பூங்கோதைக்கு இரண்டு கண்ணுமே தெரியாது, கண் பார்வை திடீரென்று மங்கிக்கொண்டே வந்ததால் ,எப்பொழுதும் பெண் செல்வியுடன் தான் வெளியே போவாள், இன்றும் அப்படிதான், செல்வியுடன் வெளியே போனாள் வழக்கம் போல்.
ஏனோ தெரிய வில்லை,இன்று ரோடைக் க்ராஸ் பண்ணவே செல்வியால் முடியலை. பிறகு தான் பூங்கோதை செல்வியிடம் யாருடைய துணையுடனாவது ரோடு க்ராஸ் பண்ண கேட்கச் சொன்னாள்.
அப்பொழுது பார்த்து அங்கே தன் பிள்ளை வசந்துடன் வந்த வனிதா ரோடு கிராஸ் பண்ண லைனில் நின்றாள். இவளைப் பார்த்த செல்விக்கு ஒரு பெரிய பலம் வந்தது, உடனே, "ஆண்டி ,என்னையும் என் கண் தெரியாத அம்மாவையும் கொஞ்சம் க்ராஸ் பண்ண ஹெல்ப் செய்ய முடியுமா?"
"அதுக்கென்ன, நானும் க்ராஸ் பண்ணத் தான் போகிறேன் , கையைப் பிடித்துக் கொள்.
"
வனிதா, செல்வி, பூங்கோதை , மூவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறே க்ராஸ் செய்ய முயன்ற போது, எங்கிருந்தோ வேகமாக வந்த ஒரு மோட்டார் பைக் வனிதாவை அப்படியே அலாக்காக தூக்கி ரோடிற்கு மறுபுறம் போட்டது.
செல்வியும் ,பூங்கோதையும் அப்படியே நடு ரோட்டில் விழுந்தனர். இவர்கள் பின்னாலேயே வந்த வசந்திற்கு தலை கால் புரியவில்லை. எல்லாம் ஒரு நொடியில் ஆகிவிட்டது.
ஒடனே அங்கிருந்த மக்கள் வனிதாவை தூக்கி உட்கார வைத்தனர் , தண்ணி கொடுத்தனர்.
பிறகு தான் தெரிந்தது, அவள் தலையில் பலமான காயம், ரத்தம் கசிவதும் அவள் பாதி நினைவில்இருப்பதும்.
வசந்த் அவளை ஒடனே ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில்போட்டு கொண்டு போனான், கூடவே செல்வி, அவள்அம்மாபூங்கோதையையும் வேறு ஒரு ஆட்டோவில் கூட்டிச் சென்றான்.
ஆஸ்பத்திரியில் எமெர்ஜென்சி வார்டில் சேர்த்து ஒரு அரை மணி கழித்து,கொஞ்சம் மயக்கம் தெளிந்த நிலையில் வனிதா வசந்திடம் தனியாக பேசினாள்.
" வசந்த்,எனக்கு என்னமோ நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கையில்லை. விதியாகப் பார்த்து, யமதூதனாக, அந்த பைக்காரனை அனுப்பி என் வாழ்க்கையை முடிக்கப் போகிறதோன்னு மனசில் படுகிறது".
"ஏம்மா,இப்படி பேசறே?
" ஒனக்கு ஒன்னும் தெரியாது, போடா, எனக்கு கார்தாலேருந்தே மனசு சரியில்லை, அதனாலே சொல்றேன் , நெருப்புன்னா வாய் வெந்துடுமா?"
" அம்மா நீ பேசாம , கொஞ்சம் ரெஸ்ட் எடு, பின்னாடி பார்த்துக்கலாம்".
அப்படி நான் ஒரு வேலை பிழைக்கவில்லை என்றால், என்னுடைய இரண்டு கண் விழிகளை அந்த சின்ன பெண்ணின் அம்மாவிற்கே கொடுக்கச் சொல்லிவிடு, இதை எனக்காக செய்வாயா?"
"சரி செய்கிறேன்,போறுமா?"
திருப்தியுடன் கண்ணை மூடியவள் கண்ணைத் திறக்கவே இல்லை,அவள் கண் திறந்தது , வேறு ஒருவருக்கு பார்வை கொடுத்தபிறகு தான்..
"சரி செய்கிறேன்,போறுமா?"
திருப்தியுடன் கண்ணை மூடியவள் கண்ணைத் திறக்கவே இல்லை,அவள் கண் திறந்தது , வேறு ஒருவருக்கு பார்வை கொடுத்தபிறகு தான்..
சரி, இது என்ன விதியின் விளையாட்டா, அப்படியென்றால் விதி யார் மூலமாக வந்தது, இந்தக் கொடுமை யாரைச் சேரும்?
செல்வியா, பைக்காரனா இல்லை பூங்கோதையின் புண்ணியமா?
No comments:
Post a Comment