Sunday, July 10, 2011

தலை இல்லாத ஹெல்மெட்!



சுஜித் அப்பாவுடன் அடம் பிடித்து பைக்கில் போயே ஆவேன் என்று கிளம்பினான் , அவனுடைய தொல்லை தாங்காமல் முரளியும் பைக் சாவியை  எடுத்துக்கொண்டு  கிளம்பினான் .

பத்தடி தூரம் கூட போயிருக்க மாட்டான் ,சுஜித், "அப்பா,உங்களோட ஹெல்மட் ?' என்று சொல்லவே, முரளியும் அவனை ஹெல்மெட்     கொண்டுவரசொல்லி பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினான் .


சுஜித்தும் பைக்கில் போகும் சந்தோசத்தில் சிரமம் பாராமல் ஹெல்மெட்டை கொண்டு வரவும் , அங்கே வேகமாக வநத கார்ப்பரேசன் வண்டி, ஓவர் டேக் பண்ணப் பார்த்தபோது முன்னாள் ஒரு கார் இருக்கவே முடியாமல் சடனாக ப்ரேக் போடவே ,அங்கே நின்றுகொண்டிருந்த முரளி மீது மோதி அவனை குண்டு கட்டாக தூக்கி ரோட்டில் விசிறி எறிந்தது. 

அவன் தலை இரண்டாக பிளவு பட்டு அங்கேயே முரளியின் உயிர் பிரிந்தது .

இது தெரியாமல் வநத சுஜித் அப்பா எங்கே போனார், பைக்கை விட்டு விட்டு என்று இன்னமும்  தேடிக் கொண்டிருக்கிறான். 

பாவம் அவன் சின்ன பையன் விஷயம் தெரியாமல் ஆசையாக அப்பாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறான்!
-- ________________________________________________________

ஹெல்மெட் போட்டுக்கொண்டாலும், போடாவிட்டாலும் விதி யாரை விட்டது?
ஹெல்மெட்டுக்காக காத்திருந்த அவனுக்கு அந்த ஹெல்மெட்டே விதியாக வந்து விளையாடி விட்டது.

No comments:

Post a Comment