Friday, August 10, 2012

கடி ஜோக்ஸ் -10




. டாக்டர், எங்கவீட்டு நாயால சரியா குரைக்க முடியலை...

ஃபீஸ் நூறு ரூபாய் ஆகும்.

கொஞ்சம் குறைங்க டாக்டர்...

நான் குறைச்சா அப்பறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே?

.........................................................
 கான்ஸ்டபிளா இருக்கிற எங்க சித்தப்பா இதுவரை நாற்பது திருடர்களைப் பிடிச்சிருக்காரு.

அப்படியா! உங்க சித்தப்பா பேரு?

அலிபாபா.
.........................................

 உங்க பேரு என்ன?

முனுசாமி.

குழந்தைங்க எத்தனை?

மூணு சாமி.
.....................................................

 நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?

யாரோ, "எங்கே தமிழ் ஆசிரியர் யாரு"ன்னு இவரக்கேட்டதுக்கு ’அடியேன்’ அப்படீன்னு சொல்லியிருக்காரு~
.....................................................

 அந்த முனிவர் எப்போ கண்ணை மூடிட்டுத் தவம் செய்தாலும் எதிரிலே ஒரு பாம்பு நிக்கும்!

ஏன்?

அவர் முகத்துலே ’தவக்களை’ தெரியுமே... அதனால்தான்.

.................................................


 அவன் அப்பா பெரிய வாழைப்பழ வியாபாரியா? அதான் பையன் அப்படியே அப்பனை உரிச்சு வெச்சிருக்கான்.


 பீச்ல சுண்டல் வித்து இன்னிக்கு எம்.எல்.ஏ. ஆயிட்டார்.

ஓ, சுண்டல்காரர் சுரண்டல்காரராய்ட்டார்னு சொல்லு.

.........................................................


 புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?

என்ன?

புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கறோம், கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கறோம்.

.................................................


 லோன் செக்ஷன்ல வேலை பார்க்கிறவரை மாத்திடுங சார்.

ஏன்?

ஏதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்.
.............................................................................

 தலைவர் அதிகமாக முற்போக்கை விரும்புகிறாரா, பிற்போக்கை விரும்புகிறாரா?

ரெண்டையும்விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்.
    .................................................................................
--  . "டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக்குடுங்க..."

"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தர முடியும். தலைவலி வேணும்னா போய் டீவி பாருங்க."
.........................................................................


 "என் பூட்டை உடைத்து அஞ்சுலட்சம் கொள்ளையடிச்சிட்டாங்கடா!"

"பூட்டுக்குள்ள எப்படிடா அஞ்சுலட்சம் வெச்சிருந்தே!"

...........................................................................
 ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்: "எங்கப்பா ரொம்ப பயந்தாங்குள்ளிடா?"

"ஏண்டா?"

"பின்ன என்னடா? ரோடைக் கிராஸ்பண்ணும்போது என் கையைப் பிடிச்சிக்கிறார்..."
....................................................................................


 கணவன்: பதினஞ்சு வருஷத்துக்கு முன் நீ எப்படி இருந்தயோ அதே மாதிரி இப்பவும் இருக்கே!"

மனைவி: இருக்காதா பின்ன? அந்தக் காலத்தில எடுத்துக்கொடுத்த அதே புடவைங்களத்தானே இப்பவும் கட்டிகிட்டிருக்கேன்!

..................................................................................
 "மச்சி, நாளக்கு சினிமாவுக்கு போறேன், வர்றியாடா?"

"முடிஞ்சா வரேன்."

"முடிஞ்சதும் ஏண்டா வரே? படம் ஆரம்பிக்கும்போதே வாடா!"
...........................................................................................................
 கண்கள் பேசினால் காதல்

கண்ணீர் பேசினால் நட்பு

பணம் பேசினால் சொந்தம்

எல்லோரும் பேசினால் உலகம்

நீமட்டும் பேசினால் ’லூஸு’.
........................................................


 ஒரு திருடன்: அந்த வக்கீல நம்ம கேச நடத்தவிடவேண்டாம்னு ஏன் சொல்ற?

அவன் சகா: வீட்டு வாசல்ல வாய்மையே வெல்லும்னு போர்டு போட்டிருக்காரே! பிறகு இவர் எதுக்கு?

..................................................................................
 அந்தாளு குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருக்கார்னு எப்படி சொல்றே?

என்னப் பார்த்து நீங்க ரெண்டுபேரும் டுவின்ஸான்னு கேக்கறார்.

.....................................................................

 மேனேஜர்: எங்க பேங்க்ல இண்டரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.

கஸ்டமர், எடக்காக: கொடுக்கறதக் கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல, ஏன் இண்டரஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
...........................................................................


 ஒருவர்: ஜாக்கிரதையா இல்லைனா வேற எவனாவது நம்ம செக்ல கையெழுத்து போட்டு பணத்தை எடுத்திருவான்.

மற்றவர்: வேற யாரும் கையெழுத்து போட்டுடக்கூடாதுன்னுதான் நானே எல்ல செக்லயும் கையெழுத்து போட்டு வெச்சுட்டேன், பணம் எடுக்க வசதியா!  .


.................................................................


 நீங்கதானே தமிழ்ச் செல்வன்? உங்க பேர்ல கணக்கு இருக்கா?

கணக்கு இல்லைங்க, தமிழ்தான் இருக்கு.
...................................................................

. கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொன்னாரு, அதான்...

நீங்க சாப்பிடறது கேரட் இல்ல, முள்ளங்கி.

............................................
 உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கிறானே சார்?

சீ.. சீ... அவன் பிடிக்கிறதுக்கு ரொம்பநாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

...........................................................
 ஏம்பா திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே?

சவுண்டை கம்மி பண்ண்லைங்க, நான்தான் முடிவெட்டும்போது தெரியாம் உங்க காதைக் கட்பண்ணிட்டேன்!

........................................................................


 வால்போஸ்டர் பாத்தீங்களா? கோவையில் முக்கிய நபர் கைதுன்னு போட்டிருக்கான்.

ஏன், சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?..



..................................................................................


 "தலைவரே, இப்ப நீங்க சொன்னது நூத்துக்குநூறு உண்மை!"

"சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவிதான் விட்டேன்!"

.............................................................................


 "பாயாசம்தான் ரெடியாயிருச்சே, அப்பறம் ஏன் பாயாசம் ஒரு தரம், பாயாசம் ரெண்டு தரம், பாயாசம் மூணு தரம்னு கத்தற?"

"பாயாசம் இறக்கின உடனே ஏலம் போடச் சொன்னாங்க..."

..................................................................................


 டாக்டர்: தினமும் குளூக்கோஸ் சாப்பிடுங்க.

நோயாளி: அது கிடைக்கலைனா முட்டைக்கோஸ் சாப்பிடலாமா?


.................................................
 நேத்து ஏன் டாக்டர் நீங்க ஆஸ்பத்திரிக்கு வரலை?"

"ஜுரம் அதான் வரலை."

"எனக்கும்தான் ஜுரம், நான் வரலியா?"

..............................................................................
 "நான்தான் உனக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்..."

"அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?" 

.............................................................................................................

No comments:

Post a Comment