Sunday, July 31, 2011

சிறு துளிகள்



குட்டைக் கை தெரியாமல் இருக்க
கைக் குட்டையால் குட்டிக் கை போட்ட
கைக் குட்டைக்காரி ,
உன் கையால் குட்டு கிடைக்க , 
காத்துக்  கிடக்கும் கிட்டூர்  கிட்டு !

     *                                       *                                              

வாழைப்பழம்  வழுக்கி  கீழே விழாதே 
என்று சொன்ன வழுவூர் வசந்தா,
வாழ்க்கையில் வழுக்கி விழுந்துடாதேன்னு 
வனஜாவுக்கு வார்ன்பண்ண மறந்துட்டா !

           *                                            *                                      *
பட்டாம்பூச்சியை  பார்க்கப்போன 
பரிமளாவுக்கு பத்திக்கொண்டு 
வந்தது பக்கத்துவீட்டு படா ஜொள்ளு பார்டி 
பரமசிவ தாத்தாவைப் பார்த்து!


            *                                           *                                         *
குடிமகன்  குமாரசாமி குடிபோதையில் 
குப்பம்மாவின் குடிசைக்குள் புகுந்து 
கஞ்சி குடித்துக் கொண்டிருந்த குமுதாவை
கோடாலியால் கொலையுயிரும் குத்துயிருமாய் 
குத்திவிட்டான் தன மனதில் குடி கொள்ள மறுத்ததற்கு!


No comments:

Post a Comment