Tuesday, October 25, 2011

பாவ் பாஜி சப்ஜி [ paav baaji ]


தோல் உரித்த உருளைக் கிழங்கு மீடியம்           4 

 தோல் உரித்தகேரட்                        மீடியம்          4 

உரித்த பட்டாணி                             1  கப் 

குட மிளகாய்                                     மீடியம்          1      

பீன்ஸ்                                                10 

வெங்காயம்             மீடியம்           6
           
தக்காளி                   மீடியம்            6 

இஞ்சி பூண்டு விழுது                 அரை கப் 
தனியா  பொடி                     ஒரு ஸ்பூன் 
ஜீரகம்     பொடி                             ""
மிளகாய் பொடி                            ""
பாவ் பாஜி மசாலா                      3   ஸ்பூன் 

  எண்ணெய், நெய் அல்லது வெண்ணை   1 கப் 

                  *                                           *                                            *

செய் முறை :

உருளைக் கிழங்கு,கேரட் ,குட மிளகாய் ,  பீன்ஸ் அனைத்தையும் நன்றாக அரிந்து குக்கரில் உரித்த பட்டாணி , உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து   வேக வைக்கவும்.       

வெந்ததும் வெளியே எடுத்து மசிக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக பொடிப் பொடியாக அறிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.அது நன்றாக வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை கிளறவும். பிறகு பொடிப் பொடியாக அறிந்த தக்காளியைப் போட்டு நன்றாக கிளறவும். தக்காளித் துண்டுகள் கொஞ்சம் கூடத் தெரியக் கூடாது.இது நல்லா மொத்த விழுதுகளுடன் கலந்து கூடியபின் மசித்து வைத்தகாய்கறிகளைப் போட்டு, தனியா, ஜீரகம், மிளகாய்ப் பொடி பாவ் பாஜி மசாலாவையும்  சேர்த்து கிளறி 5   நிமிடம் கழித்து நெய் அல்லது வெண்ணை போட்டு கலந்து மூடி வைக்கவும். 

வேண்டுமானால் பரி மாறும் முன் கொத்தமல்லி தழை நறுக்கி தூவவும்.அரை  மூடி  எலுமிச்சம்பழம்  கூட  பிழியலாம் .


No comments:

Post a Comment