Monday, April 9, 2012

அலர்ஜி அலமேலு

அலர்ஜின்னாலே நிறையபேருக்கு 'அலர்ஜி' தான்.நம்ம அலமேலுவைப் போல. அப்டி என்ன அலர்ஜி அலமேலுக்குன்னு கேக்கறீங்களா?

இங்க வாங்க சொல்றேன் , காத்தாலை எழுந்ததுமே பெட் காபிதான் வேணும்.காபி குடிச்ச  பிறகு தான் பல் தேய்க்கணும் .பேப்பர்  வந்ததும் அதை கடைசி பேஜ்லேருந்து தான் படிக்கணும், முதல் பேஜைப் படிக்கக் கூடாது , மூடு கெட்டுடும்.

குளிக்க தண்ணீ சூடா இருக்கணும். தர்மாமீடரைப் போட்டு பார்க்கறா மாதிரி பொறங்கையை வச்சிப் பார்ப்பாள் , கொஞ்சம் இங்கிட்டு அங்கிட்டு சூடு கொறன்ஜோ, ஜாச்தியாவோ  இருந்தா ஒடம்புல தடிப்பு வந்துடும். 

மஞ்ச  தேச்சு குளிக்க மாட்டா, அது அலர்ஜி.

அடுத்தது, மொதல்ல இரங்கற டிகாக்சன்ல தான் காபி போடணும்,  பேகட் பால்ல தான் காபி.
காய் கறிகளுக்குத் தோல் சீவமுடியாது, அதனால அவள் தோல் உறிஞ்சிடும்.

அடுத்தது,தலையைப் பின்னி பூ வச்சுக்க முடியாது, தலையைக் காட்டேரி மாதிரி விரிச்சு லூசா விட்டாதான் அவ அழகா இருப்பா , நீள மூஞ்சியும் தெரியாதுன்னு  யாரோ ஒரு பயித்தியம் சொல்லித்தான், அதான். அப்ப எப்டி தலைல பூ வச்சுக்க முடியும்? அதுவும் ஒரு கொழந்தை வந்தப்பறம் கொழந்தை அதைச் சாப்பிட்டுடுமாம்.

நெத்தியில பொட்டும் கிடையாது, கொசுகடிச்சா மாதிரிதான் இப்பல்லாம் ஸ்டிக்கர்ஸ் வருதே, அது அப்பப்ப தெரியும், தெரியாது, சில சமயம் பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்தா தான் தெரியும். 
கல்யாணமாகி கொழந்தைப் பொறந்தப்பரம் கேட்கவே வேண்டாம். ஊர்ல கொசுவே இல்லாத மாதிரி நெத்தில அதுவும் கிடையாது.

வேகன்ட் நெத்தி!கொழந்தைப் பொட்டைத் தின்னுடுமா. காதுலத்   தோடுக் கிடையாது, கொழந்தை அதை பிடுங்கிடுமா.என்ன ஒரு கண்டு பிடிப்பு!

ஒசந்த வாஷிங் பௌடர் தான் துணிக்குப் போடணுமா , துணி ஊற வைக்கரப்போ கைல ஸ்கின் அலர்ஜி வந்துடறதான். பட்டுப் பொடவ ஜரிக ஒடம்புல உறுத்தறதான்அதனால பதினஞ்சு நிமிசத்துக்கு மேல பட்டு கட்டிக்க முடியாதான் அலமேலு வால. 

ஸ்கூட்டர், மொபெட்ல போனா, 'சன் டேன் 'வந்துடுமா, அதனால, காரு இல்ல ஆட்டோ ல தான் போவாளாம்.பஸ்சுல போட்டுக்கற ட்ரெசு கலஞ்சுடுமா. என்ன ஒரு சொயநலம்?


மாமியாரையும் மாமனாரையும் அப்பா, அம்மான்னு கூப்பிட முடியாதான், பெத்தவாளும் வாக்கப்பட்டவாளும் ஒன்னாயிடுமான்னு நம்மளையே திருப்பிக் கேட்கறா?
அதனால மாமின்னும் மாமான்னும் தான் கூபிடரா, ஏதோ ஒன்னு, பேரைச் சொல்லிக் கூப்பிடாதவரை சரின்னு .

மொதல்ல கழுத்துல மெல்லிசா ஒரு மயிரிழை "செய்னு"போட்டுன்ன்டு இருந்தா, இப்ப அதைக் கொழந்தப் பிடுங்கிடரதான் அதனால , வெறும் கழுத்துதான் . தனக்கா வேணும்னா  எல்லாம் சர்வாலங்கார பூஷிதையாக போட்டுப்போ.


இந்த மாதிரி எத்தனை அலர்ஜி அலமேலுவை நீங்கப் பார்திருப்பீர்கள்?



No comments:

Post a Comment