பைங்கன் பர்தா ரொம்ப பேருக்குப் பிடிக்கும் ,ஆனால் அதை எப்படி செய்வது என்றுத் தெரியாது. இதோ அதை எப்படி செய்வது...
ஒரு பெரிய கத்தரிக்காய் [ 250 கிராம் ]
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
வெங்காயம் மீடியம் ஒன்று
தக்காளி மீடியம் ஒன்று
தனியா பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு ,
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
கத்தரிக்காயை எண்ணெய் தடவி காஸ் அடுப்பில் சுடவும் , எல்லாப் பக்கமும் சுடும் வரை திருப்பிப் போட்டு சுடவும்.
சுட்டதும் , ஆறவைக்கவும்.
வெங்காயம் , தக்காளி பொடிப் பொடியாக நறுக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து , கலக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து சுருள வதக்கவும்.
ஆறின கத்தரிக்காயை தோலை உரித்து நன்றாக பிசைந்து , வதக்கிய தக்காளி வெங்காயத்துடன் சேர்க்கவும்.
பிறகு தனியா பொடி, மிளகாய் பொடி , உப்பு போட்டு ஐந்து நிமிடம் வதக்கியவுடன் இறக்கவும்.
வேண்டுமானால் பச்சைப் பட்டாணி சேர்க்கலாம்.
No comments:
Post a Comment