Wednesday, October 26, 2011

கேபேஜ் ,கேரட் மசாலா சப்ஜி


கேபேஜ் 1 /2 கிலோ
 கேரட்     4
 வெங்காயம் சின்னது 2
 பச்சை மிளகாய்  3
4   பூண்டு  பல் 
1  கப் துருவிய தேங்காய்  
துருவிய கேரட்
கருவேப்பிலை ஒரு கீத்து

செய் முறை :

முதலில் கேபேஜை பொடி பொடியாக மெல்லிய நீள துண்டுகள் போல் அறிந்து கொள்ளவும்.அதே போல் கேரட்டை துருவிக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு வெடித்ததும் , ஜீரகம் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , போட்டு, பிறகு  பொடிதாக நறுக்கிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய  பூண்டு , கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். ஐந்து நிமிடம் கழித்து கேபேஜைபோடவும். போட்டு கிளறி மூடி வைக்கவும். கேபேஜ் முக்கால் வாசி வடகியாடும் துருவிய கேரட்டை போட்டு கிளறி உப்பு போட்டு மூடவும். ஐந்து நிமிடம் கழித்து துருவிய தேங்காயை தூவி இறக்கவும்.


No comments:

Post a Comment