Saturday, February 18, 2012

இப்டியும் செல பிறவிக இருக்கத் தான் செய்றாங்க !




சாப்பாடைப் பற்றி பார்த்தோம்,காய் கறிகள் எப்படி வாங்குவது என்றும் பார்த்தோம்.இப்ப எப்டில்லாம் ஜனங்க ரசிச்சு, ருசிச்சு சாப்டராங்கன்னு பார்ப்போமா?


ஏழாம்னம்பர் ஏழுமலைக்கு எது ஒண்ணா  இருந்தாலும் ,தனி தனியா இருக்கோணும்,அதனால, சாதம் ஒரு பக்கம் போட்டு, அதுக்குப் பக்கத்தில சாம்பாரை விடணும், எல்லாரையும் போல, சாம்பாரை சோறு மேல வுட்டா பிடிக்காது!


அதே அவன் தம்பி தங்கதொரைக்கு சாதத்தை மல மாதிரிக் கட்டி , அதுல சாம்பாரை திருவண்ணாமல தீபம்  மாதிரி குழி பண்ணி அதுல சாம்பாரை விடணும்!


நம்ப சைதாபேட்டை சண்முகம் இருக்கானே, அவன் சாப்ட்டா , அவன் கூட ஒரு பய சாப்பிட முடியாது , அப்டி உறிஞ்சி  உறிஞ்சி  சாப்டரதப் பாத்தா, எங்க நம்ம இலைய்லேந்தும் உறிஞ்சிடுவானோனு பயமா இருக்கும்!


இதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு, பண்ணிடுவான் பல்லாவரம் பொன்னுசாமி.அவன் சாப்டறத வெறும கேட்டா ,ஏதோ மிருகம் சாப்டரதாக்கம்னு நினைச்சுப் போம் ஆனா , விசயமே வேற,அவன் சாப்டும் போது  அப்டி ஒரு சத்தம் போட்டு சாப்டுவான் .'அச்சக்கு, பச்சக்கு ,ன்னு.


 அவன் வீட்டு வேலைக்காரி, பொஞ்சாதி எல்லாருமே ,' ஏன் தான் இப்டி நாய், மாடு சாப்டரா மாதிரி சத்தம் போட்டு சாப்டுரீகன்னு" .

அதுக்கு அவன்ஜஜோல்லுவான்  , உங்களுக்கு இஷ்டமிருந்தா , இங்க இருங்க , இல்லாட்டி எழுந்திரிச்சு போங்க, என்னால இப்டிதான் சாப்ட முடியும் , உங்களுக்கு சத்தம் வேணாம்னா, காதுல பஞ்ச வச்சுக்கோங்க " அவனப் பொறுத்த வரைக்கும் சத்தம் போடமச் சாப்ட்டா அது திருட்டுத் தனமாச் சாப்டரா மாதிரியாம்!


அடுத்த வீட்டு அண்ணாமலை சாப்ட்டா , தட்டைச்சுத்தி , பஞ்சாங்கத்துலே போடுவாங்களே, "இன்று சந்த்ரனைசுத்திவட்டமிட்டால் மழைப் பெய்யும்" அந்த மாதிரி சுத்தூரம் சாதம் முருங்கக்காய் , கருவேப்பிலை கொத்தமல்லின்னுஎல்லாம் கெடக்கும். 

 வெட்டிப் பேச்சு வீணாவோஅவ சாப்டரதோட   இல்லாமல் , அடுத்த இலைக்கும் தன்னோட எச்சையை போடுவா, அப்டி வீசி, வீசி  தான் சாப்டுவோ.
 .

பாப் கட்டு பிரமிளா , சாப்டப் போனா, இன்னிக்கெல்லாம் பாத்துண்டே இருக்கலாம், 'காணக் கண் கோடி வேண்டும்'னு சொல்வாகளே, அப்டி தான்.  அவ என்னவா பொறந்தாலோ  போன ஜன்மத்துல, கையில சாதத்தை எடுத்து ஒரு உருட்டு உருட்டி,அப்டியே இலைலேந்து தூக்கி போடுவோ அது டைரக்டா அவ வாயில போயி விழும். அது என்னதான் அன்டர்ஸ்ச்ட்டேன்டிங்கோ  அவக் கைக்கும் வாய்க்கும்!


ஸ்டைலு சப்னா அவ எங்கேயாவது சாப்பாடு அவ விரலை தொட்டா தேஞ்சிடுமோ என்ற பயத்தாலை விரலுக்கும் சாப்பாடுக்கும் பரம்பரப் பக மாதிரி ஒன்னோட ஒன்னு ஒட்டாம இருக்கும், அது எப்டி தான் அவ ஒடம்புல ஒட்டுதோ   தெரியல!

பறக்கை பீதாம்பரமோ பஞ்சத்துல அடிபட்டவனை விட பறப்பான், அவனோட அஞ்சு விரலுக்கும் வாயிருந்தா, அதுங்க எவ்ளோவோ அழுது இருக்கும்!  அப்டி போட்டு ஒவ்வொன்னா வாய்குள்ளப் போட்டு போட்டு எடுப்பான், அவ்ளோ ரசிச்சு சாப்டுவான். அதுக் கூட சத்தம் வேற போடுவான்.

மாடி வீட்டு மைதிலியோ சும்மா சொல்லக் கூடாது ,  அவ சாப்ட்டாளா இல்லயான்னே கண்டு பிடிக்க முடியாது.அவ்ளோ நல்லா நக்கி நக்கி சாப்ட்டு எவர்சில்வர் தட்டை வெள்ளித் தட்டா மாத்திடுவோ. , தட்டை அலம்பாமலே அலமாரில அடுக்கிடலாம். ஏன் நக்கறேன்னு கேட்டா, நக்கினா   எனக்கு நேஷனல் ஆன்தம் பாடினா மாதிரிம்பா .அதோட ருசி எதுலயும் வராதும்ம்பா.

ஏகம்பரமோ ஏப்பம் விட்டுண்டே தான் சாப்பிடுவான், அவனோட பேரப் பசங்க எவனும் பக்கதுலப் போவ மாட்டானுக. 

ஒரு சில ஜனங்க அப்பளம், முறுக்குன்னு எல்லா நொறுக்குத் தின்னிகளையும் ட்ரைன்ல போறாமாதிரி வாயத் தொறந்து நறுக் முறுக்னு சாப்டுவாணுக. உள்ள ஒரு பாக்டரியே இருக்கும்.சில சமயம் ரோடுப் போடராங்கலோன்னு கூடத் தோணும்!

ஸ்பூனை உபயோகிக்கரவங்களோ  அதுக்கும் தட்டுக்கும் என்னவோ விஜய்,  அஜித் ரசிகர்கள் சண்டப் போடராங்களோன்னு நினைக்கத் தோணும் அவ்ளோ சத்தம் போடுவாளுக.



செல பேரு வாயிலேந்து  எடுத்து  தட்டுல  போடுவானுக, செலபேரு தட்டுலே   துப்புவாணுக.அதுக்கும் மேல செலர் எங்க வேணுமானாலும் துப்புவாணுக. கூட சாப்ட்ரவங்களுக்கோ, பரிமாரவங்களுக்கோ எப்டி இருக்கும்னே கவலைக் கிடையாது.

இந்த மாதிரி பல நிறப் பிறவிகள் இருக்கத்தான் செய்றாங்க ஓய் !!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment