இந்தக் கதையை அக்டோபர் 27 , 2011 என்ற தலைப்பில் இருக்கும் கதையை படிக்கும் முன் தயவு செய்து படிக்காதீர்கள் .
நளாயினிக்கு ரொம்ப குஷி, மகன் மனோஜ் வந்து அவளையும் அவள் கணவனையும் சிட்னிக்கு ஒட்டுமொத்தமாக கூப்பிட்டுக் கொண்டு போகப் போறான். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மனோஜே இன்டர்நெட் மூலம் செய்தும் விட்டான்.
நளாயினி அக்கம் பக்கம் எல்லோரிடமும் பெருமையாக மனோஜைப் பற்றியும் மருமகள் நித்யா வைப் பத்தியும் வாய் ஓயாமல் புராணம் பாடினது பாடினது தான்!
மனோஜ் அவன் பிரெண்ட் மூலம் வீட்டை 'கெஸ்ட்ஹௌசாக 'வாடகைக்கு விடசொல்லியும் நளாயினி, மணிகண்டனை அவர்களுக்கு வேண்டிய வெறும் துணிமணிகள், சர்டிபிகேட்ச்கள்,போட்டோ ஆல்பம் மட்டும் எடுத்துக் கொண்டு வரச் சொன்னான்.
அக்டோபர் 27 ந்தேதியும் வந்தது.
'க்விக் ட்ராக்' வாசலில் காத்துக் கொண்டிருந்தது . நளாயினியும், மணிகண்டனும் பின்னாடி உட்கார்ந்தார்கள் , மனோஜ் ,டிரைவருடன் உட்கார்ந்தான்.
வண்டி ஏர் போர்ட் போகும் சாலையிலேயே போய்க் கொண்டிருந்த வரைக்கும் நளாயினிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை , திடீரென்று , டிரைவர் இடது பக்கம் திரும்பவே , நளாயினிக்கு ஒன்றும் புரியவில்லை.
' என்ன மனோஜ் இந்தப் பக்கம் போறான் ?'
எனக்கு சின்ன வேலை இருக்கு , ப்ளைட்டுக்கு நிறைய டைம் இருக்கு, கவலைப் படாதே'
ஆனால் கார் சென்னையை அடுத்து வெளிப் புறமாக இருக்கும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
அழகான வளைவு வரவேற்றது , அதன் உள்ளே போனவுடனே , நளாயினிக்கு வயிற்றைக் கலக்கியது. என்னவோ சொல்ல முடியாத சங்கடம் மனசைப் போட்டு உறுத்தியது.
அலுவலகம் முன்னே கார் நின்றதும் , மனோஜ் டிரைவரை டிக்கியைத் திறக்கச் சொன்னான்.
'என்னடா இது ,ஏதோ சின்ன வேலைன்னு சொல்லிட்டு எங்க சாமானையெல்லாம் எறக்கச் சொல்றே?
"ஆமாம், உங்களோட 'சிட்னி' வந்தாச்சு , இந்த 'செரீன் ஷெல்டர் 'தான் உங்கள் சிட்னி , ஏம்மா, நீ தாத்தாக்கு பண்ணினது மறந்துட்டயா? அதயே நான் உனக்கு பண்ணினா எப்படி இருக்கு? தாத்தாக்கு எப்படி இருந்திருக்கும்னு நினச்சு பாத்தியா? உனக்காவது அப்பா இருக்கா பேச்சு துணைக்கு, தாத்தாக்கு பாட்டி இல்லாம எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு நீ நினைச்சயா? உனக்கு அப்பாவை உன் பேச்சுப் படி நடக்க வச்சே, இப்போ நான் என் பொண்டாட்டி பேச்சு படி நடக்கறேன் , இதிலே வருத்தப் படவோ,அதிர்ச்சியாகவோ இருக்கஒன்னும் இல்லை !
உங்கள் இருவருக்கும் ஒரு ஆறு மாசம் டைம் தரேன் .ஆத்மாத்தமாக மனசு வருந்தி, தவறையும் அன்னியாயத்தையும், உங்கள் தப்பையும் உணர்ந்து மனசு மாறி இருந்தீர்களானால் , எனக்கு போன் பண்ணுங்கள் , நான் டிக்கட் புக் செய்து உங்களை அழைத்துக் கொண்டு போகிறேன்.அது வரை உங்கள் 'இந்திய சிட்னியில் ' நிம்மதியாக இருங்கள்.
AkhilaaSaras
ReplyDeleteஅக்டோபர் 27 , 2046
தன் வினைத் தன்னை சுடும்......
super மாதங்கி !!!!!!!!!
......................................
sowmyasri0209
அக்டோபர் 27 , 2046
vinai vidhathavan vinai aruppan... nice
......................................
sreemanavaneeth அக்டோபர் 27 , 2046
Hai mkumar,
A nice kick back.Every action has an equal and opposite reaction.
.................................
Vijaya@17
அக்டோபர் 27 , 2046
Hi Mathangi
Very nicely written. Enjoyed reading.Thanks
Vijaya
,,,,,,,,,,,,,,,,,,,
upfsabari
Default Re: அக்டோபர் 27 , 2046
Romba correct..
Ennoda MIL oda FIL innum irukanga.. andha grandpa romba romba nallavaru.. avaruku sappadu podradhuke enga MIL romba pesuvanga en munnadiye.. apolam enaku thonum.. " idhe madhiri na pannna enna pannuvanga"nu.. but adhu avangaloda potum namba correcta irupomnu nenachu manasa thethikuven..
With Love
Sabari