Friday, April 13, 2012

அக்ஷய திரிதியை



-- அக்ஷய  திரிதியை  இந்த வருஷம்  ஏப்ரல் இருபத்தி நான்காம் தேதி வருகிறது. வருஷா வருஷம் சித்தரை அமாவாசை  கழிந்த மூன்றாம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வரும் .இன்று எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம் நேரம் ,காலம் , முகூர்த்தம் பார்க்கத் தேவை இல்லை.அக்ஷயம் என்றால் முடிவில்லாதது , வளர்ந்துகொண்டே போவது.

இநத நாளுக்கு அப்படி
என்னவிசேஷம்?

இன்று சூரியனும் சந்திரனும் நல்ல இடத்தில் இருக்கிறார்கள்.
இந்த வருஷம் செவ்வாய்க்கிழமையில் வருகிறது.
பரசுராமர் , ஆறாவது அவதாரம் , இன்று தான் ஜனித்தார்.
பலராமர் , எட்டாவது அவதாரம் இன்று தான் ஜனித்தார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு இன்று தான் கொடுத்தார்.
வியாச முனி இன்று தான் மகாபாரதத்தை எழுதத் துவங்கினார்.
  பகவான் விஷ்ணுவின் அவதாரங்களை இன்று மக்கள் எல்லோரும் வணங்குவார்கள்.
புனித கங்கை இன்று தான் பூலோகத்திற்கு வந்தாள்.
சுதாமா, கிருஷ்ணனிடம் இன்று தான் வரம் பெற்றான்.
திரேதாயுகம் இன்று தான் ஆரம்பித்தது.

இன்று  செய்யும் எல்லா நல்ல காரியங்களும் வளர்ந்து கொண்டும், தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்கள் தான, தருமங்கள் செய்யலாம். 

அன்ன தானம், வஸ்த்ரம்,பொருட்கள்  இல்லாதவர்களுக்கு தானம் செய்யணும் அதுவே  மிகச் சிறந்தது . 

மாறாக மக்கள் தங்களுக்காகவே பொன்னையும் பொருளையும் வாங்கிக் குவிக்கிறார்கள் தற்போது மக்கள் பொன்னைத்  தேடியே போகிறார்கள் , புண்ணியம் சேர்பதில்கவனம் இல்லை. போராதக் குறைக்கு, கடைகளிலும் குறைந்த விலைக்கு பொருள்களை அள்ளிக் குவிக்கிறார்கள் ஜனங்கள்  ஏன் போக மாட்டார்கள்?

1 comment:

  1. nice.. never knew that this day has such significance!!!!

    ReplyDelete