Thursday, January 12, 2012

ஏழையின் வயிற்றில் இறைவன்!




 அன்னம்மா  பாவம்  என்ன  செய்வாள் ? அவளுடைய  நிலைமை  இப்போ  இரு   தலைக்  கொள்ளியா  எறும்பா ஆச்சு .
அவளோட  அப்பா  ஒரு  குடிகாரன் . அம்மா  வீட்டு  வேலை  செஞ்சு  வர  பணத்துலே , இவளையும்  இவள்  நொண்டி  தம்பியையும்  காப்பாத்தணும் . 

அப்பத்  தான்  எதிர்  வீட்டு  ஏகாம்பரம்  ஒரு  இடம்  கொண்டு  வந்தான் .

ஒரு  பணக்கார  குடும்பத்தில்  வயதான  தம்பதிகளின்   வாரிசு  சம்பத் . 
 இருந்தும்  அவன்  கல்யாணம்  ஆகி  எட்டு  வருஷம்  ஆனப்  பிறகும்  குழந்தை  இல்லாதால்,  அவன்  மனைவி  ரோஹிணியை  விவாகரத்து  செய்து  விட்டதாகவும் , இப்ப  வாரிசுக்காக  ஒரு  ஏழைப்  பெண்ணாகப்  பார்த்து  கல்யாணம்  பண்ணினால்  வாரிசு  பொறக்கும். குடும்பத்தில்  இருக்கும்  சாபமும்  விலகும்னு  ஒரு  ஜோசியர்  சொன்னதின்  பேரில்  அன்னம்மா , அவர்கள்  வீட்டிற்கு  மருமகளாகப்  போனதோடு   இல்லாமல் , இரண்டே  மாசத்தில்  'உண்டாகியும்'  ஆனாள் . குடும்ப   சந்தோசத்திற்குக்    கேட்கவா  வேண்டும் ?

ஆன்னா, பிரச்சனை யாரை விட்டது?  


குழந்தை தேஜஸ் பிறந்து இருபதே நாள்லே சம்பத்தோட முதல் மனைவி தலைக் காட்டினாள். அது வரை அவ யாரு எப்படி இருப்பான்னு அன்னம்மாவிற்குத் தெரியவே தெரியாது .மொதல்ல யாரோ குடும்பத்திற்கு வேண்டியவள்னு  நினைச்ச அன்னம்மாவிற்கு  ஒரே வாரத்தில் வந்த புதிர் பெண் ரோஹிணிதான்னு சம்பத்தும், அவன் அம்மா, அப்பாவும் பழகுற விதத்திலிருந்தே தெரிஞ்சு போச்சு.

இருந்தாலும் மனசைத்தைரியப் படுத்திண்டு பிறந்த தேஜசுடன் சந்தோசமாக இருக்கப் பார்த்தாள்.  

முப்பதாவது  நாள் குழந்தைக்கு குளிப் பாட்டி புத்தாடை அணிவித்து அக்கம் பக்கம் இருப்பவர்களைக் கூப்பிட்டு விருந்து கொடுக்கும் வரை அன்னம்மாதான் தேஜசின் அம்மா. 

வந்த விருந்தினர்கள் போனதும் தான் தாமதம், அன்னம்மாவை அழைத்து , அவள் துணி மணிகளை பெட்டியில் எடுத்து வரச் சொன்னார்கள் . அவளும் பரவாயில்லை குழந்தையுடன் பிறந்த வீட்டிற்குத் தான் போகச் சொல்கிறார்கள் என சந்தோஷமாக எடுத்து வைத்தாள்.பெட்டியை மூடியும் விட்டாள். மாமியார், மாமனார் கணவன் குரல் கேட்கிரதேன்னு  திரும்பிப் பார்த்தாள். 

அப்பொழுது தான் தேஜஸ் அந்த சண்டாளி ரோஹினியின் கையில் இருப்பதைப் பார்த்தாள். அவள் வயிற்றில் சொல்லொணாத சங்கடம் . ஏதோ தப்பு நடக்கப் போவது என்று அவள் உள் மனசு சொல்லியது.

மாமியார் , அன்னம்மாவைப் பார்த்து,' உன் ஒட்டு மொத்த துணி மணிகளை எடுத்து வைத்துக் கொள், இங்கே ஒன்றும் உன் நினைவாக இருக்கக் கூடாது , இனிமேல் உன் தயவு எங்களுக்குத் தேவை இல்லை , நீ கிளம்பிப் போயிக் கொண்டே இரு 'என்று கடு கடுத்த முகத்துடன் சொன்னாள். மாமனார் பார்த்திபனோ இதுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்கிற மாதிரி விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி, போகட்டும். சம்பத்தாவது தனக்கு சப்போர்ட் பண்ணுவான் என்றுப் பார்த்தாள், அவன் இன்று பொறந்த பயன் போல்  அம்மாவின் பின்னாடி ஒளிந்துக் கொண்டு முகத்தை மட்டும் காண்பித்து, 'நான் என் செய்வது, அம்மா வாக்கு வேத வாக்கு என்று ஒரு லுக்கு விட்டுக் கொண்டிருந்தான். 

ரோஹினியோ தனக்கு ஒரு குழந்தை கிடைத்து விட்டது, வேறென்ன வேண்டும்? அவளுடைய் அப்பாவின் ஐம்பது ஐந்து ஏக்கரா நிலமும் ஐந்து பங்களாவும் இருக்கும் வரை ஒரு குறையும் தனக்கு இல்லை என்று இரு மாப்பில் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

அன்னம்மா எவ்வளவோ சொல்லி கதறி, அழுதும் பார்த்தாள். ஒன்றுக்கும் மசிய வில்லை ஒருவரும். தன்னை ஏமாற்றி விட்டதாக சொன்னப் போது தான் எதிர்த்த வீட்டு ஏகாம்பரம்  முழு விசயத்தையும் சொல்லாமல் மூடி மறைத்து கமிசன் வாங்கிண்டு ஊரை விட்டே போனதின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது.

விஷயம் இது தான், சம்பந்தம் பேசும் போதே கல்யாணம் ஒரு கண் துடைப்பு என்றும் ஒரு வாரிசு வந்ததும்  , கழட்டி விடுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள் , ஆனால், அவன் விஷயம் அறிந்தும் ,மூடி மறைத்ததோடல்லாமல் , அன்னம்மாவின் வாழ்க்கையையும் சீரடித்து விட்டான்.  

இது அனைத்தும்  தெரிய வந்ததும் ஒரு முடிவுக்கு வந்தவளாக , அவர்கள் சொன்ன மாதிரியே துணி மணிகளுடன் வெளியே வந்தாள். திரும்ப  தன வீட்டிற்குப் போனால் அம்மா மானக் கேட்டால் உயிரையே  விட்டு விடுவாள் . பிறகு குடிகார அப்பா, நொண்டி தம்பியின் வாழ்க்கை என்னாவது ?

நாலு எழுத்துப் படித்து இருந்தால் இதற்கு ஒரு வழி கண்டுப் பிடித்து இருக்கலாம் அல்லது அங்கேயே இருந்து ஒரு வழிப் பண்ணி இருக்கலாம். 

இரண்டுக்குமே வழி தெரியாதால் , இருக்கவே இருக்கு ஒரு வழி என்றுமுடிவுடன்  பாழுங் கிணறைத் தேடி பயணம் போனாள். 

போய்க் கொண்டும் இருக்கிறாள்,உங்களில் யாராவது அவளைப் பார்த்தாள் , ப்ளீஸ் , அவளுக்கு மன தைரியம் கொடுத்து உதவிக் கரம் நீட்டுங்களேன் !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

பி.கு 
வாடகைத் தாயை  விட இந்த மாதிரி சில நாள் வாடகை வயிறு எவ்வளவோ ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் வயிற்றை நிரப்பும் , ஆனால் மனசை நிரப்புமா? 

ஏகாம்பரம் போல சில மாரேஜ் ப்ரோக்கர்கள் இருக்கும் வரை முழுப் பூசனிக்காயை சோற்றிலும் வயிற்றிலும் மறைப் பதில் வல்லுனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . யாருடையத் தவறு? 

ஏழைகளுக்கு நாளை கிடைக்கும் நெல்லிக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காயே நெல்லிக் காய்க்கு சமம்னு இருக்கும் வரைதான். 

3 comments:

  1. Shambavi Chandru

    7:37 AM (3 hours ago)

    to me
    மனித நேயம் என்பது இல்லாதவரை இந்த 'use அண்ட் throw கலாசாரம் (!) தலை விரித்து ஆடத்தான் செய்யும்.

    ReplyDelete
  2. prana

    ஏழையின் வயிற்றில் இறைவன்!

    நல்ல கருத்துள்ள கதை மாதங்கி மேம்..
    சமூகத்தின் பல அவலங்களுள் ஒரு பெரிய அவலம் இது..
    மனசாட்சியை விற்றுப் பிழைக்கும் பிழைப்பை என்னவென்று சொல்வது..பெண்ணை குழந்தையை சுமக்கும் ஒரு கருவியாகவும்,வீட்டு வேலைகள் மட்டுமே செய்யும் எந்திரமாகவும் பார்க்கும் மனோபாவம் இன்னும் பல இடங்களில் அகலவே இல்லை என்பது கொடுமையான விஷயம்...

    ReplyDelete
  3. ramyasuresh
    ayyo pavam annamma

    ipadi makkal appavigalai yen than cheat panrangalao
    .......................
    suganyarangasam




    indha madhiri silar appavi ponna emathradhu romba kodumaiyana visayam.....
    annamma romba paavam....
    oru ponnoda varumai ah yaarume ivlo cheap ah use panna koodathu

    ReplyDelete