Friday, October 7, 2011

கடி ஜோக்ஸ் -5

கூடக் கொஞ்சம் தர்மம் பண்ணுங்க சாமி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 100 டாலராம்..."
??????



அப்பா, சர்வாதிகாரின்னா என்ன அர்த்தம்?"
அம்மா இருக்கும்போது இப்படி ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்காதே!"

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஏங்க... உங்க அம்மா எப்ப ஊருலேர்ந்து வர்றாங்க?"
ஏண்டி கேக்குற?"
இன்னும் ஒரு வாரத்துல எனக்குக் கஷ்ட காலம் ஆரம்பிக்குதுன்னு ஜோசியர் சொன்னாரு. அதான் கேட்டேன்."

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“டாக்டர்கிட்டேயும், வக்கீல்கிட்டேயும் எதையும் மறைக்கக்கூடாது. உங்க பிரச்னை என்னன்னு சொல்லுங்க.”
“உங்ககிட்ட டிரீட்மென்ட் எடுத்ததுக்கு கொடுக்கப் பணம் இல்லே...!”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“எதுக்கு அவன் டி.வி.யைப் பார்த்ததும் கண்ணை மூடிட்டு ஓடறான்.”
“பரீட்சை முடியறவரைக்கும் டி.வி.யைப் பார்க்கக் கூடாதுன்னு அவங்க அப்பா சொன்னாராம். அதான்.”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


“செல்ஃபோனை எதுக்குடா பல் டாக்டரிடம் எடுத்துட்டுப் போறே?”
“‘ப்ளூ டூத்’ நல்லாயிருக்கான்னு செக் பண்ணத்தான்!”

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“சின்ன வயதில் என்னவாகணும்னு ஆசைப்பட்டேனோ அது இப்ப நடந்திட்டது...”,

“அப்படி நீ என்ன ஆசைப்பட்டே?”

“பெரியவனாகணும்னுதான்!”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“நீங்க ஒரு காது டாக்டரா?”,

“இல்லீங்க. இரண்டு காதுக்குமே நான்தான் டாக்டர்.”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“பால் நமக்கு எப்படி கிடைக்கிறது?”

“காலையில் தூங்கி எழுந்து கதவைத் திறந்தால், வாசலில் பாக்கெட்டா கிடைக்கும் சார்!”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


“என் பையன் ரொம்ப குறும்புக்காரன்.”
“எதை வைச்சு சொல்றீங்க?”
“கிச்சன்ல நான் சமைப்பதை என் மகன் பார்த்துட்டான்... உடனே...”
“என்ன பண்ணினான்?”
“அம்மாவும் நீயே.... அப்பாவும் நீயே’னு பாட ஆரம்பிச்சிட்டான்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“ஐயா எனக்கு டூத்பேஸ்ட் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு.”
“வெரிகுட்... ‘பேஸ்ட் ஆஃப் லக்!”’

No comments:

Post a Comment