Friday, November 4, 2011

இங்கே ............................


இங்கே நீங்கள் படிக்கப் போவது ஒரு மனைவியை இழந்த கணவன் எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறார் என்றும் ஒரு ஆண் ,பெண் துணை இல்லாமல் , தான் பெற்ற பிள்ளைகளைச் சார்ந்து இருப்பதில் என்ன என்ன ப்ளஸ் ,மைனஸ் பாய்ண்ட்ஸ் இருக்கு என்றும் சொல்கிறது.

இந்த மாதிரி தான் எல்லோர் வீட்டிலும் இருக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியும் நடக்கிறது என்று தான் சொல்ல வருகிறேன்.
 
அங்கே  நமசிவாயம் சில  வருடம் முன்பாக மனைவி கற்பகத்தை இழந்தவர்.  இவருக்கு மூணு பையன்கள்,ஒரே ஒரு பெண் தான். அனைவருக்கும் திருமணம் முடித்து பேரன் பேத்திகளும் பிறந்தாச்சு . ஆனால் கற்பகம் இருந்தவரை அவளுடைய அருமை கொஞ்சம் தான் தெரிஞ்சது, ஆனால் இப்போ மகன்களுடனும் மருமகள்களுடனும் மூன்று மூன்று மாசம் இருந்து, கணக்கு வைத்தால் போல் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற  வேண்டுமாக  இருக்கு, அதுவே அவரை வாட்டி  விடுகிறது.

மாசம் இவருக்கு இருபதாயிரம் பென்சன் வருகிறது. யார் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு , இவரை வைத்துக் கொள்வதால் , ரூபாய் ஏழாயிரம் [ இரண்டாயிரம் சாப்பாடு+ ரூம் வாடகை மின்சாரகட்டணம் வகையறா..}....கொடுத்து விட வேண்டும்.

ஒரு மகன் வீட்டில், யாருடனும் ரூமை ஷேர் செய்ய வேண்டாம் . மற்றொன்றில் கெஸ்ட்ரூமில் , மூணாவதாக இருப்பவன் வீட்டில் கிழே ரூம். மகள் வீட்டில்தான் சவுகரியம் அதிகம் அவளுடன் அவள் மாமனாரும் இருப்பதால் அவருக்கு ஒரு நல்ல கம்பனி வாக்கிங் போக, கோயில் ,குளம் போக என்று. .
ஜனவரி ,பிப்ரவரி ,மார்ச் மாசங்கள் மூத்த மகன் ரமேஷ் வீட்டில். இங்கு அவருக்கு பூரண சுதந்திரம்  உண்டு  .அவ்வளவாகப் பிரச்சனைகள் இல்லை , அவன் மனைவி  ரத்னா பெரிய குடும்பத்துப் பெண், போதாதக் குறைக்கு, கற்பகம் ட்ரைனிங் வேறே !அடங்கி ஒடுங்கி மாமனாருக்காக மட்டு, மரியாதையுடன் , ரொம்ப அன்பாக கவனிக்கப் பட்டார் நமசிவாயம் .

அவர்களுடைய இரு பெண்கள் ராதிகா ,ஜோதிகா இருவருமே வீட்டு வேளைகளில் கை தேர்ந்தவர்கள் , ஒழுக்கமான பேத்திகள். நமசிவாயத்திற்குஇங்கே ரமேஷ் வீட்டில் இருக்க ரொம்பப் பிடிக்கும். தன்னால் முடிந்த வரை வீட்டு வேலைகளில் கை கொடுப்பார், அவர் உதவி செயாவிட்டாலும் யாரும் ஏன் என்று கேட்பதில்லை.சமயத்திற்கு காபி, டிபன், சாப்பாடு என்று ஒரே ராஜ மரியாதை தான்.
......................................................................................................

ஏப்ரல், மே,  ஜூன் : அடுத்ததாக சதீஷ், இவனுடைய பொண்டாட்டி  ஸ்மிதா வேலைக்குப் போகிறாள். அடுத்தடுத்து கோகுல், ராகுல் .இரண்டு பையன்கள்.சரியானஅடங்கப்பிடாரிகள்.எதிர்த்துப்பேசுபவர்கள்.இவருக்கென்று தனி ரூமே இருக்கு. காபி டிபன் சாப்பாடு எல்லாம் 'ப்ளாஸ்க்', 'ஹாட் பாக்' என்று டிபன், மதியம் சாப்பாடு என்று லேபில் ஒட்டாதக் குறையாக ரூமிற்கு வந்து விடும். சாப்பாடு எல்லாம் கணக்காக ரேசன் மாதிரி தான் .குளிரோ, மழையோ, ஜுரமோ ,சளியோ எந்தப் பதத்தில், எவ்வளவு   சூட்டில் இருக்கோ அதையே தான் சாப்பிடணும். அவருக்கு மூன்று மாசத்தில் நல்லப் பழகிவிட்டது.

இவரிடம் எதிர் பார்க்கப் பட்டதெல்லாம் ஒன்றே ஒன்று , மறை முகமாக , 'எங்கள் வீட்டு விசயத்தில் தலையிடாதே' என்று. ரூமை விட்டு வெளியே வந்தால் தானே இதெல்லாம்! ரூமிலேயே 'அட்டாச்ட்' பாத்ரூம் , டிவி, பால்கனி ,நியூஸ் பேப்பர் என்று எதற்கும் வெளியே வரவேண்டாம். அவரிடம் எப்பொழுதும் ஒரு சாவி இருக்கும், அவருக்கு வெளியே போக கொள்ள வர என்று .

எப்பொழுதும் சதீஷ், ஸ்மிதாவுக்குள்   சண்டை சச்சரவுதான்.இவர்கள் சண்டை சச்சரவிற்கே டைம் போராததால் , இரண்டு பையன்களும் 'கேர் ஆப் பிளாட்பார்ம் 'தான். நிச்சயம் உருப்படாதுகள் . பணத்தின் அருமை தெரியாமல் வளத்தாச்சு! இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்மிதா சண்டைப் போட்டு தனக்கு வேண்டிய மாசங்களில் மாமனாரை வைத்துக் கொள்வதாக பேச்சு.

எல்லோரும் கலந்து எப்பொழுது யார் யாரிடம் என்ற கேள்வி வந்த போது, இவள் முதலிலேயே மற்றவர்கள் எதுவும் சொல்வதற்கு முன்னால் முந்த்ரிக் கொட்டையாக பேசினாள்.
" சென்னை வெய்யில் சித்திரை யிலிருந்து கொன்னுடும் ,அதனாலே ஏப்ரல் மாசத்திலேருந்து மூணு மாசம் எங்ககிட்ட பெங்களூர்ல இருக்கட்டும் . அப்பாக்கு குளுகுளுன்னும் இருக்கும் ,எங்களுக்கும் இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் லீவுல பசங்களோட அப்பா டைம் ஸ்பென்ட் பண்ணா மாதிரி இருக்கும்." 

 அவளுடைய உண்மையான நோக்கம் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை . நாலு பேர் இருக்கும் வீட்டில் இரண்டு பிறந்த நாள் , ஒரு வெட்டிங் ஆனிவர்சரி இந்த மூன்று  மாதத்துக்குள்ளே  தான் வருகிறது .அந்தச் சாக்கை வைத்து மாமனாரிடமிருந்து பணம் கரக்கலாமேன்னு  தான் அன்பும் பாசமும் போர்த்திய சுய நல வாதியாகப் பேசினாள்.

...........................................................................................................

மூன்றாவது மகன் விக்னேஷ் வீட்டில் ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் . அவன் மனைவி விமலா நல்லவள் தான். வீட்டோட    இருக்கிறோமேன்னு கொஞ்சம் வருத்தம் அதனாலே சாயந்திர வேலைகளில் கணக்கு ட்யுஷன் எடுக்கிறாள் , அதனால் அவளுக்கு நிறைய வேலைகள் முன்பாகவே செய்ய வேண்டி உள்ளது.

இங்கே இவருக்கு கீழேயே ரூம் கொடுத்திருக்கிறார்கள் , மாடியில் விக்னேஷ் ,விமலா , மகள் வித்யுர்லதா , ஆறு வயசு மகன் விஜய் இருக்கிறார்கள் . இது விக்னேஷ் ஆபிசில் லோன் வாங்கி கட்டிய வீடு. ரொம்பச் சிக்கனமாக குடும்பத்தை சமாளிப்பதுடன் , வித்யுர்லதாவிர்காகவும் விமலாவின் ட்யுஷன் பணத்தை அப்படியே ஆர் டி போட்டாகிறது . 

நமசிவாயத்திற்கு ரொம்பப் பெருமை , ஸ்மிதா மாதிரி தாம் தூம் பண்
ணாம , சமத்தாக குடும்பம் சமாளிப் பதால் . வீட்டில் டிவி இவருக்காக மட்டுமே .விமலாவிற்கு வீட்டு வேலைகளுடன் கணக்கு க்லாசிற்காகவும் தயார் பண்ண வேண்டியதால் , கூட மாட நமசிவாயத்தின் உதவியும் வேண்டியிருக்கு.காலையில் பால் வாங்கிக் கொண்டு வருவதிலிருந்து, மத்யானம் விஜயை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவது.இரவில் எல்லாக் கதவுகளையும் பூட்டுவது, விக்னேஷுடன்   கடைக்குப் போய் கறிகாய் வாங்கி அவற்றை ஆய்ந்து , தனித் தனியாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பது  வரை எல்லாம் முகம் சுளிக்காமல் கற்பகம் இருந்தால் எப்படி செய்திருப்பாளோ அப்படியே செய்தார் .டெலிபோன் பில் ,எலெக்ட்ரிசிடி பில் , வீட்டு டாக்ஸ், எல்லாம் வெளியே போய் கட்டுவது, ரேசனில் சாமான் வாங்குவது என்று  வெளி வேலைகளையும்  செய்வார். 

நேரத்திற்கு சாப்பாடு, தூக்கம், நேரத்திற்கு தன் வேலை என இருப்பார். வீடு மாடியும் கீழுமாக இருப்பதால் . மத்யான வேளையில் விமலா மாடிக்கு தூங்கப் போயிடுவாள் , அப்பொழுது இவர் தான் காவல் காரன், வாட்ச்மேன். சேல்ஸ் ஆளுகள் வந்தால் , போஸ்ட் மென் ,குரியர் என எல்லாவற்றிற்கும் இவர் தான் 'ஆல் இன் ஆல்' நமசிவாயம் .

சாயங்காலம் ஆனால் ட்யுசனுக்குபசங்கள் வருவதால் இவர் தன் ரூமிற்குப் போயிடுவார் . சில சமயம் விமலாவிற்கு உடம்பு முடியாவிட்டாலோ, அல்லது வீட்டு  வேலை இருந்தாலோ , கல்யாணம் கார்த்திக்கு போக நேர்ந்தாலோ இவர் தான் ''பிராக்ஸி 'டீச்சர் . விமலா கணக்குகள் போடச்சொல்லியோ , அல்லது மினி எக்ஸாமோ நடத்துவாள் . இவர் சுபர்வைஸ் செய்யணும், ரிப்போட்டும் கொடுக்கணும்.இங்கே ஒரு குறையும் இல்லை நமசிவாயத்திற்கு .

.............................................................................................................

கடைசியாக  மகள் மல்லிகா வீட்டில் ,அக்டோபர், நவம்பர், டிசம்பர்  மாதங்கள். மாப்பிளை மகேந்திரன்  தன அப்பா பரமசிவனுடன்  தான் இருக்கிறான்,சொந்த வீடு ,பெரிய தோட்டம் . ஒரே வாரிசு.மகள் மல்லிகாவும் முகம் கோணாமல் நல்ல மருமகளாக கவனித்துக் கொள்கிறாள். அவளுக்கு ஒரு மகன் , ஒரு மகள் , இருவரும் அவ்வளவு ஆசையுடனும் ,அன்புடனும் தாத்தா, தாத்தா என்று பழகுவார்கள். நமசிவாயத்திற்கு இங்கு இருப்பதில் ரொம்பவே விருப்பம் . எப்பொழுதுடா அக்டோபர் வரும் என்று எதிர் பார்ப்பார்.

இங்கு மல்லிகாவின் மாமனாருடன் வெளியே போகப் பிடிக்கும். பாலிடிக்ஸ் இல்லாத பேச்சு, அரசியல் ,நாட்டு நடப்பு , என்று ஜெனரலாக பேச்சு இருக்கும் , சமயத்தில்  மாப்பிளையும் கூட சேருவான் இவர்களுடன்.நல்ல கம்பெனி ,இருவருக்கும் ஒரே மாதிரி உபசரிப்பு.

நமசிவாயமோ பரமசிவனிடம் தன மகன்களைப் பற்றி ஒன்றும் சொல்லாவிட்டாலும் , பரமசிவத்திற்கு அவருடைய கஷ்டங்கள் புரியும்.அவருடைய மனசு புண்படாவண்ணம் ஒரு நண்பனுடன் பழகுவது போலப் பழகுவார். 

இங்கே இப்படி இருக்க ...................அங்கே......................................[ தொடரும் ] 
............................................................................................................................

No comments:

Post a Comment