Sunday, October 23, 2011

அக்டோபர் 27 ,2011.



நளாயினிக்கு கொஞ்ச நாளாக ரொம்பவே சந்தோசம் தாங்கலை. இருக்காதா பின்னே? நூறு தரம் தலையிலே அடிச்சு அடிச்சு சொல்லி கடைசியிலே தான் அவள் கணவன் மணிகண்டன் ஒத்துக் கொண்டான். அவனை சரின்னு சொல்ல வக்கரதுக்குள்ளே அவ பட்ட பாடு அவளுக்குத்தான்  தெரியும்.

இருபத்தி ஆறாந்தேதியும்வந்தது , எப்படா விடியும்னு ஆவலா காத்திருந்தவ  , மாமனார் ராஜாங்க சபேசன் எப்படி இருக்கார்னு பார்க்கப் போனாள்.அவர் கொஞ்சமும் சலனமில்லாமல் , எப்போதும் போல  இருந்தார், அதுவே அவளுக்கு வயிற்றில் பாலை வார்த்தால் போல இருந்தது,அவருடன் கொஞ்சம் சலமிருந்தாலும் மணிகண்டன் மனசு மாறிடுவான்.

அவர்கள் ஒரே  பையன் மனோஜிற்கு அம்மாவின் சந்தோசம் ஏன் என்று விளங்கவில்லை.ஆனால் ஒன்று மட்டும் நல்லாவே தெரிந்தது.அம்மாவின் சந்தோசத்திற்கும் தாத்தாவிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு.
நளாயினி மாமனாருக்காக எல்லாம் எடுத்து வைத்தாள் பொறுப்பான மருமகளாக.மனிகண்டனுக்கே அவள் அவ்வளவு பொறுப்பானவளான்னு இது நாள் வரை தெரியாமா இருந்தது .

நல்ல நேரமாப் பார்த்து கால் டாக்ஸி வரவச்சு ,மாமனார் சாமான்களை அதிலே ஏத்தி,நளாயினி, மணிகண்டன், மனோஜ் பின்னாடியும் சபேசன்  முன்னாடியும் உட்கார ,வண்டி 'விஸ்ராந்தி' நிலையத்தை நோக்கி போனது.
போகும் சமயம் ராஜாங்க சபேசனுக்கு ஒரு வருடம் முன்பு , மனைவி கோமதியுடன் நடந்த உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது .

அவர்களின் வயது காரணமாக இருவருமே ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர். இரண்டு மூன்று பசங்கள் இருந்தால் இந்த முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.  ஆனால் இவர்களுக்கு இருப்பதோ ஒரே மகன். யார் முதலில் போனாலும், மற்றவர், மகன் மணிகண்டன் முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால் முழு மனதோடு எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் போகணும்னு . அதனால் சபேசன்  ஒரு உணர்ச்சியும் இல்லாமல் மன நிறைவோடு, விஸ்ராந்தி நிலையத்தை அடையும் வேளையை  எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 27  அவர் மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தியதை மகனோ, மருமகளோ கவனிக்கவில்லை , ஆனால் மனோஜின் மனசில் சொல்லவன்னாத சங்கடம் இருந்தது , அது என்ன என்று அடுத்த தொடரில் பார்ப் போம்.


No comments:

Post a Comment