மங்காவிற்கு இது தலை பிரசவம்,அதனால் அவள் தன் தாய்
வீட்டிற்கு வந்திருக்கிறாள். இன்னும் இரண்டு நாள் போகும் என்பதனால், ஊரின் வீட்டில் பிரசவம் பார்க்கும் ஒரே பெண்மணி தாயம்மா அடுத்த ஊருக்கு வேலை நிமித்தம் போயிருக்கிறாள்.
திடிரென்று மங்காவிற்கு நோவேடுக்கவே தாயம்மாவும் இல்லாததால் அவளை பக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு மாட்டு வண்டியில் பூட்டிக் கொண்டு போனார்கள்.
நர்ஸ்,மங்காவை செக்செய்துட்டு,அவள் கர்பப்பை குறுக்காக
இருப்பதால் பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகச்சொன்னாள்.
நட்ட நடு நிசி ராத்திரியில எப்படிடா, போறதுங்கரப்போ, தாயம்மாவும் வந்து விடவே, அவளையும் வண்டியில் ஏற்றி கையில் பிளாஸ்கில் சுடு தண்ணி, அவசர பிரசவம் பார்க்க கையோடே துணி மணி எல்லாம் எடுத்துக்கொண்டு மூன்று மாட்டு வண்டியில் புறப்பட்டனர், மங்காவின் தாய், தகப்பன், அண்ணன்,கணவன் ,மாமனும் மாமியும்.
ஒரு அரை மணி நேரம் கூட வண்டி போயிருக்காது, மங்காவிற்கு, பனிக்குடம் உடைந்து விட்டது. அதை அறிந்த, தாயம்மா ,உடனே வண்டியை நிறுத்தி அங்கே இருந்த மரத்தடியில் புடவைகளை பரப்பி, ஆம்பிளைகளை ராந்தல் விளக்கை தூக்கிப் பிடிக்கச் சொன்னாள். பரபரப்பாக, சுடு தண்ணியை குவளையில் கொட்டி, மங்காவின் அம்மா,மாமியின் உதவியுடன் பிரசவம் பார்த்தாள்.
மங்கா கொஞ்சம் கூட சத்தம் போடாமல் பொண்ணை பெற்றாள். அந்த சிசு பெரிதாக அழுது இந்த உலகத்தில் தான் வந்ததை தெரிவித்தது.
தாயம்மாவும் குழந்தையை துடைத்து அதை அங்கே இருந்த மங்காவின் கணவனிடம் கொடுத்தாள். அவனுக்கு ஏகப்பட்ட சந்தோசம் அவன் வீட்டில் லட்ச்மிகள் குறைவு.
தாயம்மா மங்காவிடம் வந்து அவளை கவனித்தாள். அவளுடைய நாடித்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை பார்த்தவள் ,நிலமை என்னவாகப் போகிறதுன்னு தெரிய அவளுக்கு மருத்துவம் படிக்க வேண்டாம்.
அவளுடையநாப்பதுவருஷஅனுபவம்பேசித்து. மங்காவின் அம்மாவிடம் மட்டும்என்னநடக்கபோகிரதுன்னுசொல்லி விட்டாள்.
பத்தே நிமிடத்தில் மங்கா இந்த உலகத்தை விட்டும் தான் பெற்றெடுத்த பெண்ணை விட்டும்,உறவு சொந்த பந்தங்களை விட்டும் பிரிந்து போனாள். தாயம்மா பார்த்தாள்,குழந்தைஎப்படி தாயில்லாமல் உயிர் வாழும்?
தன் அனுபவத்திலிருந்து, தனக்கு தோணியதை செய்தாள்.
பிறந்த சிசுவை எடுத்து மங்காவின் காலடியில் விடடாள்.
அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் அதுவும் தாயுடன் வேறு உலகம் தேடிசென்றது!
...............................................................................................................................
இரண்டு விஷயம் :ஒன்று தாய் பிரசவித்து உடனே மடிந்தால்,குழந்தையை காலடியில் போட்டால்,அது உயிர் விட்டு விடுமோ?
இரண்டாவது, போன ஜன்மத்தில் யாருடைய சாபமோ?
" அடுத்த ஜன்மத்தில் நீ என் முகத்தில் முழிக்காதேனு " யார் யாரிடம் சொல்லியிருப்பார்கள்?
தாய்க்கோ,பெற்ற பிள்ளையின் முகத்தை கூட பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை,பிள்ளைக்கோ,பெற்ற தாயின் அரவணைப்போ,முகத்தையோ கூட பார்க்கக் பாக்கியம் இல்லை?
அடுத்த ஜன்மத்திலாவது ஒண்ணு சேரட்டும் ஆண்டவனே !
.......................................................................................................
கீழே கொடுக்கப் பட்டிருக்கும் லிங்கில் க்ளிக் செய்யவும்,ஒரு தாய் யானை ,சேயை எப்படி ஒரு உதவியும் இல்லாமல் பெற்றெடுத்த தோடல்லாமல் ,அது மூச்சு பேச்சின்றி இருப்பது கவலைக்கிடமாயி அந்த பிறந்த சிசுவை எப்படி காப்பாற்றுகிறது என்று தெரிய வருகிறது .
Click here :http://www.fwdder.com/player/
No comments:
Post a Comment