Wednesday, December 21, 2011

காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?


  காஸ் சிலிண்டர்  காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

  ஒவ்வொரு சிலிண்டருக்கும் அதனை ஏத்தனை ஆண்டுகாலம் உபயோகப் படுத்தலாம் என்று அவகாசம் இருக்கிறது. அதற்குப் பிறகும் அதில் காஸ் 'பில்' செய்து உபயோகப் படுத்தினால் , அது நல்லதுக்கும் இல்லை மேலும் அது பயங்கர விளைவைக்  ( விபத்தைக் ) கொடுக்கும்.

சிலிண்டரின் மேல் பாகத்தில் மூன்று தண்டுகள் இருக்கும், அதில் ஒன்றில் ஆங்கிலத்தில்  ஏ ,பி ,சி, டி என்றும் அதனுடன் இரண்டு எழுத்து நம்பர்களும் இருக்கும். உதாரணத்திற்கு A or B or C or D  D06.

 ஏ என்பது  ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ( முதல் காலாண்டு )
 பி என்பது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ( இரண்டாவது  காலாண்டு )
சி  என்பது  ஜூலை முதல் செப்டம்பர்  மாதம் வரை ( மூன்றாவது  காலாண்டு )

டி என்பது  அக்டோபர்  முதல் டிசம்பர் மாதம் வரை ( கடைசி  காலாண்டு )  

உதாரணத்திற்கு கீழே கொடுத்துள்ள படத்தைப் பார்க்கவும்.


இந்த சிலிண்டர் டிசம்பர் 2006  வரை தன செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!

இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..

  இரண்டாவதாக இந்தப் படத்தைப் பார்க்கவும் .


இதில்   D13   என்று இருப்பது, டிசம்பர்  2013   வரை உபயோகப் படுத்தலாம்  என்று தெரியப் படுத்துகிறது. 

இந்த விவரங்களை உங்களோடு வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளவும் 

No comments:

Post a Comment