Wednesday, November 16, 2011

பருப்பு தினுசுகள் பாகம் 2


டைப் 4 

 துவரம் பருப்பு                    1 /2  கப் 
 தக்காளி                             2 
 பச்சை மிளகாய்                 2  விதை எடுத்து  குறுக்காக நறுக்கவும்
 கடுகு                                 1/4
 ஜீரகம்                                1 /4 டீஸ்பூன்
 மஞ்சள் பொடி ,                 1 /2 டீஸ்பூன்
 மிளகாய் பொடி ,               1   டீஸ்பூன்
 தனியா  பொடி                   1   டீஸ்பூன்
 வெல்லம்                          தேவையான  அளவு  
 காய்ந்த மிளகாய்                2 
  பெருங்காயம்                      1/4 டீஸ்பூன் 
 எண்ணெய்                             2   ஸ்பூன் 
 உப்பு                                 தேவையான அளவு
எலுமிச்சை சாறு                  1  பழம்
கொத்தமல்லி                   1  பிடி .

 
 
துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து மசிக்கவும்.

 தக்காளியை துண்டு துண்டாக நறுக்கவும்.உலர்ந்த மிளகாயை இரண்டாக ஒடிக்கவும்.

 வாணலியில் எண்ணெய்  விட்டு  கடுகு வெடித்ததும்  ஜீரகம், பெருங்காயம்,உலர்ந்த மிளகாய்  ,பச்சை மிளகாய், தனியா  பொடி, மிளகாய்  பொடி,வெல்லம் ,உப்பு,  பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

வேகவைத்த பருப்பையும் போட்டு நன்றாக கலக்கி ஐந்து நிமிடம் கழித்து  கருவேப்பிலை, கொத்தமல்லி இல்லை போட்டு இறக்கவும்  .
ஆறியபின் எலுமிச்சை சாறுசேர்க்கவும் .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டைப் 5 

 
 துவரம் பருப்பு                     1  கப் 
 வெல்லம்                            ஒரு டீஸ்பூன்
  பச்சை வேர்கடலை           10 - 12 
 கருவேப்பிலை                    5 இலை
 எலுமிச்சை                         1 
 இஞ்சி                                 கழக் கோடி துருவியது
 கொத்தமல்லி                     1   பிடி
பெருங்காயம்                      1 டீஸ்பூன் 
கடுகு                                   1 டீஸ்பூன்
 மஞ்சள் பொடி ,                  1 /2 டீஸ்பூன்
 மிளகாய் பொடி ,                1 டீஸ்பூன்
 தனியா  பொடி                   1  டீஸ்பூன்
பிரிஞ்சி இலை                     2
லவங்கம்                              2 துண்டு 
காய்ந்த மிளகாய்                  1
 எண்ணெய்                           4  தேக்கரண்டி 

துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து மசிக்கவும்.
வெல்லம் சேர்த்து கலக்கவும். 

 வாணலியில் எண்ணெய்   விட்டு  கடுகு வெடித்ததும் ,பெருங்காயம், வேர்கடலை ,உலர்ந்த மிளகாய் ,பிரிஞ்சி இலை , லவங்கம் , கருவேப்பிலை  போட்டு மூன்று நிமிடம் வைக்கவும். 

பிறகு மிளகாய் பொடி, தனியா  பொடி,  உப்பு சேர்த்து  மசித்து வைத்த பருப்பு சேர்க்கவும். 

துருவிய இஞ்சியையும் , கொத்தமல்லி இலையையும் சேர்த்து கலக்கவும்.மூன்று நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை சாறு பிழியவும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டைப் 6
துவரம் பருப்பு               1 கப் 
தக்காளி                         ¼   பொடியாக நறுக்கியது 
இஞ்சி                            1  டேபிள் ஸ்பூன் 
 பச்சை மிளகாய்            1 
கருவேப்பிலை               5 இலை
பெருங்காயம்                 1 /4 டீஸ்பூன்
கடுகு                              1 /2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி ,              1 /2 டீஸ்பூன்
மிளகாய் பொடி ,            1 டீஸ்பூன்
ஜீரகம்                             1 /2 டீஸ்பூன்
லவங்கப் பட்டை            1 
உரித்த வேர்கடலை       10 
வெல்லம்                        எலுமிச்சை அளவு 
 எலுமிச்சை                     1 
 எண்ணெய்                      2  டீஸ்பூன் 
கொத்தமல்லி                  1     பிடி
உப்பு                               தேவையான அளவு

துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து மசிக்கவும்.
 வாணலியில் எண்ணெய்   விட்டு  கடுகு வெடித்ததும் ,ஜீரகம், பெருங்காயம், லவங்கப்பட்டை , கருவேப்பிலை போடவும் .
பிறகு நறுக்கிய தக்காளி , மிளகாய்பொடி  சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
வேகவைத்த பருப்பு உப்பு, வெல்லம் வேர்கடலை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி தூவவும்.

No comments:

Post a Comment