என்னடி குழம்பு இது? கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் உனக்கு இன்னும் குழம்பு வைக்கத் தெரியலையே?"
தப்பா சொல்லாதீங்க... இத்தனை வருஷமாகியும் கூட நீங்கதான் இன்னும் சாப்பிடக் கத்துக்கலைங்க!"
--
..................................................
மாமியார் பொருத்தம் எப்படி?
இதென்ன பையனோட அம்மா ஜாதகம் கேக்கறீங்களே!"
எங்க பொண்ணுக்கும் அந்த அம்மாவுக்கும் ‘பொருத்தம்’ எப்படினு தெரிய வேணாமா?"
............................................................ .............................. ..............
நம்ம கட்சியின் தேர்தல் தோல்விக்கு நம்ம தலைவரின் பேச்சுதான் காரணமா? எப்படி?"
‘வாக்காளர்களே! சிந்தித்து சீர்தூக்கி வாக்களியுங்கள்’ என்றார். எல்லோரும் சிந்தித்து, சீர்தூக்கி எதிர்க்கட்சிக்கு வாக்களித்து விட்டனர்!"
............................................................ .........................
சாமி... நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்...?"
அடப்பாவி... நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?"
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?"
............................................................ .................
ஏன்யா விஷத்தை சாப்பிட்டே?"
வயித்துவலி தாங்கமுடியலே டாக்டர். சாகதான் சாப்பிட்டேன்."
நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கறே... நாங்க எதுக்கு இருக்கோம். இங்க வந்து அட்மிட் ஆனா நாங்களே அதைப் பார்த்துக்குவோமில்லே!"
............................................................ .....................
எதிர்வீட்டு சம்பத் ஓவரா முறைச்சிப் பார்க்கறாண்டி!"
கேட்டுற வேண்டியதுதானே!"
கேட்டேனே! வெயில் தெரியாம இருக்கத்தான் உன்னை அப்படிப் பார்க்கறேங்கறான்!"
............................................................ ......................
புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே... ஏன்...?"
அதுவா... அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்..."
............................................................ .............................. ............
என்னடி குழம்பு இது? கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் உனக்கு இன்னும் குழம்பு வைக்கத் தெரியலையே?"
தப்பா சொல்லாதீங்க... இத்தனை வருஷமாகியும் கூட நீங்கதான் இன்னும் சாப்பிடக் கத்துக்கலைங்க!"
............................................................ ........
திடீர்னு நம்ம ஏட்டையாவுக்கு தொப்பை குறைஞ்சிருக்கே...?"
அவர் சஸ்பென்ட்ல இருக்காராம்... அதான்!"
............................................................ ...................
நம்ம ஸ்டேஷனுக்கு மாமூல் கொடுக்கற கபாலியும், மாயாண்டியும் புது கண்டிஷன் போடறாங்க சார்!"
என்னன்னு?"
ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் வீரர்கள் மாதிரி அவங்களையும் ஏலத்துல எடுத்தாதான் மாமூல் தருவாங்களாம்!"
............................................................ ..........................
ஊசிதானே டாக்டர் குத்தப் போறீங்க... அதுக்கு எதுக்கு மயக்க மருந்து...?"
நேற்று நீங்க ஊசி குத்தும்போது சத்தம்போட்டு ரகளை பண்ணி ஐந்து பேஷண்ட்ஸ் ஓடிப்போயிட்டாங்க தெரியுமில்ல...?"
........................................................
உங்க வீட்டில் திருடன் திருடினதைப் பார்த்தும் நீ ஏன் சும்மா இருந்தே?"
அவன் கையில் கத்தி இருந்ததே...?"
உன்னிடம்தான் துப்பாக்கி இருந்ததே...?"
அதையும் பத்திரமா ஒளிச்சு வெக்கலைன்னா துப்பாக்கியையும் திருடியிருப்பான்!"
No comments:
Post a Comment