Sunday, July 17, 2011

இரண்டு நாள் போனஸ்

அது ஒரு தேசியமயமாக்கப்பட்ட   வங்கி, அன்று சனிக்கிழமை .

"நாராயணன் சார் வரீங்களா சார், மாதவனைப் போயி பார்த்துட்டு வந்துடலாம்"

''அப்படியா,சரி,        வேற யாராவது வராங்களான்னு
கேட்டுடுவோமே,          எல்லாருமா ஒண்ணா சேர்ந்து போயிடலாம் கார் பூல்  பண்ணிண்டு "

இது நல்ல ஐடியாவாகப்  பட்டது  சபேசனுக்கு.

ஒவ்வொருத்தரையாகாக் கேட்க எல்லோரும் சரி என்று சொல்லவே எல்லோருமாகக்  கிளம்பினார்கள் மாதவனை பார்க்க. 
.
மாதவன் ஆபிசிலே இரண்டு  நாள் முன்பாக நெஞ்சு வலின்னு சொல்லி அவதிப் படவே, அவனை ஆஸ்பத்தரியில்  அட்மிட் செய்து இப்போ இது சாதாரண காஸ் ப்ராப்ளம்னுசொன்னதால், நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகுவதால் இன்றே போயி பார்த்துடலாமுனு தான் எல்லோரும் வேலையை முடித்துவிட்டு கிளம்பினார்கள்.

ஆஸ்பத்தரியில் இவர்களைப் பார்த்ததும் , அவன் மனைவி கர்டிசிக்கு இரண்டு வார்த்தை பேசிட்டு  வெளியே போயி விட்டாள்.

"என்ன சார் இப்படி ஆச்சு?" ..இது ..சதீஸ்
"அது ஒண்ணும் இல்லை, பேங்க்  க்ளோசிங் டைம் இல்லையா அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டாரு,"... இது .ரகு
"அட நீங்க வேற,நம்ப  ரமேஷ் எப்பவும்  சும்மா சுத்திட்டு இருக்கார்னுட்டு தான் சார் இப்டி ஒரு டிராமா போட்டிருக்கிறார் "....இது ..  பீட்டர்
"எல்லா வேலையும் முடிஞ்சு போனதால் அய்யாவுக்கும் சரியாகி போச்சு "...இது ....தம்பிதுரை
"இப்ப என்ன சார் ,எல்லா வேலையும் உங்க வேலையோட நாங்க செஞ்சாச்சி , பிறகு என்ன எழுந்து நடங்க சார் "  ....இது .. நாஞ்சில்
"நான் கூட அடுத்த க்ளோசிங் டைம்லே சார் மாதிரி கொஞ்சம் டிராமா பண்ணப் போறேன்"     இது மேரி

இதை  எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாதவன் கடைசியில்," என்னப்பா எல்லாருமா சேர்ந்து  மாத்தி,மாத்தி  ரொம்பவே கலாய்க்கிறீங்களே ?, பாத்துப்பா,அடுத்த வருஷம் நம்ப மானேஜருக்கு ஹார்ட் அட்டேக் வந்துடப் போரது"


இதை கேட்ட எல்லோரும் "கொல்"லுனு சிரிக்கவே மாதவனும் சேர்ந்து சிரித்தான். அவ்வளவுதான் ,அவனுடைய இரண்டு நாள் போனஸ் தீந்து போச்சு! 

 

No comments:

Post a Comment