முகேஷ் , அசிஸ்டன்ட் டைரக்டருக்கு உள்ளுர ஒரு பயம் இருந்துக் கொண்டே இருந்தது. பெரிய இடத்து சிபாரிசு என்பதனால், வாயை பொத்திண்டு அப்பாஸை பாடும் குழுவில் சேர்த்துக் கொண்டான் . ம்யுசிக் டைரக்டர் வந்தவுடனேயே ரெகார்டிங் ஆரம்பிக்கச் சொல்லியாச்சு.
அப்பாஸின் குரல் தனியாக எடுப்பாகத் தெரிந்தது , நடுங்கிக் கொண்டேதான் , இருந்தான். அப்பப்ப டைரக்டர் ஏ .ஆர்.அதியமானின் முகத்தில் நெளிவு சுளிவு வந்து போனதையும் பார்க்கத் தவறவில்லை!ஒரு வழியாக ரெகார்டிங் முடிந்தது , இருந்தாலும் , எல்லோரையும் வெளிய உட்காரச் சொன்னான்.
ரெகார்டிங்கை போட்டுப் பார்த்தான் , அதில் அப்பாஸின் குரல் தனியே தெரியும் போதேல்லாம்,ஹெட் போனை வைத்து உன்னிப் பாகக் கேட்டான்.முகேசிற்கு ஒன்று மட்டும் நன்றாகவேத் தெளிவாகத் தெரிந்து விட்டது, எது என்ன வானாலும் ஒன்றும் பேசாமல் இருப்பது தான் தனக்கு நல்லது என்று முடிவு கட்டினான். அவன் மனசில் இருப்பது புரிந்தது போலே அதியமான் , "முகேஷ் , அந்த தனிக் குரலுக்கான ஆளை உள்ளே கூப்பிடுங்க கொஞ்சம்". அவ்வளவு தான், முகேஷிற்கு தான் நினைத்தது சரி, இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சோமோ தெரியலை , இருந்தாலும் சாரிடம் சொல்லிடலாம்னு முடிவெடுத்தான்.
"சார், அந்த பையன் அப்பாஸ் பெரிய இடத்து சிபாரிசு சார் , அவனுக்கு 'ஆட்டிசம்'வேற சார் , மத்த பசங்கள் யாரும் கூட நிக்க மாட்டேங்கறாங்க.."
என்ன சொன்னீங்க,'ஆட்டிசமா'? இருந்தா என்ன? பாட்டுக்கு , குரல் தான் முக்கியம் , அவனுடைய மாற்று திறனைப் பாரு, என்ன நல்ல குரல் வளம், கணீர்னு , இவன் பெரிய ஆளா வருவான் பாருங்க , இவனுக்கு நான் ஒரு 'சோலோ' போடப் போறேன்., அப்ப தெரியும் 'ஆட்டிசமா',பாட்டிசமான்னு '.
சொல்லி கோபத்தில் நாற்காலியைத் தள்ளி எழுந்து ஊன்று கோலைத்தேடி எடுத்து நடந்தான் அதியமான்.
Manjula87
ReplyDelete: மாற்றுத்திறன் !
Short, meaningful story.......
u gave a great advice to the people who isolate the physically challenged and gifted children because of their misconceptions
Keep rocking mam............
.........................
upfsabari
romba nalla story mathangi.. super..