Wednesday, August 17, 2011

வாழ்க்கை இது தானடா !



உண்மையாகவே  நீ  யாரையாவது  நேசித்து  அவர்கள்  உன்னை  
 நேசிக்கவில்லை  என்றாலும் ,நீ ஒருவரை  நேசித்து அவர்களிடம்  சொல்ல நினைத்து சொல்ல முடியாமல்  போனாலும்  உன்  வருத்தம் மனவருத்தமே! .


*                                                 *                                                 *

 உனக்கு  வேணுமானாலும்  உன்  வாழ்க்கையில்  ஒருவர்  
முக்கியமானவராக இருக்கலாம்,அனால்  அவருக்கு  நீ முக்கியமாக   
 இருக்க வேண்டும்  என்று  எந்த  சாஸ்திரத்திலும் சொல்லவில்லை!.

*                                                 *                                                 *

 உன்னுடைய   நெருங்கிய   தோழியோதோழனோ   எப்பொழுதுமே
 வளவள   என்று   பேசிக்  கொண்டே  இருக்கணும்   என்றில்லை சும்மா 
 வெறுமனே   ஒருதருக்கொருவர்  அருகில்  இருந்தாலே  அது  யானை  
 பலத்திற்கு   சமானம்! . 

*                                                *                                                 *

 வாழ்க்கையில் சிலவற்றை  நாம்  இழக்கும்  போது  தான்  அதன்  மதிப்பே 
 தெரிகிறது , அதே  போல்  சிலவற்றை நாம் பெரும்  வரையும்  அதன் 
 மகத்துவம்   தெரிய  வருவதில்லை! 

*                                                *                                                     *
 
  நொடிப்பொழுதில்  சிலவற்றை பெற  முடியும் , மணிப்   பொழுதில்  சிலரை  நோக  அடிக்க  முடியும், ஒரே  நாளில்  சிலரிடம்  அன்பு  செலுத்தமுடியும் , ஆனால்   மறக்க  மட்டும்  வாழ்நாளே  வேணும்! 

*                                               *                                                     *

அழகை  நினைத்து  பெருமைப்  படாதே , அது   சில  நாட்கள்  தான்  இருக்கும் , பிறகு  அது உன்னை பார்த்து  சிரிக்கும்.பணத்தைப்  பார்த்து போகாதே , அதுவும்  வெகு  சீக்கிரம்  உன்னை விட்டுப்  போகும் .அதனால் உன்னை சிரிக்க வைக்கும்  சிலரிடம் போ, அவர்களே  உன் வாழ்வில்  பிரகாசத்தை  தர முடியும்!

*                                              *                                                     *

கனவு  காண், ஆனால் அது வெறும்  கனவு தான் என்று மட்டும்  நினை .
உனக்கு என்னவாக  ஆகவேண்டுமோ  அதற்காக  பாடுபடு ,ஏன்  என்றால்  வாழக்கை  ஒருத்தருக்கு  ஒரு முறை  தான் , அதற்கான  சந்தர்ப்பமும்   ஒரு முறை தான் வரும் 

*                                            *                                                 *

 உன்னை யார்  எப்படியெல்லாம்   நடத்த  வேண்டும் என்று நினைக்கிறாயோ  அதே போல் அடுத்தவரையும்  நீ நினைக்க  வேண்டும். அதன் படி  செயல்  படு. தன்னை   போல் பிறரை  நினை. 

*                                                    *                                                                  *

அவசரத்தில்  விழுந்த  வார்த்தை விவாதத்தை கிளரும் சுடு  சொல் , வாழ்கையை  சுடும். சமயத்தில்  சொன்ன  சுகமான வார்த்தை  சுகத்தை  தரும் , பரிவான  வார்த்தை  பல  காயங்களுக்கு  மருந்தாகும்!

*                                               *                                *
வாழ்க்கைக்கு  வேண்டிய  நல்லதெல்லாம்  கிடைக்க  , 
எல்லா  சமய சந்தர்பங்களையும் ஒன்று  விடாமல் நழுவவிடாமல்  அள்ளிக்  கொண்டு  போகிறவர்கள்  தான்  சாமர்த்திய  சாலிகள்! .
அவர்கள்  போகும் பாதையை  வழி  வகுத்துப்  போகிறவர்கள்,அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்.

 *                    *                  *

1 comment:

  1. Re: கரையை தொட்ட அலைகள்
    http://www.indusladies.com/forums
    Posted by: natpudan
    On: 18th August 2011 09:26 PM

    நல்ல நல்ல பாய்ண்டர்ஸ் - வாழ்க்கையை வாழ - நன்று.
    ************
    Re: கரையை தொட்ட அலைகள்
    http://www.indusladies.com/forums
    Posted by: Padhmu
    On: 19th August 2011 02:23 AM

    அருமையான சிந்தனைகள். பகிர்ந்து கொண்டதற்க்கு பாராட்டுக்கள் மாதங்கி.

    ReplyDelete