Thursday, November 10, 2011

கடவுளுடன் ஒரு உரையாடல்....3

மனுஷன் ஏன் சாபம் போடுறான்? அவனோட சாபத்துக்கும் , அந்தக் கால ரிஷிங்களோட சாபத்துக்கும் என்ன வித்யாசம்?

ரிஷிமுனிகள்நல்லமனசுடன் மனசைக்கட்டுப்படுத்திஒருமைப்படுத்தி
தங்களுடையகடும்தவ வலிமையினாலே முற்கொண்டு
என்ன நடக்கப் போகிறது என்றுதிருஷ்டி  கண்ணுடன்பார்க்க முடியும்,
அவர்களால் முடிந்த வரைசாபம்கொடுக்க மாட்டார்கள் ,எல்லாம்
முற்றிப் போனவுடன் தான் சபிப் பார்கள் .அவர்களால் சாபத்தின் உக்ரத்தைக்
 குறைக்கவும் முடியும்..

ஆனால் மனிதனின் சாபம் அவனோடபொறாமை , இல்லாமை, வறுமை , இயலாமை  ,இல்லாதக்  கொடுமையினால் வருகிறது. ஒருவனோட பலவீனமே அவனை சாபம் போட செய்கிறது .

அதனால் அவனுக்கு ஆத்ம திருப்தியே தவிர அவனுடைய சாபம் யாரையும் ஒன்றும் செய்யாது, சில சமயம் அவனையே அந்த சாபத்துக்கு உள்ளாகச்செய்யும்..

கோபத்தில்ஒருவன்குரலை உயர்த்தியோ ,அல்லது சாபம் போட்டாலோ,
அவனுடைய பலஹீனமும்,அவனுடைய குறைகளையும்
மறைக்கப் பார்க்கிறான்  என்று அர்த்தம்.  
மற்றவர்களை  யாராவது  புகழ்ந்தால் எரிச்சல் கொள்வது,கோபத்தில் 
 போட்டு  உடைப்பதுபேசாமல்  இருப்பது.....
மற்றவர்கள்  கையில்  பணம்  பார்த்தால்  எரிச்சல்  கொள்வது இது எல்லாமே இயலாமையினாலும் போராமையினாலுமே செய்வது.


ஜாதி மதம்எல்லாம் ஏன் கொண்டு வந்தீர்கள்?


எதுக்குன்னா,ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஜாதியைக் கொண்டு வந்து 
ஒருத்தர் மற்றொருவரைச்சார்ந்து இருக்கணும் என்பதற்காகவேத்தான்.

உதாரணத்திற்கு, நாவிதனை எடுத்துக் கொள்.அவனுடைய தொழில்
 தலை, முகச் சவரம் செய்வது,அவனிடம் ராஜா,மகாராஜாவிலுருந்து,
பிராமணன் வரை எல்லோரும் போயே ஆகவேண்டும்.
ராஜாவோ, பிராமணனோஅவனிடம்போகமாட்டேன்என்றுசொல்லமுடியாது! இதனால் அவர்களுக்கு நாவிதனுடைய கஷ்ட நஷ்டங்களும் தெரிய வரும்,அவனுடைய தொழில் தர்மங்கள் பற்றியும் தெரிய வரும்.என்ன தான் பிராமணன் மடி ஆசாரம் பார்த்தாலும் அவன் நாவிதனைத் தேடியே வர வேண்டும் அதே போல் தான் ராஜாவும்,என்ன வித்யாசம் என்றால் ராஜாவைத் தேடி நாவிதன் செல்வான். 

பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் ஒரே தொழிலையே செய்வதே அவர்களுக்கு அந்த துறையில் நல்ல அறிவு வளரவும், வெவேறு முயற்சிகளை செய்யவும் தான் ,அந்தக் காலத்தில் பரம்பரைத் தொழில் இருந்தது. மனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தால் தான்  நாட்டிற்கும், வீட்டிற்கும்  நல்லது . இப்போ கையையே எடுத்துக் கொள், ஐந்து விரல்களும் ஒரேமாதிரியாஇருக்கு? 

இல்லையே,ஒவ்வொன்றும் வெவேறு நீளத்துடன் இருந்தாலும் கையை
வைத்து ஒரு காரியம் செய்யணும் என்றால் எல்லாவிரல்களும் ஒன்று சேர்ந்து விடும். அதே போல்தான் மனிதர்களும்
 இருக்கணும்.

வீட்டில் சமையல் அறையில் தண்ணீர் வரவில்லை என்றால்,உடனடியாக
 எங்கேயிருந்து தண்ணீர் எடுப்பாய் ? குளியல் அறையிலிருந்து தானே?
குளியல் அறை என்பதால் அங்கே இருக்கும் தண்ணீர் கெட்டது, குடிக்க லாயக்கு இல்லாததுஎன்றாஅர்த்தம்? வேறு வழியில்லை
என்றால், அவசரம் என்றாலும் அங்கே இருந்து தண்ணீர் எடுப் பதில் ஒரு
தவறும்  இல்லை.   


சைவம் அசைவம் எல்லாம் யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? மனிதர்கள் ஆடு மாடுகளை வெட்டி சாப்பிடுவது அவர்களின் சுதந்திர  வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுகிறதல்லவா? 

சைவம் அசைவம் மனிதனாக ஏற்படுத்திய ஒன்று. அவனுடைய நாக்கு ருசிக்கு அவனாகவே வேட்டையாடி சாப்பிடவும் அதன் ருசி அவனை அதற்கு அடிமையாக ஆக்கிவிட்டுடுது.



 பெண்களை ஆணின் ஆதிக்கத்துக்குள் ஏன் வைக்கப் பட்டார்கள்? அது தவறில்லையா?

 மனு சாஸ்திரம் அந்தக் காலத்தில் பெண்களுக்கு ஒரு போர்வையாக இருக்கவே ஏற்படுத்தியது. பெண்களுக்கு இந்தக் காலம் போல் அவ்வளவாக   வாய்ப்புகள் இல்லை , படிப்பு இல்லை, கணவனே கண் கண்ட தெய்வமாக இருக்கச் சொல்லியது. அவர்களும் பெரியவர்களுக்காக அடிமையாக ஒரு கேள்வியும் கேட்காமல்  இருந்தார்கள்.
ஆண்களும் அதை முழுமையாக பெண்களை அடிமைப் படுத்துவதற்காகவே பயன் படுத்தினார்கள்.



அப்ப வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் வேலைச்சுமையை பகிந்திர்க்  கொள்வதில்  தவறில்லையே?

நிச்சயமாக ,ஒருத்தருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருப்பது அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் பாசத்தையும் புரிந்துக் கொள்ளுதலையும்   தான் தெரியப் படுத்துகிறது. வாழ்கையே அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு ஓட்டிக் கொண்டு போவதே! எந்தப் பக்கம் வண்டி பலஹீனமோ, அதற்கு எதிர்த்த பக்கத்தில் பளுவை வைப்பதே வாழ்க்கை.


இப்போ எல்லாம் உறுப்பு தானம் செய்யலாம் என்று தெரியப் படுத்துகிறார்களே? அதைப் பற்றி உங்களோட அபிப்ராயம் என்ன? ஒரு சிலர் கடவுள் நம்மை எப்படிப் படைத்தாரோ அப்படியே போவது தான் நல்லது என்கிறார்களே? கண் இல்லாமல் போனால் மேலே போகும் போது கண் தெரியாது என்று சொல்கிறார்களே?


ஒரு மனிதன் இங்கேயே  பிறந்து அவனுடைய  உடல் இங்கேயே எரிக்கப் படுகிறது. அவனுடைய ஆத்மா ( 20 )கிராம் தான் அவனை விட்டுப் பிரிகிறது. அவனுடைய ஆத்மா மட்டுமே மேலே செல்கிறது, கூடவே அவனுடய பாவ, புண்ணியமும் போகிறது அவனுக்கு துணையாக. அதனால் உறுப்பு தானம் தவறே இல்லை. ஒருவன் வாழ்க்கையில் உயிரோட இருக்கும் போது எந்த நாள் காரியமும் செய்யாவிட்டாலும் தானம் செய்வதால், அவன் போன பின்னும் அவனுடைய உறுப்புமற்றொருவர் மூலமாக வாழ்கிறது. இதை  அவன் புரிந்து கொள்ளணும்.

(தொடரும்....).

No comments:

Post a Comment