Wednesday, November 30, 2011

சன்னா மசாலா ( kabuli chana masala )



சன்னா                                    250  கிராம் 
வெங்காயம்  மீடியம்                              4
தக்காளி            ''                                       4 
பூண்டு                                                       10 
இஞ்சி                                                       கழக் கோடி 
தனியா பொடி                                         1  டீஸ்பூன்
 ஜீரகம் பொடி                                          1  டீஸ்பூன்
மிளகாய் பொடி                                      2  டீஸ்பூன்
கரம் மசாலா                                           1  டீஸ்பூன்
சன்னா  மசாலா பொடி                         2  டேபிள்ஸ்பூன்  
உப்பு                                                        தேவையான அளவு 
எண்ணெய்                                             1  கப் 
நெய்                                                        1  கப்
கொத்த மல்லி                                      1  கப்
 மஞ்சள் பொடி                                     1  ஸ்பூன் 
கஸ்துரி மஞ்சள்                                   1  ஸ்பூன் 
லவங்கம்                                               2
ஏலக்காய்                                               3 
பிரிஞ்சி இலை                                      1
லவங்கப் பட்டை                                  1 

முதல் நாள் சன்னாவை   ஒரு சிட்டிகை சோடா போட்டு ஊற வைக்கவும். 

மொத்தம் ஆறிலிருந்து, எட்டு மணி நேரம் ஊறணும்.

 சன்னாவை  சிறிதளவு மஞ்சள் பொடி , கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைக்கவும். 

வெங்காயம் இஞ்சி, பூண்டை நன்றாக வழுமூனாக அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.

அடுத்ததாக தக்காளியையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

வெறும் வாணலியில், லவங்கம் ,ஏலக்காய், லவங்கப் பட்டை, பிரிஞ்சி இலை போட்டு கொஞ்சம் வறுத்ததும்  வெங்காய விழுதை போட்டு, நல்லா தண்ணீர் வற்றியதும் எண்ணையை விட்டு வதக்கவும்.

பிறகு எல்லாப் பொடியையும் போட்டு கிளறி , இரண்டு நிமிடம் கழித்து ,உப்பு போட்டு தக்காளி விழுதையும் சேர்த்து கிளறவும். 

நெய்யை விட்டு நன்றாக கலந்து, வேக வைத்த சனாவில் முக்கால் பங்கை போட்டு, மீதி இருக்கும் கால் பங்கை நன்றாக மசித்து சேர்த்து கொஞ்சம் கொதிக்க விடவும். 

கொத்த மல்லி தூவி இறக்கவும்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

 சன்னாவை   வேகவைக்கும் போதே , அதில் ஏலக்காய், லவங்கம் ,லவங்கப் பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்தும் வேக வைக்கலாம். 

 ஒரு சிலர் 2  ஸ்பூன் டீப் பொடியை சின்ன துணியில் கட்டி வேக வைப்பார்கள். அல்லது ச்ன்னாவைக் கொட்டிக் கிளரும் போதே டீத்தூளை கொதிக்க வைத்து வ்டி கட்டி சன்னாவுடன் சேர்ப்பார்கள். 

 புளி சட்னி 

 பேரிச்சம் பழம்                4 

புளி                                      எலுமிச்சங்காய் அளவு 

மிளகாய்ப் பொடி            2      டீஸ்பூன் 

வெல்லம்                         3    டீஸ்பூன் 

பேரிச்சம் பழத்தை கொட்டை எடுத்து சுடு நீரில் ஊறவைக்கவும்.
10 நிமிடம் கழித்து  ஊறவச்ச பழத்தை மட்டும் ,புளிகரைசலுடன் வெல்லம் , மிளகாய்பொடி சேர்த்து அரைக்கவும். 

பிறகு வாணலியில் போட்டு கொதிக்க விடவும். நன்றாக கெட்டியாக ஆனதும் இறக்கி பரிமாறவும்.

No comments:

Post a Comment