Monday, November 28, 2011

கூட்டுக் குடும்பம்


மெயிலில் படித்தது ...

''பழைய காலங்களில் கூட்டுக் குடும்ப முறைகள் நடைமுறையில் இருந்ததால் குழந்தை வளர்ப்பு, பண்பாடு, நாகரீகம், குடும்ப வரவு செலவு எல்லாமே ஒரு வரைமுறையுடன் கூட இருந்தது.
ஆனால், தற்போது உள்ள இயந்திரமயமான உலகில் இத்தகைய நடைமுறைகள் பெரிதும் மறைந்து விட்டன. அதன் பலனாக முறை தவறிய நடத்தைகள், குழந்தைகளின் கல்விச் சீர்கேடு, குடும்பத்தை நெறியுடன் கொண்டு செல்வதற்கான வழிகாட்டல்கள் எல்லாம் அற்றுப் போய் விட்டது.

தனிக் குடும்பங்களாகப் பிரிந்ததால் குழந்தைகளின் பிடிவாதம் குறைந்துள்ளமை, சிறியவர்களுக்கும் குடும்பப் பொறுப்பு என்று மறுபக்கம் சில நன்மைகளும் உண்டாகியிருக்கின்றன.''
_________________________________________________________________

ஒன்றுக்கும் மேற்பட்ட  குடும்பம் கூட்டாக ஒன்று சேர்ந்து குடித்தனம்  செய்வது  தான்  கூட்டுக் குடும்பம்.என்னைப் பொறுத்தவரை கூட்டுக் குடும்பத்தில் எவ்வளவோ கத்துக் கொள்ளலாம்.

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க,
 நம்முடைய முன்னோர்களிடமிருந்து நம்முடைய பழக்க வழக்கங்களையும் ,நடை முறைகளையும் ,அறிந்து கொள்ள முடியும்.

எது எப்பொழுது, எதற்காக செய்யணும் ஏன் செய்யணும் என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருததருக்கொருவர்   விட்டுக்  கொடுப்பது , நமக்காக  மட்டும்  இல்லாமல்  மற்றவர்களுக்காகவும்  வாழ்வது  ,மற்றவர்களுடன்  மரியாதையுடன்  பழகுவது  இப்படி  சொல்லிக்  கொண்டே  போகலாம்  .

எது  முடிவெடுப்பதாக  இருந்தாலும்  பெரியவர்களை  கலந்து  ஆலோசித்து , முடிவெடுக்கலாம் . அவர்களுடைய அனுபவத்திலிருந்து  அவர்கள்  நல் வழிக்  காட்டலாம் .  ஒருத்தருடைய  பலம் , பலவீனம்  தெரிந்து  வேலைகளை  செய்யலாம் .முக்கியத்துவம்   கொடுப்பதால்  , சீக்கிரத்தில்  அங்கீகாரம்  கிடைக்கிறது . அன்பும் , பண்பும்  பரிமாறி , உதவும்  வழக்கம்  இருப்பதால்  சகிப்புத்  தன்மை  வருகிறது  .

ஒரு  கலர்  பென்சில்  பாக்ஸில்  எப்படி  கலர்  பென்சில்  எல்லாம்  தனித்து  இருந்தாலும்  அவற்றை  வைத்து  ஒரு  சித்திரம்  எழுதும்  போது , எல்லா கலருமே  பரிமளிக்கிறது  அதே  போல்  தான்  கூட்டுக்  குடும்பத்தில்  உள்ள  மனிதர்களும் .  தனித்து  இருந்தாலும்  குடும்பம்  ஒன்றாக  சேரும்  போது  குடும்பம் நன்றாக  செயல்  படுகிறது .

எந்த  ஒரு  காரியம்  செய்ய  முனையும்  போதும்  நமக்கு  பக்க  பலம்   இருக்கிறது  என்பதே  நம்மை  ஊக்குவிக்கும் ! 
பலபேர் சேர்ந்து செய்வதால் , வேலை  சுமை தெரியாது , வேலை சுமை இருந்தாலும் நகைச்சுவை யுடன் செய்தால் சுமை தெரியாது. 


வேலைகளை பகிர்ந்து கொண்டு இன்று நீ, நாளை நான் என்று இருப்பதால், எல்லோருக்கும் ஒவ்வொரு  வேலையும் எப்படிப் பட்டது என்றும் தெரிய வரும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


என்னுடைய அனுபவத்தில்  எனக்கு நிறைய நன்மையே கிடைத்தது. 
முதலில், இன்றும் எவ்வளவு வேலை இருந்தாலும், முகம் சுளிக்காமல் , மொனமொனக்காமல் என்னால் வேலை  செய்ய முடிகிறது. அடுத்தது, சகிப்புத் தன்மை , இவள், இவன், இப்படிதான் இவர்களைக் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கத் தான் செய்யும் என்ற மன பாவம் என்னிடத்தில் , அதனால் நான் என்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பேன், முடியவில்லை என்றால் விட்டு விடுவேன். 

நாலு பேருடன் கலந்து கட்டிக் கொண்டு வேலை செய்யவோ, பேச்சுக் கொடுக்கவோ முடிகிறது.  பூத் தொடுக்க, மாக் கோலம் போட , நாள் கிழமைகளில் ஒத்தாசையாக இருக்க, சின்ன சின்ன பாத்திரங்கள் தேய்ப்பது, வேலைக்காரி இல்லாவிட்டால், தன் கையே தனக்கு உதவி என்றிருப்பது , புடவை ப்ளவுச்களை மாற்றிக்  கட்டிக் கொள்ள கொடுப்பது, அவசரத்திற்கு பொருள்கள், துணி மணிக் கொடுத்து உதவுவது இது எல்லாம் எல்லோருக்கும் இருப்பதில்லை!

நிறைய பெயர் ரொம்ப , " நான் , என்னுடையது " என்றிருப்பார்கள் , கொஞ்சத்தில் எதையும் கொடுக்க மாட்டார்கள் .
தாராள குணம், பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது, யாரிடத்திலும் பொறாமைக் கொள்ளாமல் இருப்பது, விருந்தோம்பலில் சிறந்து விளங்குவது , வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வது . இவை எல்லாம் சிறப்பு அம்சங்கள் .

பெரியவர்கள் எப்படி சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துகிறார்கள் என்று அனுபவத்திலே தெரிந்து கொளவதால், அதை அடுத்து ,அடுத்து வரும் சந்ததியும் அந்த வழி முறைகளைக் கடைப் பிடிக்க முடிகிறது. 

வாழ்க்கையே ஒரு கொடுக்கல் வாங்கல் தான், இந்தக் கையால் கொடுத்தால் அடுத்தக் கையால் வாங்கலாம் அன்பை!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

3 comments:

  1. Well said!

    Division of labour, sharing and caring,shared joys and hurts,being partners in crimes, collective responsibilities,complete absence of ego-without losing one's individuality...the list goes on. I can't remember ever holding a grudge or a frown or sulking for long and never felt the lack of anything while living in a joint family.If anything, privacy was in short supply but strangely, never felt any inconvenience...

    ReplyDelete
    Replies
    1. Mathangi ma'am,
      அருமையான பதிவு......


      Thanks and regards,
      Bhargavi
      ........................

      prana
      மாதங்கி மேடம்,
      உண்மைதான் அன்பு,சகிப்புத்தன்மை,விட்டுக் கொடுத்தல்,பகிர்ந்துக் கொள்ளுதல் என கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள் ஏராளம்..
      அதே சமயம் மனஸ்தாபம், வேலை பங்கீடு,வீட்டு செலவு பங்கீடு என சில குறைகளும் இருக்கிறது..
      இந்த வேகமயமான உலகத்தில் கூட்டுக் குடும்பம் சாத்தியமா என்பது ஒரு பெரிய சந்தேகம்தான்..
      ...................
      Re: கூட்டுக் குடும்பம்

      Kootuk kudmbhattin arumai perumaigalai miga thelivagavum, azhagagavum edutthu uriththullergal thozhi!Malavanna malargal sernthu oru naaril thodukkappatta malai vasanaiyum, kannukku virundhum alippadhu pol koottu kudumbha muraiyum valarattum,
      Anbhudan

      Padmini

      Delete
  2. வணக்கம் ஐயா!

    நான், பெற்றோரின் நிலையைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

    நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

    www.lusappani.blogspot.in

    ReplyDelete