Tuesday, November 29, 2011

கடவுளுடன் ஒரு உரையாடல்....4


இப்போதேல்லாம்  மதத் தலைவர்கள் அரசியலில் நுழையப் பார்கிறார்களே ?

மதத் தலைவர்கள் தாமரை  இலை தண்ணி போல்  அரசியலில்  நனையாமல்  இருக்கணும் , அதே   சமயம்  வாழ்க்கையில்   ஒட்டி  இருந்து   நல்  வழிப் படுத்தணும்..மதங்களில் கலப்பு அரசியலா இருக்கக் கூடாது , ஆனால் அரசியலில் மதக் கட்டுப்பாடும் மனக் கட்டுப்பாடும் அவசியம் .

ஒவ்வொரு சாமிஜிகளும் ஒவ்வொரு சித்தாந்தத்தைப் போதிக்கிறார்களே?

ஒவ்வொரு  சாமிஜிகளும்  அவரவர்கள்  சித்தாந்தத்தை  போதிக்கிறார்கள் . அவர்களைத்  தொடர்பவர்களும்அவர்கள் மனசுக்கேத்தவாறு   செய்கிறார்கள் .மதங்களில்   கலப்பு  அரசியலா   இருக்கக் கூடாது,ஆனால்அரசியலில் மதக் கட்டுப்பாடும்  மனக்  கட்டுப்பாடும்  அவசியம் .

எதற்கு முக்கியத்துவம் கொடுக்கணும்?

உண்மை ,அன்பு ,கருணை, மனிதனின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் , நம்மை எப்படி ஒருத்தர் நடத்தனும்னு எதிர் பார்க்கிறமோ , அதே போல் நாம் மற்றவர்களை நடத்தனும்..

ஒரு சிலர் எப்பவுமே ஏதாவது  எதிர்  பார்ப்பது , பணத்தின் பின்னே  போவது , கிடைக்கும்  அன்பை  விட்டு  விட்டு பறக்கிறதை பிடிப்பது , இப்படி இருப்பார்கள்.  இது எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது..

ஒரு சிலர் யாரையும் முன்னுக்கு வரவிடாமல் ,எப்பவும் ஏதாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே, அவர்களை எப்படி சரி செய்யலாம்?

ஒரு  சிறு  பையன் சைக்கிள்   கத்துக் கொள்ளும்போது  , அவன்  பின்னாலேயே  போயி  , அந்த சைக்கிளை   பிடித்துக்  கொண்டே  இருந்தால்  அவன்  எப்படி  கத்துக்  கொள்வான் ? அவனுக்கு  அடி  படும்  என்று  நினைத்தால் , அவன்  கத்துக்  கொள்ளவே  முடியாது  , அதற்கு   பதிலாக , அவனை  தானாகவே  கத்துக்  கொள்ள  விடணும், அப்போதான்  சவாரி  சுலபமாக  இருக்கும் அவனுக்கு.

  அவன்  சைக்கிள்  ஓட்டுவதில்  ஒவ்வொரு   தரமும்  கீழே  விழுந்ததும்  எழுந்திருக்க  வல்லமை  இருக்கான்னு   பார்க்கணும்  அதே  சமயம் , அவன் ஒழுங்கா ஒட்டுரதற்கு  எல்லா  ஒத்துழைப்பும் கொடுக்கணும்.

விதி ,விதி என்று சொல்லி எல்லோரும்  கைக் கழுவிவிடுகிறார்களே?

வாழ்க்கை  முழுக்க ஒரு எதிர் பார்க்காதது  தான்  ஆச்சரியங்கள்,  விபத்துக்கள், எந்த  மூலையில் என்ன இருக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது.ஆனால், ஒருவன் நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் போகிறான்.விதியைக் கட்டுப்படுத்துவது  நம் கையில் இல்லை, ஆனால்,நாம் நடந்து கொள்ளும் விதம் மூலம் நாம் விதியைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

ஓரினச் சேர்க்கை  தவறு என்று மக்கள் நினைக்கிறார்களே?

ஓரினச் சேர்க்கை  வியாதியோ, இயற்கைக்கு முரண் பாடோ  இல்லை அவர்களாகவும் தேர்ந்தெடுக்க வில்லை.கடவுளால் தோற்றுவிக்கப் பட்டது.காம சூத்திரத்தில்  இல்லாதது இல்லை, திருநங்கைகளும் இதில் அடக்கம்.

இவர்களை அங்கீகாரம் செய்யணும் ,அதே சமயம் அதனால் வரும்  விபரீத விளைவுகளைப் பற்றியும்  ( எச் ஐ வி )உலகத்திற்கு தெரிய வைக்கணும். இதில் ஈடு படுபவர்களும் சமூதாயம் அவர்களை ஒதுக்கி விடப் படாமல் இருக்க ஏதாவது அதே  சமூகத்திற்காக  பாசிடிவாக தனித்துவமாக செய்யணும். நம்மில்  இடக்கை வலக்கை பழக்கம் உள்ளவர்களைப் போலதான் இவர்களும், மாற்று பழக்கம் உள்ளவர்கள். இவர்களையும் நம்முள் ஒருவராக  நினைத்து அங்கீகரித்தால் ஒன்றும் தப்பில்லை.


இப்போ நிறையவே தற்கொலை , கொலைகள் அதிகமாக இருக்கிறதே?

இதற்கு ஒரே காரணம் எதிர் பார்ப்பு தான். வாழ்க்கையில் ரொம்பவே எதிர் பார்ப்பதால் , கிடைக்காத ஏமாற்றம் ஒருவனை தற்கொலைக்கோ, கொலைக்கோ தள்ளுகிறது. போறாத குறைக்கு தனிமை விரட்டுவதால் அவர்கள்விரக்திக்குத்தள்ளப்படுகிறார்கள். 

தனிமையில்  விரக்தி  வீட்டிற்கு வரும்  விருந்தாளி.

அப்போ இதே எல்லாம்  எப்படி சமாளிப்பது?

இப்போ எல்லோருக்குமே கொஞ்சம் தியானம் மனசைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரத் தேவை. கொஞ்ச நேரம் மனதை ஒருமைப் படுத்தி தியானம் செய்தால் கோபம், தாபம் , விரக்தி,பொறாமை, ஏக்கம் , இவற்றை விரட்டி , மனசை   சாந்தப் படுத்த முடியும்.  எவன் ஒருவன் மனசை நங்கூரம் போட்டு கட்டுகிறானோ அவனுக்கு எப்பேர்பட்ட புயலோ, காற்றோ வந்தாலும் கவலை இல்லாமல் கப்பலாகிய மனம் கடற் கரையை விட்டு போகாது என்று உறுதியாக இருக்க முடியும்.கப்பல் கவிழ்ந்து விடுமோ என்று கன்னத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை வராது, வரவும் விட மாட்டான்!


No comments:

Post a Comment