Tuesday, November 22, 2011

பூண்டு ரசம் வகைகள்

பூண்டு  ரசம்  1 

பூண்டு                                 06

  தக்காளி                           2 

 மிளகு                                5  

சிவப்பு மிளகாய்              1

ஜீரகம்                                 1  ஸ்பூன்  

புளி                                     எலுமிச்சை அளவு 

கருவேப்பிலை              5 -6  இலைகள்  

உப்பு                                 தேவையான அளவு

கடுகு                                1  டீஸ்பூன்  

பெருங்காயம்                2  சிட்டிகை 

 எண்ணெய்                     தாளிக்க 

 கொத்தமல்லி              1   கப்  பொடியாக நறுக்கியது  

புளியைக் கரைத்துக்கொள்ளவும் .

பூண்டு , ஜீரகம், மிளகைப் பொடி செய்துக் கொள்ளவும் .

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,போட்டு வெடித்ததும் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு, நறுக்கிய தக்காளியைப் போட்டு ஒரு வதக்கு வதக்கி, புளிக் கரைசலை விடவும்.

ஒரு கொதி வந்ததும் அரைத்த பொடியைப் போட்டு, உப்பு சேர்த்து நல்ல கொதித்து வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி விடவும்.   

.......................................................................................
பூண்டு  ரசம்  2 

 பூண்டு                                          1  கப்

 தக்காளி                                        2 

 மிளகுபொடி                                1  ஸ்பூன் 

  ஜீரகம்  பொடி                             1  ஸ்பூன்   

தனியா பொடி                              1  ஸ்பூன்

சிவப்பு மிளகாய்                          2

 புளி                                                எலுமிச்சை அளவு 

கருவேப்பிலை                          5 -6  இலைகள்  

உப்பு                                             தேவையான அளவு

கடுகு                                           1  டீஸ்பூன்  

 ஜீரகம்                                         1 /2  ஸ்பூன்  

பெருங்காயம்                          2  சிட்டிகை 

நெய்                                            தாளிக்க 

கொத்தமல்லி                          1   கப்  பொடியாக நறுக்கியது 

புளியைக் கரைத்துக்கொள்ளவும் .

தக்காளியை பொடியாக நறுக்கவும்

பூண்டை வேகவைத்துக் கொள்ளவும்.  

வாணலியில் நெய் விட்டு, கடுகைப் போட்டு வெடித்ததும் ஜீரகம் ,சிவப்பு மிளகாய் ,பெருங்காயம் ,கருவேப்பிலை போட்டு  ,நறுக்கிய தக்காளியைப்  போட்டு வதக்கவும்.  

இரண்டு நிமிடம் கழித்து புளிக் கரைசலை விட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் தனியா, ஜீரகம் , மிளகுப் பொடி,உப்பு ,வேகவைத்த பூண்டைப் போட்டு சேர்த்து  கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

........................................................................................................

 பூண்டு  ரசம்  3 
 
 பூண்டு                                        1  கப் 

தக்காளி                                       2 

துவரம் பருப்பு                            1  டேபிள் ஸ்பூன் 

ஜீரகம்                                           1      ஸ்பூன்

மிளகு                                            1      ஸ்பூன்

சிவப்பு  மிளகாய்                       2 

பெருங்காயம்                             1       ஸ்பூன் 

புளி                                                எலுமிச்சை அளவு 

கருவேப்பிலை                          5 -6  இலைகள்  

உப்பு                                             தேவையான அளவு

கடுகு                                           1  டீஸ்பூன்  

ஜீரகம்                                         1 /2  ஸ்பூன்  

பெருங்காயம்                           2  சிட்டிகை 

நெய்                                            தாளிக்க 

கொத்தமல்லி                         1   கப்  பொடியாக நறுக்கியது  

புளியைக் கரைத்துக்கொள்ளவும் .

தக்காளியை பொடியாக நறுக்கவும்

பூண்டை வேகவைத்துக் கொள்ளவும்.  

துவரம் பருப்பு ,ஜீரகம் சிவப்பு மிளகாயை ஊறவைத்து , இவற்றை அரைத்து முடிக்கும் தருணத்தில் மிளகையும் சேர்த்து ஒரு சுத்து சுத்தி அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, கடுகைப் போட்டு வெடித்ததும் ஜீரகம், பெருங்காயம் ,கருவேப்பிலை போட்டு  ,நறுக்கிய தக்காளியைப்  போட்டு வதக்கவும்.  

இரண்டு நிமிடம் கழித்து புளிக் கரைசலை விட்டு கொதிக்க விடவும்.


பிறகு அரைத்த விழுதையும் , சேர்த்து  உப்பு போட்டு கொதி வந்ததும்  கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment