Tuesday, October 18, 2011

கடவுளுடன் ஒரு உரையாடல்....2

மனுஷன் எல்லாரையும் ஒரே மாதிரி தான் படச்சீங்க,மிருகங்களய்யாவது பல தினுசுல படச்சீங்க ,மனுசங்களுக்கு எல்லாருக்கும் ஒரே கலர் ரத்தம் தான்,அப்படி இருக்கும்போது,ஏன் ஜாதி,மதப் பேதம் எல்லாம் கொண்டுவந்தீங்க? அதனால எங்களுக்கு என்ன நன்மை ?
___________________________________________________________________________________________
 ஒவ்வொரு   மனுசனுக்கும் எல்லாம் கிடைத்தும் அவன் அதை எப்படி உபயோகப்  படுத்துகிறான் என்று பார்த்தால்,எல்லாருமே எல்லாத்தையும் உபயோகப் படுத்துவதில்லை,ஏன்னா,ஒவ்வொருத்தனுக்கும் ஒரேமாதிரி புத்தி போவதில்லை. இப்ப ஏ டி எம் கண்டு பிடிச்சவனும் மனுஷன் தான், அதை திருடரவனும் மனுஷன் தான் , அது எப்படி? ஒவ்வொருத்தனோட  மூளையும் ஒவ்வொரு மாதிரி யோசிக்கும் ,அதே மாதிரி செயல் படும்.

அதான் எனக்கு புரியல?

இப்ப எல்லாரும் ஒரே மாதிரி சமைச்ச சாப்பாடைத் தான் சாப்பிடறாங்க,ஆனா,அதுவே சிலருக்கு, உப்பு ஜாஸ்தியாவும் செலருக்கு, ஒறப்பு ஜாஸ்தியாவும் தெரியும், அதே மாதிரி தான் இதுவும்.

இதெல்லாம் சரி . மரம் ,செடி கொடிஎல்லாம் ஏன் ஒரே மாதிரி படைக்கல? 

ஒரே மாதிரி இருக்கற மனுசங்களே ஒரே மாதிரி இல்ல, அப்ப மரம் செடி கொடி எப்படி ஒரே மாதிரி இருக்கும்?  மனுஷ ஒரே மாதிரி இருந்தாலும் அவங்களுக்குள்ளேயே மூக்கு, காது, தல,வாயி,கண்ணு மூஞ்சி எல்லாம் ஒரே மாதிரி இல்ல , ஏன்னாக்க, ஒரு வெரைட்டி இருந்தாதான் ஒரு கவர்ச்சி இருக்கும் ,ஒரு பிடிமானம் வரும்,ஒரு ஈர்ப்பு இருக்கும், ஒரு ருசி ஏற்படும்.

மரங்களும் வேற வேற மாதிரி இருந்தா இயற்கை அழகா இருக்கும் .அதை ரசிக்கணும், காப்பாத்தணும்னு தோணும். மேலும் மரங்களும், செடி கொடிகளும் சும்மா இல்லாம, மனுசங்களுக்கு பல விதத்துல பயன் படவும் செய்றது. நிலச்சரிவு ஏற்படாம ,மழை ,சுற்றுப் புற நல்லக் காத்து எல்லாமே இதுங்க தான் மனுசங்களுக்கு பிரணவாயு. பட்சிகள், மிருகங்கள் ,வண்டினங்கள், புழு ,பூச்சிகள் இவை எல்லாத்துக்கும் மரங்கள் பயன் பட்றது.

நீ இவ்ளோ சொல்றயே, மனுசங்கள்ல எத்தனை பேரு, இதெல்லாம் பார்த்து ரசிக்கறாங்க?
  அவனவன் ரசிக்கறான் இல்ல ஜடம் மாதிரி வாழ்ந்துட்டு போறான் , அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல. நதியையோ ,ஆறையோ கடக்கறவன்,அதுல என்ன தடயம் விட்டுட்டா போறான், அதே மணல்ல நடக்கறவன் அவன் காலடியை விட்டுட்டு போறான்?. அந்த மாதிரி தான் இதுவும்.

[தொடரும்  உரையாடல்.]....

No comments:

Post a Comment