Thursday, January 26, 2012

கடி ஜோக்ஸ் -7


நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு.
-----------------------------------------------------------------------

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்

மாணவன்: டேய் மச்சான், super figure டா!
---------------------------------------------------------------------------------------------------
உனது கடைசி ஆசை என்ன ?

சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்

--------------------------------------------------------------

ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை.

-----------------------------------------------------------------------

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே !
----------------------------------------------------------------------------------------------------

நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க .

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்.
-----------------------------------------------------------------------------
என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா
இருக்கு டார்லிங் !'

'ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'

'இல்லை... சேர்க்க முயற்சி பண்றாங்க.
-----------------------------------------------------------------------------------------
கண்டக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...!

ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்.. 

---------------------------------------------------------------------------------------
குரைக்கிற நாயி கடிக்காது .

ஏன் தெரியுமா? 

ரொம்ப யோசிக்காதே ,

ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல .அதால செய்ய முடியாதில்ல அதான்.
----------------------------------------------------------------------

ஒரு சர்தார்ஜி ரிலாக்ஸாக கடற்கரையில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார் அப்போது அந்த வழியாக வரும் ஒரு அமெரிக்கர் கேட்கிறார்

அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ? (relaxing)

சர்தார்ஜி : நோ நோ ஐ ஆம் ரன்பீர் சிங்.

சர்தார்ஜி வேறு ஒரு இடத்தில் போய் அமர்கிறார்

அந்த வழியாக வரும் வேறு அமெரிக்கர் கேட்கிறார்

அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?

சர்தார்ஜி : நோ நோ ஐ ஆம் ரன்பீர் சிங்

சர்தார்ஜி கடுப்பாகி வேகமாக நடக்கிறார் கடற்கரை ஓரமாக ஒரு அமெரிக்கர் அமர்ந்து இருக்கிறார் சர்தார்ஜி அவரிடம் கேட்கிறார்.

சர்தார்ஜி : ஆர் யு ரிலாக்ஸ்ஸிங் ?

அமெரிக்கர் : யா ஐ ஆம் ரிலாக்ஸிங்.

சர்தார்ஜி : உன்னை தான்ட ஊரு பூரா தேடறாங்க இங்க என்ன பண்ணிக்க்கிட்டு இருக்க?
-------------------------------------------------------------------------------------

பொண்ணுக்கு என்ன வயசுங்க ?

ஆடி வந்தா 16 வயசு ஆகுமுங்க .

அப்போ ஆடாம வந்தா???
---------------------------------------------------------------------------

ஒரு ஏறும்ப கட் பண்ணினா என்னாகும்?

"கட்டெறும்பு" ஆகிடும். ஹீ ஹீ
-------------------------------------------------------------------------------
Conductor : யோவ் நான் விசில் அடிச்சும் வண்டிய ஏன்யா நிக்கலை?

Driver : அடங்கொய்யால..... நான் பிரேக் அடிச்சே வண்டி நிக்கல, நீ விசில் அடிச்சா மட்டும் நிக்க போகுதா?
---------------------------------------------------------------
 போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?

ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..

போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..
                             -------------------------------------

ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:

"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"

"ஐந்து"

"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"

"எட்டு"

"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."

"ஜேக்"

"???!!!!!?"
=-------------------------------------------------------------------------- 
ராமு : ஏன் மாப்பிள்ளை பொன்னை "மொறைச்சு" பாக்குறாரு ?
சோமு : ஏன்னா, அவரு தான் "முறை " மாபிள்ளையாம்.
-------------------------------------------------------------------------
சுதா : என்னோட பிரசவத்துக்காக என் அம்மா வீட்டுக்கு போகும் பொது வேலைகாரிய வேலைக்கு வச்சுட்டு போனது தப்பா போச்சு.

கீதா : ஏன் ? என்ன ஆச்சு ?

சுதா : இப்போ வேலைக்காரி பிரசவத்துக்கு அவ அம்மா வீட்டுக்கு போய் இருக்கா .
----------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாசமும் கடைசில குடும்பச் செலவுக்கே அற்பமாயிடுச்சு, நீ என்னடான்னா பிச்சை கேட்டு வந்துட்ட!

எனக்கும் அதான் சாமி பிரச்சினை அதனாலதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு தொழிலுக்கு வந்துட்டேன்.
-------------------------------------------------------------------------

ராமு : திருமணம் செஞ்சா எந்த தோஷம் போகும் ?

சோமு : இது கூடவா உனக்கு தெரியாது ? சந்தோஷம்!
-----------------------------------------------------------------------------------
கணவர் : ஏண்டி நேத்து கருப்பு நாய்க்கு சோறு வச்சியா ?
மனைவி : அட ஆமா, எப்படி கண்டு பிடிச்சீங்க ?
கணவர் : இன்னைக்கு காலைல அந்த நாய் செத்து போய்டுச்சு.
--------------------------------------------------------------------
வந்ததவர் : சார் என் பொண்டாட்டிய காணோம் சார்?

போஸ்ட் மாஸ்டர் : யோவ் மூதேவி, இது போஸ்ட் ஆபீஸ் யா

வந்தவர் : ஐயோ மன்னிச்சிகோங்க சார், சந்தோஷத்துல எங்க போறேன்னு தெரியல சார். 
-------------------------------------------------------------------------
அவர் : ஏங்க உங்க பொண்டாட்டி எப்போதுமே கோபமா இருக்காங்க ?

இவர் : ஒரு நாளைக்கு கோபத்துல கூட நீ அழகா இருக்கேன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அன்னிலிருந்து இப்படி தான் இருக்கா.
---------------------------------------------------------------------------------------
பொண்டாட்டி : ஏங்க ,உங்கள பாக்க டாக்டர் வந்து இருக்காரு

புருஷன் : எனக்கு ஜுரம் அடிக்குது. இப்ப யாரையும் பாக்க முடியாதுன்னு சொல்லு.
------------------------------------------------------------------------------------


புருஷன் : நான் செத்துட்டா என்ன பண்ணுவ ?

பொண்டாட்டி : நானும் உடனே செத்துடுவேன்

புருஷன் : ஜோசியர் அப்பவே சொன்னார். நீ செத்தாலும் சனி உன்னை விடாதுன்னு.

No comments:

Post a Comment