Monday, January 2, 2012

கல்யாணி ,என் கண்ணே, நீ எங்கே தொலைந்தாய்?



கல்யாணி என்  கண்ணே, நீ எங்கே தொலைந்தாய்? 

நான் பாட்டுன்னு கத்துக் கொள்ளாட்டாலும் ஓரளவு பாடதெரிஞ்சி வச்சிருக்கேன். கும்பல்ல கோவிந்தா போடாம தனியாவும்  பாடத் தெரியும்.நாள் கிழமையில ஏதோ கொஞ்சம் டீசண்டா  பாடுவேன். ஆன்னா விதி யாரை விட்டது?

நானு வீணைக் கத்துண்டு இருக்கப்போ திடீர்னுபொண்ணு பாக்க நாள் குறிச்சுட்டா? அப்படியே அந்த நாளும் வந்து விட்டது!
என் கணவர், அவர் அம்மா, அப்பா, மன்னி, 3   நாத்தனார்கள்  , ஒரு பெண் ,என ஒரு பட்டாளமே வந்தாச்சு .

 என் வீட்டில் பாட்டி, அப்பா, அம்மா ,பெரியப்பா, 2  தங்கைகள், 3  தம்பிகள் 2  கசின்கள், மாடு, கன்னுக்குட்டி ! அண்ணன் பாதியில் தான் ஆபிசிலிருந்து   வந்தான்.

  என் அம்மாவின் மாமா பெண் தான் என் ஒர்படியானாள்.  நான் எவ்வளவோ முன்  ஜாக்கிரதையாக அவளிடம் சொல்லியும் என்னை வாய்ப் பாட்டு பாடச் சொல்லிவிட்டாள். பாக்கு வெட்டியில் மாட்டிக்கொண்ட மாதிரி ஆச்சு .

முன்னாடியே டிசைட்பண்ணாததால் , போனால் போகிறதுன்னு கல்யாணி ராகத்தில் அமைந்த, வாசு தேவஎனி, தியாகராஜா கீர்த்தனை பாட ஆரம்பித்தேன். 

திடீர்னு பாட சொன்னதால், பல்லவி ,அனுபல்லவிதான் முழுசாப் பாடியிருப்பேன் , சரணம் வந்ததும் மறந்து போச்சு, பயத்திலையா, இல்லை மறந்தே போயிட்டனான்னு இன்னி வரைக்கும் தெரியாது. உடனே என் தங்கை சுதா , "சொல்லத்தான் நினைக்கிறேன்' ல வர மாதிரி சரணம் எடுத்துக் கொடுத்தாளோ பொழைச்சேன் , இல்லன்ன மானம் கப்பலேறி ஐஎன் எஸ்  விக்ராந்த்ல வங்காள விரிகுடா கடல்ல போயே போயிட்டு இருக்கும் !

இது இப்படி இருக்க அப்பப்ப என் வூட்டுக்காரர் பண்ற கேலி இருக்கே, எப்பல்லாம் இந்தப் பாட்டு கேக்கராரோ அப்பல்லாம் ஒரே கேலிப் பேச்சு  தான்!
வீணை வாசிக்கச் சொல்லிருந்தால் நல்லாவே வாசிச்சு இருப்பேன் , மூணு மாசமே ஆனாலும் தினமும் வீட்டில் ப்ராக்டிஸ் பண்ணி இருந்தேன் .

 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


பொண்ணு பாக்ரதுன்னு வந்ததும்  தான் நினைவுக்கு வருகிறது   , எங்கள் வீட்டில் அடுத்தடுத்து நிறைய பெண்கள் மேக்சிமம் ஒன்னரை அல்லது 2 வயசு வித்யாசம் தான்  இருக்கும் கசின்ச்குள்ள . மொதல்ல என் அக்கா தான் டார்கெட் . எப்பல்லாம் பொண் பாக்க வருகிறார்களோ, அப்பல்லாம் சேர், டேபிள் , டம்ளர் டபரா அடுத்த வீட்டிலிருந்து கடன் வாங்கப் படும் . அந்தக் காலத்திலெல்லாம் இப்ப இருக்கா மாதிரி செட்டா மேஜை நாற்காலிகள் கிடையாது , பெண்கள் எல்லாம் ஒரு ரூமில் பாயை விரித்து உட்காருவார்கள் , ஆண்கள் எல்லாம் ஹாலில் அமர்ந்து பேசுவார்கள் . இப்ப எல்லாரும் ஒன்றாக உட்காருவதுடன் கூட, பெண் , பையனைத்  தனியே பேசவும் அனுமதிக்கிறார்கள் 

அம்மா, பெரிம்மா  கேர் ஆப் கிச்சன் , அப்பா ,பெரிப்பா ஹாலில் பர்னிச்சர் அரேஞ்ச்மென்ட் , யார் யார் எங்கே உட்காரணும் எப்ப எழுந்திருக்கணும், யார் என்ன கொண்டு வரணும் ..இத்யாதி வகையறா...... .பாட்டி " த ..சுப்ரீம் கமாண்டர் " சூபர்வைசர் .......அவளன்றி எந்தப் பிள்ளைகளும்  அசைய மாட்டார்கள். 

நாங்கள் லூசுப் பொண்ணுங்க ,எடுபிடி இல்லாமல் பையன்& பார்ட்டி வந்ததும் "வேனிஷிங் க்ரீம்" போட்டாமாதிரி கண் காணாமல் போயிடணும் .அது இரவோ பகலோ !  

எங்களுக்கோ கோபமா வரும் , எல்லா வேலையும் செய்யணும் ,ஆனால் பையனையோ அவனுடன் வருகிறவர்களையோ பார்க்கக் கூடாது , இது எப்டி இருக்கு? நாங்க சும்மா விடுவோமா? அங்கங்க கொஞ்சம் ஜன்னல்ல இடைவெளி இருக்கா மாதிரி வச்சிட்டு ஒத்தர் மாத்தி ஒத்தர் ஒழிஞ்சி ஜன்னலிடுககில பல்லை இளிச்சுண்டு கண்ணச் சுருக்கிண்டுப் பார்ப்போம்."லக்' இருந்தா எல்லாரையும் பார்ப் போம் , என்ன குறுக்க, நடுக்க அம்மா, அப்பா , பாட்டின்னு போயிண்டும் வந்திண்டும்  இருப்பா.  இது எல்லாம் போறாதுன்னு வயத்தெரிச்சல் கொட்டறாமதிரி அப்பத்தான் ரொம்பத் தண்ணீ தாகம் எடுக்கராமாதிரி  (மத்த நாள்லே தண்ணி குடிச்சோமான்னே தெரியாது)   போயி ஜன்னல்ண்டே இருந்து யார் வரான்னு பாத்து தண்ணி கேட்போம்.அவாளும் திட்டிண்டே கொண்டு வந்து கொடுப்பா , இல்லன்னா அவாளுக்கும் தெரியும் என்ன நடக்கும்னு. எங்கயாவது நாங்க திடீர்னு எல்லார் முன்னாலேயும் வந்துட்டா?

நாங்க ஒன்னும் ரொம்ப அழகும்ன்னு சொல்ல முடியாது , அழகில்லைன்னும் சொல்லிக்க முடியாது. இருக்கிற இரண்டு பாமலியிலே ஒவொரு பொண்ணு கல்யாணத்துக்கு ரெடி , அப்டி இருக்கப்போ  வயசுல பெரியவ  இருக்கப் போ, பையன் வீட்டுக்காரா சின்னவளைப் பாத்துட்டா?  அதனாலத்தான் இந்தக் கண்ணாமூச்சி நாடகம் !

சரி ஒரு வழியா அவா தலை மறையர வரையும் தான் நாங்கள் ரோடில், உடனே 'காணாதவன் கம்பங் கொல்லையிலே நுழைந்த மாதிரி' , கிச்சன்லப் போயி பஜ்ஜி சொஜ்ஜிக்கு பறப்போம். அங்கப் பாத்தா ஆளுக்கு ஒரு பஜ்ஜி கூடக் காணாது, சரி போறது, சொஜ்ஜியாவது இருக்கான்னு பாத்தா அது தொட்டு நக்கக் கூட  வராது . எப்டி இருக்கும்? 

யாரு பொண்ணோ அவ தப்பிச்சா ! நாங்க பையன் வீட்டுக்காரா சாப்பிட்ட தட்டு, டம்ளர் வகையறாவை நன்னா தேச்சி உலர்த்தி  வக்கணும் .அதோட கூட இரவல் வாங்கிண்டு  வந்த சேர், டேபிள் எல்லாத்தையும் திரும்பக் கொண்டு போயி வக்கணும். 
என்னக் கொடும இது , இப்படிதான்  'எர்லி செவேன்டீஸ்ல' நடந்தது .

எங்கக் காலத்ல மொதல் பொண்ணு இருக்கறப்போ ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் பேச மாட்டாள் ,அப்படியே இருந்தாலும் மொதப் பொண்ணுக்கு நிச்சயம் ஆறவரை காத்துன்ன்டு   இருப்பா, இல்லைன்னா மொதப் பொண்ணுக்கு என்னவோ   கோளாறுன்னு தப்பு அபிப்ராயம் வந்துடும் ,அதுவும் பேசறது ஒரே சமூகமாத்தான் இருக்கும்! 

இப்ப என்னடான்னா "தமிழ் மாட்ரிமணி"சைட்ல குடும்ப விவரம் போறாதுன்னு, பொண்ணோட விதம் விதமா ட்ரெஸ்  போட்டுண்டு  இருக்கிற  போட்டோவைகளும் போடறா. வீட்ல பொண்ணு பாக்கரதுன்னே கிடையாது , இப்ப அது சந்திக்கு பதிலா 'சாப்பிங் மால்லே' ,ரெச்டாரன்ட்லன்னு வந்துடுத்து.!
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா காலம் மாறிப் போச்சு !



3 comments:

  1. Shambavi Chandru

    5:57 PM (50 minutes ago)

    to me
    இந்த சமூகம் என்கிற அக்கம் பக்கத்து வீட்டுக்காரா இருக்காங்க பாரு,சும்மா சொல்லக்கூடாது ரொம்பவே மூக்கு அண்ட் நாக்கு நீளம்.இரவல் டபரா டம்ளர், சேர் இத்யாதி சும்மா கொடுக்க மாட்டாங்க.அவங்களுக்கு முன்கூலியா யார் வராங்க என்ன விஷயமா வராங்க என்று அறிவிக்கணும். திருப்பி தரப்போ வந்தவங்க எப்படி என்ன சொல்லிவிட்டு போனாங்க என்றும் சொல்லணும்.ஒரே பார்ட்டி வந்து ஓகே சொல்லி விட்டால் பிழைத்தோம்.ஏதோ அவங்க வீட்டு இரவல் சாமான் ராசி என்று வாய் ஓயாது.2 ,3 பார்ட்டி என்று பட்டியல் நீண்டால் இந்த பொண்ணுக்காக அவங்க விடற பெருமூச்சு இருக்கே, அம்மாடியோ!
    காலம் மாறி போனதுக்கு பெண் முன்னேற்றமும் ஒரு காரணம்.பெற்ற பெண்ணின் மன நிலைமைகள் முன்னிறுத்த படுகின்றன.மேலும் ஆண்களுக்கும் அறிவு வர ஆரம்பித்திருக்கு.அதனால்தான் படை மாதிரி திரண்டு வந்து சந்தையில் மாடு வாங்கறா மாதிரி பொண்ணு பார்த்த காலம் இப்போ மாறி போச்சு.இது சாத்தியம் ஆக உதவியாய் இருக்கும் மால்சுக்கு ஒரு கும்பிடு!

    ReplyDelete
  2. Idhu namma veettu kadhai madhiri irukku.oru nimishathukku naan andha kalathukku poivittu vandhen.
    Malini.

    ReplyDelete
  3. Mathangi ma'am,
    நன்றாக (அந்த கால 70s, 80s சில இடங்களில் 90s le யும்) இந்த பெண் பார்க்கும் படலமும், அதன் கூட நடக்கும், எதார்த்தங்களையும், நன்றாக விளக்கி இருக்கீங்க..
    காலம் மாறி போனாலும், பெண் பார்க்கும் படலம், வேறு style le தான் இருக்கு அந்த நிமிடத்தில் உள்ள எதிர்ப்பார்ப்பு, இன்னமும் இருக்கு இல்லையா :-)

    sriniketan

    ReplyDelete