விழிக்குத் துணை என் ஒரு கண்ணாடியும் கண்களும்,
வழிக்குத் துணை என்செருப்பும் குடையும் ,
வயிற்றுக்குத் துணை ரொட்டியும் சப்ஜியும்
பழிக்குத் துணை என் பக்கத்துக்கு வீட்டு காரனும் அவன் பசங்களும்!
* * *
உன்னை நான் பார்த்த போது நீ மென் மலராக இருந்தாய் ,
நீ என்னை பார்த்தபோது நான் மெய்மறந்து இருந்தேன் ,
ஆனால் உன் அப்பன் பார்த்த போது பிணமாக நின்றேன்!
* * *
வாசலில் நின்றேன் வழி மேல் விழிவைத்து
ஜன்னலருகில் நின்றேன் கால் மேல் கால் போட்டு
வந்தான் போஸ்ட்மேன் சைக்கிள் மணி அடித்து
கொடுத்தான் கையில் 'அட்ரெஸ் நாட் பௌன்ட்'
* * *
பச்சை புடவை கட்டி நீஅசைந்தாட,
மழைத் துளிகள் உன்மேல் பரவசமாக,
பச்சைக் கிளி போல் பாட்டு பாட ,
உன்னடியில் நான் நின்றேன் ,
பாழும் மழைக்கு ஒதுங்கி!
* * *
No comments:
Post a Comment