Tuesday, November 1, 2011

ஐயோ பாட்டி வரா ! 3



அங்கே ஒளிந்திருந்து பார்த்த இரண்டு கண்ணும் நாலு காதும் வேறு யாரும் இல்லை 'ஜான்' 'கிச்'சோட இரட்டை பிறவிகளான, ஒரு பெண் ஒரு பையனுமே !பையன் பெயர் 'சந்தோஷ்' ஆனால் கூப்பிடுவது 'ஹேப்பி' பெண்ணின் பெயர் ஷாந்தி கூப்பிடுவது 'பீஸ்' .

இருவரும் ட்வின்ஸ் ஆக இருந்தாலும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவர்கள் , ஷாந்தி அம்மாவின் நிறம் அப்பாவின் முகச்சாயல் ,சந்தோஷ் அப்பாவின் நிறம் அம்மாவின் முகச்சாயல். 

வேண்டும் என்னும்போது இருவரும் ஒன்று சேர்ந்து பெற்றோர்களை  கலக்குவார்கள் . இவர்களுக்கு அடுத்து நாலு வருஷ வித்யாசத்தில் பிறந்தவன் தான் 'விக்கி'   என்கிற  விகாஸ் . ஷாந்தி அப்பா செல்லம் .ஒரே பொண்ணு என்பதால் அவளின் ஆசைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்.
ஹேப்பியும்,பீஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதோடல்லாமல், உடனடியாக, ரூமை விட்டு வெளியே வந்து ஜானின் கவலைக்கு பதில் கொடுத்தார்கள் .

"அம்மா, நீங்க ஏன் கவலைப் பட்ரீங்கோ?நாங்க இருக்கோம்ல , கொண்டா நீ சொல்லிண்டே போ, நாங்க எழுதறோம்"

என்னடா எழுதப் போறீங்கோ, என்ன ஏதாவது கனாக்   கண்டீங்களா என்ன  ? 
அம்மா நீ எங்ககிட்டேந்து எதையும்   மறைக்க முடியாது, ஏன்னா , நாங்க எல்லாத்தையும் ஒன்னு விடாமக் கேட்டுண்டு இருந்தோம்!" 

"அடக் கன்றாவியே?" ஒங்களுக்கு தெரியப் படாதுன்னுன்னா நினைச்சுண்டு இருந்தோம்?

ஆமாம் நீ பாட்டிக்கு யாரோட ரூமைக்   குடுக்கப் போறே? நான் என் ரூமைக் கொடுக்க மாட்டேன்., உனக்கு வேணுன்னா, பாட்டியோட ரூமை உன் பாட்டிக்கு குடு "

"இருடா , முந்திரிக் கொட்டையாட்டம், நாங்க இன்னும் ரூமைப் பத்தியே யோசிக்கலை ,மொதல்ல ரெண்டு பெரும் போய் பல்லைத் தேச்சிண்டு வாங்கோ "

அம்மா , நீ என் ரூமை எடுத்துக்கோ , " இது விக்கி ....

டே , என்ன சொன்னே? உன் ரூமா? எதுடா உன் ரூமு? நீ மட்டும் தனியா இல்ல ,அதைதெரிஞ்சுக்கோ ...இது ஹேப்பி . 

"ஐயோ போறும் கொஞ்சம் நிறுத்தறீங்களா?"
.................................................................................................
எல்லாம் சமரசம் ஆயி , கடசில பாட்டிக்கு கெஸ்ட் ரூமே கொடுத்துடலாம்னு முடிவாச்சு .
ஷாந்தி க்கு என்ன தோனித்தோ , அம்மா நீயும் அப்பாவும் இனிமே செல்லமா பேர் சொல்லிக்   கூப்பிட முடியாது, என்னப்பண்ணப் போறீங்கோ?

அதுக்குள்ளே எங்கயோப் போயிட்டியே?மொதல்ல ஷாந்தி ஒழுங்கா பாவாடை தாவணி, இரட்டைப் பின்னல் போட்டுக்கணும் ,கைல வளையல், காதுல தோடு,நெத்தியில பொட்டு,  கால்ல கொலுசு போட்டுக்கணும் .

..ஹேப்பி இந்த அரை பாராமுடாவெல்லாம் தூக்கிப் போட்டுட்டு நிக்கரைப் போட்டுக்கணும். நெத்தில நன்னா பளிச்சுன்னு விபுதி இட்டுக்கோ " 

அப்ப, அப்பாவும்' பர்முடா' வைப் போட்டுக்கக் கூடாது ,டீல்?

மூணு பேரும் ஸ்கூல் லேந்து வந்ததும் கண்டிப்பா  யூனிபார்மை மாத்தனும் , தெரிஞ்சதா? "

"உங்க பிரெண்ட்சை எல்லாம் கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு அழைச்சிண்டு வராதீங்கோ. எப்பப் பாரு கம்ப்யுடர்  முன்னாடி ஒக்காரக் கூடாது.
தெனம் காத்தாலை , சுவாமிக்கு ஸ்லோகம் சொல்லணும் , தோப்புக் கரணம் போடணும்.  நம்ம எல்லாரும் நாளையிலேந்து ஒண்ணா ஸ்லோகம் சொல்லப் போறோம்."

"என்னாலெல்லாம் முடியாது, எனக்கு பாட்டு கிளாஸ் இருக்கு",  இது ஷாந்தி . 
என்னாலையும் முடியாது, எனக்கு டென்னிஸ் கோச்சிங் இருக்கு.இது ஹேப்பி .
"கிளாஸ் இருக்கு இல்ல,ஸ்லோகம் எல்லாரும் சொல்லணும் அது காத்தாலையா இருந்தாலும் ராத்திரியா இருந்தாலும் சரி , நோ ஆப்சன் .."

"ஏம்பா நீ என்ன சந்த்யாவந்தனம் பண்ணப் போறயா? நல்ல காலம் , எனக்கு இன்னும் பூணல் போடல!" சொல்லுவடா நீ உனக்கு என்னப்  பாத்தா அவ்ளோ கிண்டலா தெரியறதா?"

"அம்மா எனக்குப் பசிக்கறது, நூடுல்ஸ் பண்ணித் தாயேன்?''
இதப் பாரு ,இந்த நூடுல்ஸ் ,பீடுல்ஸ் எல்லாம் இன்னியோட சரி , பாட்டி வரப்போ அரிசி உப்மா,பொங்கல் பிடி கொழுக்கட்டை தான் டிபன் ,கொஞ்ச நாளைக்கு நூடுல்ஸ், மைக்ரோ வேவ்  எல்லாம் மேலக் கட்டிப் போட வேண்டியது தான். மடியிலத் தட்டை வச்சிண்டு டிவிப் பாத்துண்டே சாப்ட்ற கதை எல்லாம் நடக்காது. எச்ச, பத்து,பாப்பா பாட்டி. எல்லாருக்கும்  ஒழுங்கா டைனிங் டேபிள்ள தான் சாப்பாடு .

ஏம்மா நீ என்ன பாட்டியாட்டம் பொடவக் கட்டிப்பயா? அப்ப ரொம்ப டைம் ஆகாது? இது கேட்டது ஷாந்தி ,  ஏன்னா ,இப்ப பத்து நாளைக்கு முன்னாடித் தான் ஜான் ஒம்பது கஜம் பொடவக் கட்டிண்டா அவ அண்ணா  கல்யாணத்துலே,ஷாந்திக்கு தல வாரக் கூட டைமில்லாம, ஷாந்தி வேற வழியில்லாம அவளே தல வாரிப் பின்னிண்டா . அதனாலத்தான் இந்தக் கேள்வி .

ஏம்மா, நீ ஆபிஸ் போய்ட்டா யார் சமப்பா, பாட்டிக்கு?அப்பா சமச்சா பாட்டிக்குப் பிடிக்குமா?

'நான், பாட்டி ஊர் போறவரைக்கும் லீவ் போடப் போறேன்.'

.......................................................................................................................
நாளைக்கு சுமதி பாட்டி வரா! டோட்டடங் , டு,   டு  .............இது வாலு விக்கி ....

[தொடரும் ]

No comments:

Post a Comment