Thursday, January 26, 2012

கடி ஜோக்ஸ் -8

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???

மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும்  டாடி..
---------------------------------------------------------------------------
பழனிமலை ஆண்டவா...."வர்ற பிப்ரவரி 14க்குள்ள...எனக்கு ஒரு நல்ல லவ்வர் கிடைச்சா இந்த வேண்டுதல படிக்குற எல்லாருக்கும் மொட்டை போட்டு, நாக்குல   வேல் குத்தி,அவங்க செலவுலையே 10000 பேருக்கு அன்னதானமும் ப்ண்ணி,அவங்க செல்லையும் உன் உண்டியல்ல போடுறேன்....இது இந்த வேண்டுதல படிக்கிறவங்க மேல சத்தியம் "
--------------------------------------------------------------------------------------
Wife :வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கன்னு  எத்தன தடவ சொல்றது?
Servant : நல்லா சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்!
--------------------------------------------------------------------------------
  மனைவி : ஏங்க நேத்து நீங்க எனக்கு நகை வாங்கி கொடுக்குற மாதிரி கனவு வந்துச்சுங்க.

கணவன் : ஆமா ஆமா, அப்போ உங்க அப்பா தான் பில்லுக்கு பணம் கட்டினாரு. அத்த நான் பார்தேனே.
-----------------------------------------------------------------------------

Man-1 : என் மனைவிக்கு என் மீது கொள்ளை பிரியம்.

Man-2 : உங்களுக்கு பரவாயில்லை. என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.

---------------------------------------------------------------------------------

Vimalan : என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.

Amaran : எப்படி? எத வச்சு சொல்லுறீங்க?

Vimalan : துவைக்க ஈஸியா இருக்கிற புடவையை தான் வாங்குவா.
--------------------------------------------------------------------------------------------

Kamala : உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா?

Vimala : சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...அப்பப்ப அடிக்கறதோடு சரி.

Kamala : சாப்பிடும்போது கூட உன் கணவருக்கு ஆபிஸ் ஞாபகமா? எப்படிச் சொல்றே?

 Vimala : உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்.
-----------------------------------------------------------------------------------

Man-1 : உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க?

Man-2 : என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
------------------------------------------------------------------------------------------

Ramu : என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.

Somu : ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.

Ramu : உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுசொல்லுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் OKன்னுடுவா.
-----------------------------------------------------------------------------------

Ramu : ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
Somu : ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.

----------------------------------------------------------------------------------

வந்தவர் : என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியணும்
சாமியார் : அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.

----------------------------------------------------------------------------------------------

Uma : உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே?

Anu : யார் சொன்னா?

Uma : என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!

--------------------------------------------------------------------------------------------
 Doctor : உப்பு, உரப்பு இல்லாத சுரணை இல்லாம இனிமேல் சாப்பிடணும்.

Patient : கல்யாணமானதிலிருந்து அப்படித்தான் சாப்பிடுறேன் டாக்டர்.

-------------------------------------------------------------------------------------

பொண்டாட்டிக்கு பயப்படுவதில்லைன்னு முடிவுக்கு வந்திட்டேன்.

சபாஷ் எப்பேலர்ந்து...?

அவ செத்துப் போனதிலேர்ந்து

-----------------------------------------------------------------------------------
Friend : உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை?
Journalist : பேய்க் கதைதான்..

------------------------------------------------------------------------------------------

கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.

மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.

கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுடறேன்..
----------------------------------------------------------------------------------------------

 கணவர் : ஏண்டி இந்த புடவையை எப்போ எடுத்த ? தீபாவளிக்கா ? இல்ல பொங்கலுக்கு எடுத்தியா?

மனைவி : துணிக்கடைல கரண்ட் போனப்புறம் எடுத்தேன்.
-------------------------------------------------------------------------------'
தபால் காரர் : ஏங்க உங்களக்கு ஒரு மொட்டை கடிதாசி வந்து இருக்கு.

வீட்டுக்காரர் : எங்க இருந்து வந்து இருக்குன்னு சொல்ல முடியுங்களா?

தபால் காரர் : பழனி ல இருந்து வந்து இருக்கு சார்....

--------------------------------------------------------------------------------

டாக்டர் : ஏம்மா கருவ கலைக்கம்னு சொல்றியே ? உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி அனுமதி வாங்கியாச்சா ?

வந்தவள் : இல்ல, அவர் வெளிநாடு போய் ஒரு வருஷம் ஆச்சு டாக்டர்.

டாக்டர் : ??????
------------------------------------------------------------------------------------

என்னதான்  ஒரு  பொண்ணு  போட்டோ ` ல    தேவதை  மாதிரி  இருந்தாலும் ,

அவள்  நெகடிவ்ல  பூதம்  மாதிரி  தான்  இருப்பா.!
-------------------------------------------------------------------------------------
சுதா : உனக்கு ஒரு கணக்கு டெஸ்ட்.

ஆழ மர இலை 00.67 கிராம்
 அரச மர இலை 2.39 கிராம்
வேப்ப மர இலை 0 7.39 கிராம்

இத கூட்டினா என்ன வரும் ?

கீதா : குப்பை தான் வரும்

சுதா : ? ? ? ?
------------------------------------------------------------------------------------

போலீஸ்: என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே?

குற்றவாளி: என் மாமியாரும், மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது. வேற என்ன செய்ய?

----------------------------------------------------------------------------------------

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாகஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்..ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!
------------------------------------------------------------------------

ஆறுதல் சொன்ன பெண் : ஹூம்...உன் மாமியார் கிணற்றில் தவறி விழப்போய் உன் பாடு இனிமேல் ஜாலிதான். எனக்கும் நல்ல நேரம் வந்தால் இப்படி ஏதாவது நடக்கும்.

மாமியாரை இழந்த பெண் : இதெல்லாம் தானா நடக்கும்னு இருக்கக்கூடாது. நாமதான் ஸ்டெப் எடுக்கணும் !
---------------------------------------------------------------------
மனைவி: உங்க நண்பருக்கு பார்த்த பொண்ணு நல்லவ இல்லீங்க. நீங்க கொஞ்சம் சொல்ல கூடாதா?

கணவன்: நான் எதுக்கு சொல்லணும், அவன் எனக்கு சொன்னானா?
-------------------------------------------------------------------------------
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : Hello sir, இந்த காலேஜ் நல்ல காலேஜா?

Watchman : ரொம்ப நல்ல காலேஜ் sir. இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்,.

பெற்றோர் : அப்படியா!!

Watchman : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
------------------------------------------------------------------------------------

Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கணும்  போல இருக்குங்க!

Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..
------------------------------------------------------------------------------------

ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.

டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு, மீசை என்ன.... தாடி கூட வளரும்.-

----------------------------------------------------------------------------------------------
மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க?

கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!

------------------------------------------------------------------------------------------
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

----------------------------------------------------------------------------------------
கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள்.

பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.

கடவுள்: !!!!????
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment