ஜானுக்கு தெரியும் கிச்சுக்கு இப்போலேந்து தல வலின்னு .ரெண்டு பெருக்குமா காபி போட்டுண்டு வந்து கீழேயே அக்கடான்னு கால நீட்டிண்டு பாட்டிமா மாதிரி ஒக்காந்தா.
'சரி இப்போ எனன பண்ணப் போறீங்க கிச்? '
'என்னத்தைன்னு பண்ணறது, எதிலே ஆரம்பிக்கரதுன்னே தெரியலை?'இப்போன்னு பாத்து அம்மா, அப்பா வேற இல்லை.'
'நான் ஒன்னு சொல்லட்டா,நா பேசாம ஒரு வாரம் சிக் லீவ் போட்டுடறேன் ,பாட்டியையும் கவனிச்சா மாதிரி ஆகும் ,நம்மளோட மண்ட கொடச்சலும் போகும்.'
'நல்ல ஐடியா தான் ஜான் , அதைப் பத்தி ஒண்ணும் கவலை இல்லை'.
'பின்ன என்னதான் கவலை?'
'மொதல்லே நாம செஞ்சிண்டு இருக்கற சிலதேல்லாம், மறந்துட்டு பாட்டிக்கு பிடிச்சா மாதிரி செய்யணும்'.
'அதுக்கு என்ன இப்போ, பண்ணிட்டா போறது.'
'என்லேருந்து ஆரமி , நான் இந்த 'பெர்முடாலேந்து 'வேஷ்டிக்கு மாறணும். அதுக்கு நான் இப்பலேந்து பழகிக்கணும் ,சந்த்யா வந்தனம் தினம் பண்ணனும் , சாப்பிடறதுக்கு முன்னாடி பரிசேஷ்ணம் பண்ண கத்துக்கணும் . இதுக்கு மொதல்ல நம்ப வேஷ்டி எங்க இருக்குன்னு பரனை மேலே இருக்கிற பொட்டில பார்க்கணும். சந்த்யா வந்தனம் பரிசேஷ்ணம் இரண்டுத்துக்கும் நெட்லேந்து பாத்துப்பேன்.' விபுதி இருக்கா பாரு, இல்லன்னா கோவில் குருக்கள் கிட்டேருந்து கொஞ்சம் வாங்கிண்டு வரேன்.' நல்ல காலம் ஆவணி அவிட்டம் இப்பத் தான் வந்ததனால பூணல் இருக்கு.
'ஐயோ நீங்க ரெடி ஆரதப் பாத்தா எனக்கு கதி கலங்கறது. நான் அப்ப ஆறு கஜம் பொடவன்னா கட்டிக்கணும், இந்த கவுனெல்லாம் தூக்கி மேல வைக்கணும்.மொதல்ல ' மேட்சிங் பெட்டிகோட்'இருக்கான்னு பாக்கணும். அப்போ தெச்ச பளவுசெல்லாம் இப்போ 'பிட்' ஆரதான்னு வேற பாக்கணும்? இல்லன்னா அந்த ஜெயராஜ் டைலர் காலப் பிடிச்சி ஒரு இரண்டு கலர்லயாவது தச்சி வச்சிக்கனும் .''காதில இருக்கற பீ பித்தளையை எடுத்துட்டு வைர தோடு, எட்டு கல் பேசரி கல்யாணத்துலே போட்டதன்னா போட்டுக்கணும்? அட ராமச்சந்திரா , இதை நான் நினைக்கவே இல்லையே? சமைத்துப் பார் பொஸ்தகம் எங்க இருக்குன்னு வேற தேடணுமே, ஒரு வாரம் லீவ் போறுமோ? ' பாவக்காய் பிட்ல, மேந்திக் கூட்டு மாவு, அரிசி உப்புமா, பிடி கொழுக்கட்டை, மோர்களி ..... 'ஐயோ அம்மா 'நினச்சாலே ஜுரம் வந்துடும் போல இருக்கே?
'என்ன இன்னும் உன் லிஸ்ட் முடியலையா?'
'கிச் , நீங்க நாளைக்கே பாங்க்லேருந்து பூஜ வெள்ளி பாத்திர சாமானெல்லாம் எடுத்துண்டு வந்துடுங்கோ'
இதை மறந்துட்டேனே? நீங்க பரனைல ஏறி எவர் சில்வர் பக்கெட் ,லோட்டா, வெண்கலபானை , சொம்பு, சிப்பி தட்டு, கரண்டி, ஈச்சொம்பு , கச்சட்டி மோர் ஜாடி , எல்லாம் எடுத்துடுங்கோ .
கல்யாணத்துலே கொடுத்த பட்டு பாயி , சீமந்தத்துலே கொடுத்த பட்டு பாயி இரண்டையும் அப்படியே எடுத்து வெயில்ல போட்டு வக்கணும்.
'நம்ப கிட்ட குமுட்டி இல்லையே?'
'அதனாலென்ன பரவால்லை , எக்ஸ்ட்ரா காஸ் அடுப்பு இருக்கே அதை வச்சு சமாளிக்கலாம்.'
'ஜான், மடித் துணிக்கு கொடி எங்க கட்டறது? அதுவும் பாட்டியோட ஒம்பது கஜம் ஒன்னோட ஆறு கஜம்னு அனுமார் வால் போலன்னா கொடி கட்டணும்?'
'எங்கே அதுக்குள்ள ஓட்ரீங்கோ, நான் இன்னும் என் லிஸ்டே சொல்லி முடிக்கலை?' ' பாட்டி தட்டுல எல்லாம் சாப்பிட மாட்டார் , அதனாலே நாயர் கடையில போயி இப்போவே ஒரு முப்பது மந்தார இலையோ ,வாழை இலைக்கோ சொல்லிடுங்கோ'. நம்ம கிட்ட கத்தி தான் இருக்கு, அரிவா மனைக்கு எங்க போறது? ஞாபகமா கல் உப்பு வாங்கி வக்கணும்.'
'ஜான் நா சொல்றன் பார் , வழக்கம் போல 'போஸ்ட் இட்' லிஸ்ட் போட்டு, 'பாட்டி வரதுக்கு முன்னாடி', 'வந்தா பாடுன்னு' எழுதி நம்ம பெட் ரூம் கம்ப்யுடேர்ல ஒட்டிடு. ஒவ்வொன்னா முடிஞ்சதும் டிக் போட்டுண்டே வந்தா நமக்கும் கொஞ்சம் ரீலீப் ஆ இருக்கும், பாட்டி என்னமோ நம்ம ரூமுக்குள்ளே வரப் போறதில்லை !
'அப்ப இருங்கோ ஒரு நிமிஷம் , பசங்க எழுந்துக்கரதுக்கு முன்னாடியே இதெல்லாம் பண்ணாத்தான் உண்டு. ' அதுங்க எழுந்ததுங்களோ போச்சு,அதுவும் வாலு 'விக்கிய ' கேக்கவே வேணாம்'.
'அதுங்களுக்கு இப்ப ஒண்ணும் சொல்லவேணாம். விஷயம் தெரிஞ்சா நம்மளை உண்டு இல்லன்னு பண்ணிடுங்கோ !'
போயி 'போஸ்ட் இட்' எடுத்துண்டு வந்த ஜான் திடீர்னு ஞாபகம் வந்தவளாய், பசும்பால்னா கேப்பா பாட்டி? அதுவும் பில்டர் காபி வேற , அதையும் எடுத்துடுங்கோ பரனையிலிருந்து. பசும்பாலுக்கு சொல்லும்போதே, கொஞ்சம் பசுஞ் சாணிக்கும் சொல்லணும்.
* * *
இவா ரெண்டு பெரும் ரொம்பவே பிசியா மும்முரமா பாட்டியோட வருகைல மூழ்கியிருக்கிரப்போ ,ரெண்டு கண்ணும் நாலு காதும் ஒட்டு கேட்டதை எங்கே கவனித்திருப்பா?.......................!
தொடரும்........
* * *
இவா ரெண்டு பெரும் ரொம்பவே பிசியா மும்முரமா பாட்டியோட வருகைல மூழ்கியிருக்கிரப்போ ,ரெண்டு கண்ணும் நாலு காதும் ஒட்டு கேட்டதை எங்கே கவனித்திருப்பா?.......................!
தொடரும்........
No comments:
Post a Comment