!
.............................


 தமிழர்களின் துயரத்தில் நானும் பங்கு எடுத்துக்கொள்கிறேன்...

சொன்னேன்ல, நம்ம தலைவர் எதுலயும் பங்கு எடுத்துக்காம விடமாட்டார்னு!
...................................................................


 மன்னர் எதுக்கு போர்க்களத்தில் சாக்கடைக்கால்வாய் வெட்டச்சொல்கிறார்?

எதிரிப் படைகளைக் கொசுப்படை கொண்டு விரட்டப்போகிறாராம்!
.................................................


 டாக்டர் இந்த மருந்துக்கு சைட்-எஃபெக்ட் இருக்காதுன்னு சொன்னீங்க, ஆனா வயிறு வீங்கிப்போச்சே?

வயிறு நடுவிலதானே இருக்கு, சைட்ல இல்லயே?
.........................................................


 வைக்கோல் சாப்பிட்டா கண்பார்வைக்கு நல்லது.

சும்மா அளக்காதே!

உண்மையாத்தான் சொல்றேன், எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா?
...............................................................................


 என்பிள்ளக்குக் கண்ணைத் திறந்துவிட்டவர் அவர்தான்.

அவனோட காலேஜ் புரொபசரா?

இல்லை, அவனுக்கு முடி வெட்டிவிட்டவர்.
.............................................................


 இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே, எதுக்காம்?

எல்லா விதிமீறல்களையும் செஞ்சிட்டாராம், இனிமேல் விதி புதுசா செய்தால்தான் உண்டு .
..........................................................................................

No comments:

Post a Comment