யாமினிக்கு இது இரண்டாவது பிரசவம் , முதல் பையன் அனிருத் ஸ்கூல் போவதால் பிறந்த வீட்டுக்கு போகாமல் அவள் அம்மா வந்து அவளுடனேயே இருந்தாள்.
திடிரென்று ட்யு டேட்டுக்கு இரண்டு நாள் முன்பாக பனிக்குடம் உடைந்திடவே அவளை நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தாச்சு.
நர்ஸ் ரெம்யா, "சிஸ்டர் இந்த பேஷண்டை உடனே லேபர் வார்டுக்கு கொண்டு போங்க.""டாக்டர் அரவிந்துக்கு சொல்லி அனுப்புங்க ,இல்ல,செல்லுல கூப்பிடுங்க'"
யாமினியை லேபர் ரூமுக்கு கொண்டு போயி பெய்ன்வர ஊசியும் போட்டாச்சு.
யாமினி வலி தாங்காம கத்தவே, தயார் பண்ற ஹெட் நர்ஸ் சோதனை பண்ணப் போது குழந்தையின் சுண்டு விரல் மட்டும் வெளியே வந்ததைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்.
இதற்குள் அரவிந்தும் அங்கு வரவே விஷயம் அறிந்த அரவிந்த் இந்த சுண்டு விரலை எப்படி உள்ளே தள்ளுவதுன்னு மண்டையைப் போட்டு ஒடசுன்ன்டுஇருந்தான். திடிர்னு என்ன தோனித்தோ தெரியலை,
யாமினியைப்பார்த்து , "உங்க வீட்டுகாரர் ஸ்மோக் பண்ணு வாரா?
"ஆமாம் சார் அதுக்கும் இதுக்கும் ஏதாவது? " ன்னு இழுத்தாள்.
அங்கே இருந்த நர்சுங்களுக்கு ஒண்ணுமே புரியலை, எதுக்காக டாக்டர் இந்த கேள்வியைக்கேட்டார்னு .
"சிஸ்டர், யாமினி வீட்டுக்காரர் கிட்டே இருந்து ஒரு சிகரட் வாங்கிட்டு வாங்க"
யாமினி பயந்து போய், "குழந்தைக்கு ஏதாவது பிரச்னையா டாக்டர்?"
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல,யாமினி, நீங்க கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும் , எல்லாம் சரி பண்ணிடலாம்"
சிஸ்டரும் கொண்டுவர, அதை பத்தவச்சி குழந்தை சுண்டு விரல் கிட்டே எடுத்துண்ண்டு போன உடனே சுண்டு விரல் தன் இச்சையாக உள்ளே போச்சு !
பின்ன என்ன? எல்லாருமா சேர்ந்து கை தட்டி, கை கொடுத்தார்கள் !
Re: சுண்டு விரல் வைத்யம்
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=142041#post1893659
Posted by: sowmyasri0209
On: 1st August 2011 01:20 PM
சிகரட்டால சில நல்லதும் உண்டோ???
அரவிந்துக்கு Good presence of mind..
************
Re: சுண்டு விரல் வைத்யம்
http://www.indusladies.com/forums/showthread.php?t=142041#post1895021
Posted by: Padhmu
On: 2nd August 2011 02:29 AM
அதிர்ச்சி வைத்தியம். நன்றாக உள்ளது.