Sunday, April 8, 2012

என்னைக் கவர்ந்த இரு கதா பாத்திரங்கள் . சீதாவும் கர்ணனும்

  

புராணக் கதைகளில் எவ்வளவோ கதா பாத்திரங்கள் உண்டு, அவற்றை கூர்ந்து கவனித்தால் தெரியும் , சீதாவைப் போலவும் , கர்ணனைப் போலவும் கஷ்டப் பட்டவர்கள் எவருமே இல்லை. அவர்களுக்கு எல்லாம் இருந்தும் அவர்கள் சொர்க்கம் என்று சொல்லப் பட்டது அவர்களுடைய கஷ்டமான வாழ்க்கையே!

எல்லோரும் சீதையைப் போல இருக்கணும், ஏக பத்தினி ராமரைப்   போல கணவன் வேணும்னு வேண்டிக்கொள்வார்கள். ஆனால் அதிகம் பேர் தங்களுடையப் பெண்களுக்கு சீதா என்று பெயரிடுவதில்லை. ஏன் என்றால் அவள் ஒரு ராஜகுமாரியாக இருந்தாலும் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போனதே காரணம். கவலையும் கண்ணீருமே அவளுக்குக் கிடைத்தவை!

என்ன கூடவே கணவன் இருந்தான் என்று தான் சொல்லலாம். ராமருக்கு அவருடைய தம்பி இருந்தான் கூடவே, ஆனால்  சீதைக்கு ஒருவரும் கிடையாது.

சீதையைப் போல ஒரு துரதிஷ்ட சாலி யாருமே இல்லை.

அவளைப் போல ஒரு திட மனமும் எவருக்கும் கிடையாது, அவள் கணவன் ராமர் மேல் கொண்ட நம்பிக்கை, பக்தியே அவளை கொடூர  அரக்கன் ராவணனிடம் இருந்து காப்பாத்தியது  என்றும் சொல்லலாம். மனதளவில் ஒரு பலசாலி, மனதை சஞ்சலத்திற்கு உட்படுத்தவே இல்லை. 

இவனுக்கு அவள் ஒரு போகப் பொருளாகவேத் தெரிந்தாள், ஆனால் அவளோ அவளுடைய ஆன்மாவைப் பொக்கிஷம் போல பாது காத்து வந்தாள்.இராவணன் என்ன தான் போகத்தில் இருந்தாலும் சீதைக்கு நிறையவே நேரம் கொடுத்தான், அவள் அனுமதியன்று   அவளைத் தொடுவதாக இல்லை. அவளோ எந்த தீசத்தனதிற்கும்  அசைந்து கொடுப்பதாக இல்லை.

அவளுடைய நிலைமைக்கு அவளே காரணம் மேலும் , அவளே பொறுப்பையும் எடுத்துக்கொண்டு தனியாக மனதைப பறிகொடுக்காமல், ராமனையே நினைத்து வெற்றி கண்டாள். இது  பெண்களுக்கெல்லாம் ஒரு  பாடம், அவளன்றி, அவள் நினைத்தாலே ஒழிய அவளை  ஒருவரும், ஒன்றும் செய்ய முடியாது.

ஹனுமான் கூப்பிட்டப்  பொழுதே அவனுடன் போயிருக்கலாம், ஆனால்  அது திருமணமான ஒரு பெண்ணிற்கு, அவள் கணவனுக்கு , உத்தமப் புருசனுக்கு, அழகும் அல்ல, எனவே, ராமனே வந்து,ராவணனை   வதம் செய்து , நியாயமாக அவளை அழைத்துப் போவதே சரி என்று தோன்றியதால், அதையே ஹனுமனிடம் சொன்னாள். 

இவ்வளவு தூரம் கணவனின் மரியாதைக்காகப்   போராடிய அவள், தன்னை யாரோ ஒரு வண்ணான் சொன்னான் என்று தன்னை ஒதுக்கிய ராமனை, கணவனை மன்னித்தாலும் கூட , அவள் கடைசியில்  பூமாதேவியிடமே போயி  சேர்ந்தாள். 

கணவன் என்பவன் ஊராருக்காக மனைவியை  ஒதுக்குவது  என்பது சீதை காலத்திலே தான் ஆரம்பித்து இருக்கணும். தனியாக இரட்டைப் பிள்ளைகளை வளர்படும் எவ்வளவு கஷ்டம் என்று அன்றிலிருந்தே இருக்கு.
பெண்களுக்கே மானம் , அவமானம் எல்லாம், ஆண்களுக்கு ஒன்றுமே இல்லை, இந்த சமுதாயம் ஆண்களுக்கு  எதையுமே  கொடுக்க வில்லை.

 மனைவியை சந்தேகப் படுவது,டி என் எ  டெஸ்டெல்லாம் அந்தக் காலத்தில்  இருந்திருந்தால் ராமாயணக்  கதையே வேறு விதமாக இருந்திருக்கும்!


அடுத்ததாக , கர்ணன் . கர்ணன் கொடைக்கு பேர் போனவன், அவனைப் போல ஒரு கொடை வள்ளலும் இல்லை அவனுடைய இந்தக் கொடைகொடுக்கும் மனப் பான்மையே அவனுடைய முடிவுக்கு காரணமாக இருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எப்பொழுதுமே ஒரு போராட்டம் தான்.சங்கடங்களும், துர் அதிர்ஷ்டங்களும் அவனுடைய வாழ்வில் குறுக்கிட்டன, இருந்தாலும் மனம் தளராமல், திட புத்தியுடன் அவன் எதையும் எதிர் கொண்டு எதிர் நீச்சல் போட்டு வந்தான்.  

அவனுக்கு மூன்று காரணங்கள் முடிவில் இடையூறாக வரவே அவனால் வெற்றி அடைய முடியவில்லை.

பரசுராம முனியுடைய சாபம்,பிராமணனுடைய சாபம்,அவனுடைய தகப்பன் சூரிய பகவான் வந்து இந்திரன் மாறுவேடத்தில் வந்து அவனுடைய கவச்ச குண்டலங்களை தானமாகப் பெற்றுக்கொள்வான் என்று எச்சரித்தும் கர்ணன் அவற்றை தானமாகக் கொடுத்தான். 

தன்னுடைய விதி தனக்கு பாதகமகா இருக்கிறது என்று தெரிந்தும் கடைசி வரை நண்பன் துரியோதனனுக்காக போராடினான்.அவனுக்கு  வெறும் நண்பனாக இல்லாமல், ஒரு ஆலோசகனாகவும் இருந்தான்.

வீர போர்வீரனாக துரியோதனனுக்கு பக்க பலமாக இருந்து, நண்பன் தவறான பாதையில் போகும் போதேல்லாம் கண்டித்து, நேர் வழியிலேஎப் போராடுவேன் என்றும் , தவறான கள்ளமான, தந்திரமாகப் போராடுபவனுக்கு   இறுதியில் தோல்வியே மிஞ்சும் என்றும்  நண்பனுக்கு எடுத்துச் சொல்கிறான்.

அவனுடை தாய் அறியாமல்  செய்த தவறுக்கு இவன் பகடைக் காயாணான் .
இவன் செய்த தவறு தான் என்ன, ஒரு கன்னிப் பெண்ணிற்கு பிறந்தது தானே?

அதற்காகப் படாதப் பாடு இல்லை, கேட்காதச் சொல் இல்லை, பட்ட கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் எல்லையே இல்லை. பெற்றவர்கள் "அம்போ" என்று விட்டு விட்டால் இவனுக்கு நேர்ந்த கதி தான் என்று அப்போதே தெரிந்து விட்டது.
எனினும், தனக்கு சமூதாயத்தில் ஒரு அந்தஸ்து கொடுத்த ஒரே காரணத்திற்காக கெட்டவன் என்று தெரிந்தும் நண்பன் துரியோதனனுக்காகப் போராடி, தனக்கு என்று ஒரு தனி இடமே கண்டான் மகாபாரதத்தில்! 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

-- கர்ணனைப் பற்றி மெயிலில் வந்தவைகள் உங்கள் பார்வைக்கு 


கர்ணன் மற்றொரு பார்வை :

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.
_

கர்ணனின் கொடை - கர்ணன் என் காதலன்

இன்று ஏனோ கர்ணன் சிவாஜி படத்தின் நினவு வந்தது.

கர்ணனிடம் தானம் பெற ஒரு முதியவர் வந்திருந்தார்... அவரைப் பற்றி இப்போது...

கர்ணன் ஆதவனை வணங்கி வெளி வருகையிலே... ஆதவனின் அசரீரி ஒலிக்கிறது. “கர்ணா உன்னிடம் தானம் பெற வந்திருப்பவன் இந்திரன்... உனது கவச குண்டலங்களை... உன்னிடம் பெற வந்திருக்கிறான். அவை உன்னிடம் உள்ள வரை உன்னை வெல்ல ஒருவரும் இல்லை உலகிலே...” என எச்சரிக்கை செய்தார்...

கர்ணன் : வர வேண்டும் முதியவரே.... வணக்கம்... தாமதத்திற்கு மன்னிக்கவும்...

முதியவர் : வணக்கம் மகாராஜா

கர்ணன் : (அவர் கரம் பிடித்து ஆசனத்தில் அமர வைத்து... அவரை நோக்கி) நான் என்ன செய்ய வேண்டு தங்களுக்கு என கேட்கிறான்

முதியவர் :

என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே....
இன்னும் கொடுப்பான்
பொன்னும் கொடுப்பான்...
பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால்...
... இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்..
எங்கள் கர்ணன்.. தன்னைக் கொடுப்பான்...
தன் உயிரும் தான் கொடுப்பான்....
தயாநிதியே....

(கர்ணன் திரைப்படத்தில் நான் கேட்ட வரிகள்... சொந்தமாய் எழுதலாம் என்று முயற்சித்தேன்... இந்த வரிகள் என் இதயத்தின் இமயம் தொட்ட அளவு என் வரிகள் தொடவில்லை.. எனவே அதே வரிகள்...கூடவே அதை ஒட்டிய உரையாடலும்..)

கர்ணன் : தள்ளாத வயது.. பாவம்....

முதியவர் : மன்னா, வாழ எனக்கு சகல வசதிகளும் உண்டு... ஆனாலும் எனக்கு ஒரு ஆசை... என்னிடம் இல்லாதது... உம்மிடம் உள்ளது அது.. அதை நான் உங்களிடம் இருந்து பெற்றால்... தந்த உமக்கும், பெற்ற எனக்கும், உவகை தருமே எனும் பேராசை...

கர்ணன் : தன் மந்தகாச சிரிப்புடன்... பேராசைதானே கேளுங்கள்....

முதியவர் : எதையும் மறுக்காது கொடுக்கும் தாங்கள், நான் கேட்கும் இதையும் தருவீர்கள் என நம்பி வந்தேன்...

கர்ணன் : பெறவே வந்தீர்கள்... தரவே இருக்கிறேன்.. இன்னும் என்ன தயக்கம்... தயங்காது கேளுங்கள்...

முதியவர் : தங்கள் உடலோடு ஒட்டிய கவசமும், செவியோடு ஒட்டிய குண்டலமும் எனக்கு வேண்டும்.... அளிக்க முடியுமா உம்மால்???

கர்ணன் : மந்தகாசம்... விரிந்து சிரிப்பாய் வெடிக்கிறது..

முதியவர் : மன்னா இந்தச் சிரிப்பு....

கர்ணன் : ஏன் ஏமாற்றம் தரத் தக்கதாய் இருக்கிறதா???

முதியவர் : ம்ம்ம்ம்

கர்ணன் : தள்ளாடும் தேகம், தள்ளாடாத நோக்கம்... பொய்யான நடிப்பு... அதில் அடங்கி இருப்பது மெய்யான பிடிப்பு... (இதை விடவா நான் என் வரிகளில் எழுதிடுவேன்...)

முதியவர் : நடிப்பா.... என்ன கூறுகிறீர்??? நான் கொண்டது வேஷமா????

கர்ணன் : ம்ம்ம்.... என்னிடம் வர வேஷம் வேண்டியதில்லை... இருந்தும்.. ஈடுபட்ட செயலின் தன்மை அப்படி பொய் உடம்பை போர்த்தி வரத் தூண்டியுள்ளது...

முதியவர் : கர்ணா .......

கர்ணன் : தேவேந்திரன்... விண்ணுலக அதிபதி....

(அவமானத்தில் கன்றி சிவந்த முகத்துடன் தேவேந்திரன் தன் உருவம் பெறுகிறான்....)

கர்ணன் : பணிவுடன் விழுந்து வணங்குகிறான்... தேவேந்திரா இது என்ன சோதனை... இல்லை என்ற சொல்லையே அறியாத இந்த மனிதனிடம் தெய்வம் தோன்றினால் போதுமே... உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டேனே... கேவலம்... இந்த உடலைப் பிடித்திருக்கும் சிறு உறையையா கொடுக்க மறுத்து விடுவேன்... இதோ ஒரு நொடியில் வருகிறேன்...

(உள்ளே சென்று உயிர் வலிக்க, மெய் வலிக்க... பிறப்பு முதல்... இதுநாள் வரை தானோடு இருந்த, செவியோடு ஒட்டிய குண்டலங்களையும், உடலோடு ஒட்டிய கவசத்தையும், அறுத்தெடுத்து, அங்கம் தனில் குருதி ஒழுக, அந்த கவசத்தையும், குண்டலங்களையும், ஒரு தங்கத் தட்டில் வைத்து பணிவுடன் இந்திரனிடம் நீட்டுகிறான்)

(கர்ணனின் வலியையும், வேதனையும் கண்டு உள்ளம் கலங்குகிறான் இந்திரன்.... )

இந்திரன் : (உணர்ச்சிகளின் பிடியில் இருந்த இந்திரன்) கர்ணா .... நீ தெய்வத்திலும் சிறந்தவன்... உடலைச் சேவித்துக் கொடுத்து, கொடைக்கு சிகரம் கண்ட உத்தமன் நீ ... உன் உடலோடு பிறந்தவைகளை நீ இழந்ததால்... ஏற்பட்ட ஈனம் மறைந்து... அழகு உருவை நீ அடைவாய்... என வாழ்த்துகிறான்...

கர்ணனுக்கு... தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து... அறுந்துபோன காதும் முழுமை அடைந்தது...

தன் உடலோடு ஒட்டியதை இழந்தால்... தன் உயிரே போய் விடும் என்பதை நன்கு அறிந்தும் அதை... தன் உடலில் இருந்து அரிந்தும் தந்தவன்... உள்ளத்தால் எத்தனை உயர்ந்தவனாய் இருந்திருக்க வேண்டும்...

உளம் வேண்டுமா??? என் நாட்டின்
வளம் வேண்டுமா??? என் உயிர்
வேண்டுமா??? என என்ன எண்ணமடா
உனக்கு??

உயிர் போகும் நிலை வரினும்
பயிரான உன் கொடையின் தீரம்
கண்டதில் என் விழியில் ஈரம்

பலநாள் நீ நின்றிருந்தாய்
என் நெஞ்சத்தின் ஓரம்...

இன்றோ என் மனக் கடலின்
நீ இட்டது நங் கூரம்....

கர்ணனோடு என் காதல் இன்னும் வளரும்.....

கர்ணனோடு துரியோதன் நட்பு நாம் அனைவரும் அறிந்ததே... ஆனாலும் துரியோதனனுக்கு கர்ணன் கொடையில் சிறந்தவன் எனப் பெரும் புகழும் பெற்றதில் கொஞ்சம் பொறாமை இருந்ததாக ஒரு நிகழ்வை நான் படித்ததுண்டு...

No comments:

Post a Comment