Sunday, November 6, 2011

ஹனுமார் வடை








தேவையான பொருட்கள்

 5  கிளாஸ் உளுத்தம் பருப்பு 

1  ஸ்பூன் சாதாரண அரிசி 

2  டீஸ் ஸ்பூன் மிளகு 

உப்பு தேவையான அளவு

 தண்ணீர்  

தட்டுவதற்கு 'சல சல' என்று சத்தம் போடும்   பிளாஸ்டிக் பேப்பரோ அல்லது நன்றாக ஈரம் பிழிந்த , ஈர டவலோ எடுத்துக் கொள்ளவும் .

உளுத்தம் பருப்பை ஊற வைக்கவும், ஒரு மணி நேரம் கழித்து மூன்று முறை அலம்பி   வடியப் போடவும்.

தண்ணீர் வடிந்த பிறகு ஒரு கை உளுத்தம் பருப்பை எடுத்து, மிளகு, உப்புடன் தண்ணீர் தெளித்து  அரைக்கவும். 

உப்பை முதலிலேயே சேர்த்தால் தன மாவு வடை தட்ட சரியாக வரும்.
பிறகு மிச்சம் இருக்கும் பருப்பை அரைகுறையாக நர நர என்று அரைத்து எடுக்கவும். முன்பே அரைத்த மிளகு உப்புகலவையுடன்நன்றாக சேர்த்து கலக்கவும்.அப்பப்போ தண்ணீர் தெளிக்கவும் . அரைத்த விழுது நன்றாக கெட்டியாக இருக்கணும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில்எண்ணெய்  விட்டு சுடவைக்கவும். 

பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் தெளித்து ஒரு முறை கையால் நன்றாக ஒருபக்கதிலிருந்து  மறுபக்கம் வரை நீவி தண்ணீரை சுத்தமாக எடுக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும்  உருட்டி வைத்த உருண்டையை போட்டு வட்டமாக தட்டி, நடுவே துளை போடவும்.இப்படியாக எல்லா மாவையும் தட்டி வாணலி கொள்ளும் வரைப் போட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். 

எல்லாம் எடுத்த பிறகு, நல்ல முழுசாக இருப்பவற்றை எடுத்து நூலில் கோத்து மாலையாகப் போடவும்.



ஹனுமார் வடை தயார்.

No comments:

Post a Comment