கடி ஜோக்ஸ் -4
“மருந்து பாட்டிலை கையில வைச்சுக்கிட்டு ஏண்டா தடவி கொடுக்குற?”
“டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவுன்னு சொன்னாரு.”
....................................................................
“நான் புதுசா ஒரு நாய் வாங்கி இருக்கேன். வந்து பாருங்க!”
“அந்த நாய் கடிக்குமா?”
“அதைத் தெரிஞ்சுக்கத்தான் உங்களைக் கூப்பிடுறேன்.”
............................................................
“என்ன சார், எங்க ஹோட்டல் இட்லி எப்படி இருக்கு!”
“என்னப்பா முன்னாடியே சொல்லக் கூடாதா?”
“ஏன் சார்?”
“நான் பொங்கல்னு நினைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.”
.......................................................
“மன்னரை டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு!”
“சரி அதுக்காக இடுப்பில் வாளுக்கு பதில் பிளேடை கட்டியிருக்காரே!”
..............................................................
“ஆயிரம் கிலோ ஒரு டன். அப்ப 4 ஆயிரம் கிலோ எத்தனை டன்?”
“டன், டன், டன், டன்!”
-----........................................................
“காரை வாங்கினதில் இருந்து இதுவரை ஒரு பைசா கூட நான் செலவு பண்ணின தில்லை.”
“ஆமாம்... ஒர்க்/**/ஷாப்பில் கூடச் சொன்னாங்க!”
.........................................................................................
“நம்ம வீட்டுக்குக் கொசு வராம இருக்க என்ன பண்ணனும்?”
“ஊருக்குப் போறோம்னு சொல்லிடணும். ஏமாந்து போய்டும்.”
............................................................
“கோவிலுக்கு வருகிறவங்ககிட்டே எல்லாம் தேங்காயை நீயேவாங்கி உடைக்கிறேயே, ஏன்?”
“பரீட்சையில் பாஸானா நூறு தேங்காய் உடைப்பதா வேண்டிக் கொண்டேனே, அதனால்தான்!”
.......................................................................................
ஏண்டா மச்சி ரொம்ப நாளா ஃபோன் பண்ணவே இல்ல?"
பேலன்ஸ் இல்லடா?"
பேலன்ஸ் இல்லன்னா தூண்ல சாய்ஞ்சுக்கிட்டு பேச வேண்டியதுதானே?"
......................................................................................
பஸ்ல ஒரு சீட் இருந்தும் ஒரு பொண்ணு உட்காரல ஏன்?"
அந்தப் பொண்ணு பேரு ‘அமரா’வதி!"
(செம கடிப்பா)
........................................................................
ஒரு கேர்ள் வண்டி ஓட்டுனா, அதை கம்ப்யூட்டர் லேங்வேஜ்ல எப்படிச் சொல்வாங்க?"
‘பென் டிரைவ்’னு சொல்வாங்க."
(எப்படி? இப்படி?)
........................................................................
எங்க வீட்ல வாஷிங்மெஷினைத் திருட வந்தவன் வசமா மாட்டிக்கிட்டான்."
அப்புறம்"
நல்லா துவைச்சு அனுப்பிட்டோம்"
(கறை நல்லது)
.................................................................................
ஏங்க நம்ம கல்யாணப் பத்திரிகையை ரொம்ப நேரமா உத்து பாத்துக்கிட்டு இருக்கீங்க?"
எக்ஸ்பயரி டேட் ஏதாவது போட்டிருக்கான்னு பார்க்கிறேன்."
........................................................................................
ஜேம்ஸ்பாண்டும், ஒரு இந்தியனும் சந்திக்கிறார்கள்:
என் பெயர் பாண்ட்...ஜேம்ஸ்பாண்ட்; உன் பேர் என்ன?"
நான் நாயுடு... வெங்கட நாயுடு.... சிவவெங்கட நாயுடு...
ஸ்ரீநிவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கட நாயுடு."
நான் தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ்."
(அது சரி சௌபர்... இம்சை அரசன் வெங்கட நாயுடு யாரு)
..........................................................................................
24 மணி நேரத்தில் நமதுஇதயத்துடிப்பு: 1,03,680 முறை.
இரத்த ஓட்டம்: 168,000,000 மைல்
தசைகள்: 780முறை
முடி வளர்ச்சி: -0.01714 இன்ச்
நகம் : -0.00046
எப்படி... நாங்கள்லாம் படிக்கற பசங்க.
(நம்புறோம்...)
.............................................................................................
* குண்டூசி எவ்ளோ ஒல்லியா இருக்கு.
அப்புறம் ஏன் அதை குண்டூசின்னுசொல்றோம்...
...................................................................................
* ஒரு அரக்கன் அரக்கியோட கோயிலுக்குப் போனான். ஆனா கோயில் கதவை அவனால திறக்க முடியல. ஏன்னா அரக்கன்அர - கீ - யோடதானே போ.னான்? முழுக்கீயோட போகலையே.
......................................................................................
(ஐய்யோ... வெயிலே தேவலாம்பா)
No comments:
Post a Comment