Sunday, November 6, 2011

நேற்றும் நாளையும்


வாழ்க்கையில் ஒருவனுக்கு  வாரத்தில் இரண்டு  நாட்களுக்காக வருத்தப் படக் கூடாது. அது நேற்றும்  நாளையும்  மட்டுமே.

நேற்று : 

 நடந்த தவறு, தப்பு , வலி, வாதம் ,அக்கறை, சிரிப்பு, வருத்தம். எதுவுமே நம் கையில் இல்லை நம்முடைய கட்டுப் பாட்டிற்குள்ளும்   இல்லை.எத்தாலும் நேற்றை விலைக்கு வாங்கவோ, திரும்பிக் கொண்டுவரவோ முடியாது. நடந்ததை , அழிக்க முடியாது. மாற்றமும் செய்ய முடியாது. நேற்று கையில் இருந்து போன தண்ணீர்! 


நாளை :

அடுத்ததாக வருத்தப் படக் கூடாதது நாளை என்ன நடக்கும் , நடக்கப் போகிறது, எப்படி நடக்கப் போகிறது என்ற மனசுமையுடனும் நன்றாக நடக்கும்  என்ற எதிர்பார்ப்புடனும் , நம்பிக்கையுடனும் எதிர் கொள்ளும் நாள். இதுவும் நம் கையில் இல்லை.

நாளை உதிக்கப் போகும் சூரியன் வெளிச்சத்தைக் கொண்டு வரலாம், அல்லது மேகத்தைப் போர்த்திக் கொண்டும்  வரலாம்!  
இது கருவுக்குள் இருக்கும் மழலை !

ஆக மிச்சம் இருப்பது இன்று மட்டுமே! 

இன்றே உன் கையில் உன் எதிரே இருக்கு.உனக்கு என்ன வேண்டுமோ போராடு,எதிர்கொள்,இன்றிருக்கும்இன்றைபொற்காலமாகக்கருது.தேவையில்லாமல் நேற்றையும் நாளையையும் நினைத்து இன்றை கோட்டை விடாதே!
நாளை என்ன  கொண்டு வருமோ என்று கவலைப் படாதே,நேற்று கொண்டு வந்ததைப்  பற்றியும் கவலைப் படாதே.

இன்றைக்காக மட்டுமே வாழப் பழகு, இந்த ஒரு நாளுக்காக தினமும் வாழ்!
அதுவும் இன்றைக்காக!!!!!!!!!!!!!!!!!!

நேற்று  என்பது  நிராகரிக்கப் பட்ட காசோலை.

நாளை என்பது பணம் வாங்கக் கூடிய காசோலை.

இன்று என்பது கைவசம் இருக்கும் காசு.  .


புத்தி சாலித் தனமாக கையில் இருக்கும்காசைப் பார்! 

பழயதை நினைக்கப் பார்க்காதே, அது கண்ணீரைக் கொடுக்கும்!

வரப் போவதை நினைக்காதே, அது பயத்தைக் கொடுக்கும்!

இந்தப் பொழுதுக்காக வாழ்,அது புன்சிரிப்பைக் கொடுக்கும்!


No comments:

Post a Comment