Monday, July 11, 2011

சிறிய துளிகள்

-- சில சமயம் நினத்ததுண்டு ,ஏன் நாமும் சிறு கவிதைக் குறிப்புகள் எழுதக்  கூடாதென்று , அதன் விளைவு தான் இப்போ நீங்கள்  படிக்கப்  போகும்  துளிகள் .


--
புள்ளி போட்ட சேலை கட்டி புள்ளி கோலம் போட்ட
அலமுவைப் பார்க்க போனேன்.
அந்தோ , அவள் கோலம்? அலங்கோலமாக அடிபட்டு
நாடு ரோட்டில் கடந்தாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


-- பெண் பார்க்கவந்த போது  அவளும்,
 அவனும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியும்
 போராததால்  தொடர்ந்து நோகியாவிலேயே
 காதும்  காதும் வைத்து பேசி தீர்த்தனர்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 நிலாவைப் பார்த்து நான் சிரித்தேன்,
 அவளோ சந்திரனைப் பார்த்து சிரித்தாள்.
 ஏனோ தெரியவில்லை சந்திரனும் நிலாவும் ஒன்று என்று!

நான் தான் சந்திரன் அவள் நிலா!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 அந்தப் பெண்ணிற்கு முத்தம் கொடுக்க நினைத்து
 அவளருகே போனேன்.
 ஆனால்,அந்த சனியன் பிடித்த தாடிக்காரன்
 வந்து "என்ன வேண்டும் சார்"என்று கேட்டான்.
 துணிக்கடை பொம்மைக்கு ஒரு முத்தம் கொடுக்க கூட
 லாயக்கு இல்லாதவன் நான்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 "உன் கண்களில் ஏன் மாற்றம்" என்றேன்,
 அவளோ,"ஏமாற்றமே" என்றாள் .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 தினமும்   அந்த வழியாக வரும் ஜோடியைப்ப்
 பார்க்காதவர்கள்  யாரும் இல்லை.
  அப்படி ஒரு பொருத்தம்,என்ன நடை,
 உடை ,என்ன அழகு!
 கையுடன் கைகோர்த்து  நடக்கும் விதமே தனி!
 ஆனால் என்ன இருவருமே அறுபதைக் கடந்தவர்கள்!

 வயிற்றெரிச்சல் ஆக இருக்கா?

 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


 என் காதலியும் சிகப்பு ஷர்ட் அணிந்து இருந்தாள்.
 நான் காதல் மயக்கத்தில் போய் முதுகில் ஒரு தட்டு தட்டினேன்.
 விழுந்தது கன்னத்தில் ஒரு 'பளார்'.
 மோசம் போயி ட்டேன், அடித்தது சேல்ஸ் கேர்ள் என்று .
 போனால் போகிறது.
 என்காதலிக்காக என் கன்னம் சிவந்தால் தான் என்ன?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 மதுவிற்கும் மாதுவிற்கும் ஒரு கால் தான் வித்தியாசம்.
 மது அருந்தி , மாதுமேல் காலைப் போட்டது தான் தப்பு.
 பிறகென்ன? மாமியார் வீட்டு விருந்தாளி தான் நான் இப்போ.
.....................................................................................

 உனக்கென்ன குறைச்சல்,
 தக்காளி போன்ற கன்னம்,
 வாழைத்தண்டு  போல கைகள்,
 கிட்னி பீன்ஸ் போல் காதுகள்,
       பீட்ரூட் போல சிவந்த இதழ்கள்,
      பிஞ்சு வாழைப்பூ போல கை விரல்கள்
                                                 

       வெண்டைக்காய் போலகால்  விரல்கள்,
      என்ன வாய் மட்டும் பெரிய கறிகாய் பை போல!
         ஆக  மொத்தம் நீ ஒரு 'ஹாப்காம்'!
            The Horticultural Producers' Co-operative Marketing and Processing Society Ltd

No comments:

Post a Comment