கடவுள்: உனக்கு என்னுடன் உரையாட ஆசை என்று சொன்னாயே?
நான்: ஆமா ,என் மனசுக்குள் நெறைய கேள்விகள் அதற்கு பதில் தெரியாம திண்டாடுகிறேன்.உங்களால் எனக்காக சில நிமிஷம் ஒதுக்க முடியுமா?
சொல்.
நீங்களே படைத்த மனிதர்கள் உங்களுக்கே ஆப்பு வைக்கிறார்களே உங்கள் பெயரால், அதற்கு உங்களுடைய பதில் என்ன?
நான் படைத்தாலும், அவர்கள் செய்வதெல்லாம் நான் செய்ததாக ஆகாது, நீ நினைக்கிறா மாதிரி அவர்கள் வைக்கும் ஆப்பு அவர்களுக்கே என்று போகப் போகத் தெரியும். நீ எதை வைத்து இந்தக் கேள்விக் கேட்டாய் என்று தெரியும் பெண்ணே!
உலகில் இவ்வளவு அநியாயம் , அநீதி நடக்கிறது, நீங்கள் கம்முனு இருந்தால் எப்படி?எதாவது செய்ய வேண்டாமா?
நான் செய்வதைத் தான் நீ பார்த்துக்கொண்டிருக்காயே?
நானில்லாமல்எப்படிசுனாமி,பூகம்பம்,வெள்ளம்,எரிமலைஎல்லாம்வருகிறது?
இது உடான்சு, நம்ம இந்தியாலே நீங்க யென்ன செஞ்சீங்க,வெள்ளம், சுனாமி,எல்லாம்வந்தாலும் அதுஒரு பாவமும் அறியாத பாமர ஜனங்கலன்னாபாதிக்கறது?
நன்னா மக்கள் பணத்தை தின்னுட்டு ஏப்பம் விட்டுண்டு இருக்கற அரசியல் வாதிகளை அப்படியே வுட்டு வச்சிருக்கீங்களே?
உனக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான், எத்தனைஅரசியல்வாதீங்க பசங்க படிச்சு கிழிச்சிருக்கானுங்க ?எத்தனை பேரு சுகர் ,பிபி ,ஒபீசிட்டி, கேன்சர்னு இல்லாம இருக்கானுக?.ஒரு நா இல்லன்னா ஒரு நா தண்டனையை அனுபவிச்சுத் தான் தீரணும்!.
அதெல்லாம் சும்மா காதுல பூ சுத்தரா மாதிரி, நல்லா எல்லாத்தையும் என்ஜாய் பண்ணப் புறம் அவனுக்கு தண்டனை கொடுத்தா என்ன அர்த்தம்?
நீ தெரியாம பேசற,பாரு எல்லாரும் நாளைக்குன்னு ஓடின்ன்டு இருக்காங்க,ஆனால்அதுலேஎன்னஆறதுன்னாஇன்னிக்காகவும் வாழறது இல்லை ,நாளைக்காவதும்வாழறது இல்லை.என்னமோ சாவே கிடையாதுன்னு வாழராப்போலே இருக்கு.
ஒரு நிமிஷம் ,அப்ப நீங்களே ஏன் எப்ப சாவான்னு சொல்லக் கூடாது.?
அதுலே தான் இருக்கு விஷயம் இப்போ ஒருத்தனுக்கு, தான்எப்ப சாவான்னு தெரிஞ்சா, மொதல்லே அவன் உயிரோட இருக்கற வரைக்கும் போறும்னு சம்பாதிப்பான். பணம் சம்பாதிக்கறதுக்காக ஒடம்ப கெடுத்துக்கறான்,அப்புறம் அந்த ஒடம்புக்காகவே சம்பாதிச்ச பணத்தைகொட்ட்றான்!அவனுக்கு வேண்டாதவனை எல்லாம் வெட்டிப் போட்டுடுடுவான்.
நாளைக்குஉயிரோட இருப்போங்கறநம்பிக்கையிலதான் வாழ்க்கையே ஓடறது!
சின்னக் குழந்தைகள் பெரிசா ஆகணும்னு எதிர்பார்க்கரதுங்கோ,அதேபெரியவங்க சின்னதா ஆகறதுக்கு பாக்கறாங்க.
சரி கடவுளே, எம் பசங்க எங்கிட்ட என்னன்ன கத்துக்கணும்?
அவங்களா வந்து என் மேல்அன்புசெலுத்துன்னு கண்டிசன் போட முடியாது, அவங்க நடந்துக்கற விதத்தைப் பார்த்து தான் அன்பு செலுத்தலாமே ஒழிய ...
சரி எப்பவும் நம்ம கிட்ட இருக்கறதே போதும்னு மனச ஏன் வச்சிக்க முடியறது இல்லே பசங்களாலே ?
நம்ம கிட்ட என்ன இருக்குங்கறத விட யார் நம்ம கிட்ட இருக்கான்னு பாக்கணும்.மத்தவாளோடஒப்பிட்டு பாக்கக் கூடாது,
பணக்காரங்கிட்ட பணம் இருக்கேன்னு நினைச்சால், அது நம்மோட தப்பு,அவன்கிட்ட அந்தப் பணமே அவனோட தூக்கமின்மைக்கு காரணமா இருக்கும், அதை பூதம் கட்டி காக்கணும்?அவனாலே எல்லாத்தையும் பணம் கொடுத்து வாங்கலாம்,ஆனால் சந்தோசத்த வெல கொடுத்து வாங்க முடியாது.
பிச்சைக்காரன் வயிறே வைகுண்டம் ,சோறே சொர்க்கம்,கிடைச்சது கைலாசம்னு இருக்கான்,அவனுக்கு இன்னிக்கு பொழுதப்பத்திதான் கவலை .நாளைய பத்தின கவலையே அவனுக்கு இல்லை .
அது சரி சாமி,,எனக்கு ஒன்னு விளங்கல,எப்பப் பாரு எல்லாரும் போன ஜென்மத்துலே பண்ண பாவம் இந்த ஜன்மத்துல வந்து நம்மள கஷ்டப் படுத்தறதுன்னு சொல்லி சொல்லியே காலத்தை கழிக்கிராங்களே,அதுக்கு உங்க பதில் என்ன?
இதப்பாரு ,எல்லாருக்குமே போன ஜன்ம பாவ புண்ணியம் இந்த ஜன்ம பாவப் புண்ணியம் எல்லாம் கலந்து தான் வாழ்க்கை அமையும்.நீ தண்ணில உப்பு போட்டா, உப்பு கரிக்கும் சக்கரை போட்டா தித்திக்கும்.!அதே தான் வாழ்க்கையிலும்.
மனுஷன் எல்லாரையும் ஒரே மாதிரி தான் படச்சீங்க,மிருகங்களய்யாவது பல தினுசுல படச்சீங்க ,மனுசங்களுக்கு எல்லாருக்கும் ஒரே கலர் ரத்தம் தான்,அப்படி இருக்கும்போது,ஏன் ஜாதி,மதப் பேதம் எல்லாம் கொண்டுவந்தீங்க? அதனால எங்களுக்கு என்ன நன்மை ?
...................................[தொடரும் உரையாடல்.]....
No comments:
Post a Comment