Sunday, November 20, 2011

பாலக் பனீர்

பாலக்                               2   கட்டு,
பனீர்                                 10     துண்டுகள்
வெங்காயம்                    4 
தக்காளி                           2
இஞ்சி                             ஒரு கழக்   கோடி 
பூண்டு                             4
தனியா                          1  டீஸ்பூன்
ஜீரகம்                             1  டீஸ்பூன்
கரம் மசாலா பொடி     1  டீஸ்பூன்
முந்திரி பருப்பு              8
 பச்சை மிளகாய்           1 
 மில்க் க்ரீம்                    3  டேபிள் ஸ்பூன்
லவங்கப் பட்டை          1 
 
 பாலக்கை ஆய்ந்து நறுக்கி 1  ஸ்பூன் சர்க்கரை போட்டு வேகவிட்டு, மசிக்கவும்.

வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு  எல்லாம் கலந்து நைசாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் போடாமல் நன்றாக பொன்னிறமாக வதக்கவும் .
பிறகு எண்ணெய் விடவும்.

தக்காளி, கரம் மசாலா, தனியா ,ஜீரா, பச்சை மிளகாய் , முந்திரி பருப்பு ,மில்க் க்ரீம் ,லவங்கப் பட்டை   ஆகியவற்றை அரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து ஓரத்தில் எண்ணெய் விட்டு வரும் போது 
 வேக வைத்த கீரையையும் போட்டு  கலக்கி  உப்பு போடவும். 3  நிமிடம் கழித்து  பனீரைப் போடவும்.   3 ஸ்பூன் நெய்யை விடவும் .

..............................................................................................................

No comments:

Post a Comment