வகுப்பறையில் ஒரு மாணவன்: போடா முட்டாள்!
மற்றொரு மாணவன்: நானாடா முட்டாள், நீதாண்டா முட்டாள்.
ஆசிரியர்: என்ன சத்தம் அங்கே? நான் ஒருத்தன் இங்க இருக்கறதையே மறந்துட்டீங்களா?
......................................................................
ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
தெரியலையே?
நான் பார்க்க நான் பார்க்க நான்.
.............................................................
.லாண்டரியில் வேட்டி கடனுக்கு வாங்கவந்த ஒருவர் பக்கத்தில் நின்றிருந்தவருடைய வேட்டியைத் தவறுதலாக எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். இதை சற்றுத் தாமதமாகக் கவனித்த கடைக்காரர் எதிரில் போய்க்கொண்டிருந்தவரை நோக்கிச் "சார் சார், வேட்டி அவருது சார்" என்று உரக்கக்கத்தினார். போய்க்கொண்டிருந்தவர் தன் இடுப்பு வேட்டியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு ஓடியே போய்விட்டார்!
.......................................................................................
மேட்டூர் நீர்மேல இந்த பத்திரிகைக்காரங்களுக்கு அப்படி என்ன கோபம்?
ஏன்?
மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!
................................................................................................
நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டையாமே?
ஆமா ஆன்டி.....
முதல்ல என்கிட்டேயில்லை கேக்கணும்?
உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!
....................................................
ஏனுங்க லட்சத்துக்கு எத்தினி சைபரு?
அது தெரிஞ்சா நான் ஏன் கோடீஸ்வரனா இருக்கேன்?.
........................................................................................
டாக்டரோட வீட்டில முன்னாடி வேலைபார்த்தேன்னு சொல்றீங்களே? சர்டிபிகேட் ஏதுமிருக்கா?
அவரோட ஸ்டெதாஸ்கோப்பே இருக்கு சார்.
............................................................................
(புயல் மழையில் ஒருவன் பிட்ஸா வாங்கக் கடைக்குப் போகிறான்.)
கடைக்காரர்: சார் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?
வந்தவர்: பின்ன! இந்தப் புயல் மழையில எங்கம்மாவா என்னை பிட்ஸா வாங்க அனுப்புவாங்க?
............................................................
என்னதான் நீங்க சென்டிமென்ட் பார்த்தாலும், கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்கமுடியாது. சங்கு ஊதிட்டுதான் கிளம்பனும்.
.......................................................................................
எதுக்காகத் தைலடப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்.
.................................................................................
ஏங்க அடிக்கடி சமயல்கட்டு பக்கம் போறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கச்சொன்னார்.
......................................................
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன், ஆசீவாதம் பண்ணு பாட்டி!
பாத்து மெதுவா ஓடு, வேகமா ஒடிக் கையைக்கால ஒடிச்சுக்கப்போறே!
....................................
அப்பா: டேய் ஏண்டா இன்டர்வியூக்கு போகல?
மகன்: நீங்கதானப்பா நாலுபேர் கேள்வி கேட்கிறமாதிரி நடந்துக்கக் கூடாதுன்னு சொன்னீங்க?
.................................................................
பையன்: அப்பா நாம நாளயிலேர்ந்து பணக்காரராயிடலாம்!
எப்படிடா?
எங்க கணக்கு வாத்தியார் பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு நாளைக்கு சொல்லித்தரப்போறார்.
...........................................................................
டைம் இஸ் கோல்டுன்னா ஏன் நீ ஒத்துக்கமாட்டேங்கற?
அதை அடமானம் வெக்கமுடியாதே!
............................................................................
கண்ணுக்கு உகந்தது கார்ட்டூன், காதுக்கு உகந்தது கடிஜோக்ஸ்;
பல்லுக்கு உகந்ததா என்றால் பல்லைப் பொறுத்தது!
........................................................
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்கிலும் அப்பொருளின்
மெய்ப்பொருள் நெட்டில் தேடுவது அறிவு.
........................................................................
பழக்க தோஷத்திலே என்னுடைய சுயசரிதம் நூல்லே ஒரு வரி எழுதினதால விற்கவே இல்லை!
என்ன வரி?
இது என் சொந்தக்கற்பனைனு எழுதிட்டேன்.
..............................................................................
எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்துவிழுந்து படிக்கறே?
நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!
............................................................
எங்க ஆஃபீஸ்ல மேனேஜர் இருக்காருங்க, நாலு கிளார்க் இருக்காங்க.
எதுக்கு இதெல்லாம் எங்கிட்ட சொல்லறீங்க?
நீங்தானே யாராவது படிச்சிட்டு வேலையில்லாம இருந்தா சொல்லச்சொன்னீங்க!
........................................................................

No comments:
Post a Comment