மாடசாமிக்கு ரொம்பவே போறாதசமயம், ஊரு தலைவர்கிட்ட வாங்கின கடனை நாளைக்குள் திருப்பி தரணும் , இல்லேன்னா இருக்கிற ஒரு ஏக்ரா நிலமும் போயிடும் . என்ன செய்வதுன்னே தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்போ , டிவியிலே வந்த கலப்படம் கேட்டு ரொம்ப சந்தோஷமாச்சு .
ஊரு தலைவரோட கையாளு மாணிக்கம் வந்து ஒரு சவுண்டு கொடுத்துட்டு போயிட்டான் ,இனிமே என்ன இருக்கு, எப்படியும் பணம் தெரட்டி விடலாமுன்னு நினைச்சப்போ அண்ணனோட வையித்தியதுக்குகொஞ்சம் கொடுத்து உதவும்படி யாயிடுத்து. மனதுக்குள் தீர்மானம் பண்ணினவன் சந்தோஷ மாக படுக்கப் போனான்.
அடுத்த நாள் காலை அவன் மனைவி குப்பம்மா வந்து பார்த்தப்போ ,அவன் வாயிலிருந்து நுரை வந்துக்கொண்டிருந்தது , உடனே அக்கம் பக்கம் ஆளை கூபீட்டுஅவனை ஒருவழியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தாச்சு .இனிமே டாக்டர் என்ன சொல்றாங்கலோன்னு யோசனையிலே இருந்தப்போ நற்சே வந்து , டாக்டர் கூப்பிடுவதாக சொல்லவே அவளும் அவள் பெண் கீதாவும் போயி பார்த்தார்கள்.
டாக்டர் இவர்களிடம் மாடசாமி கலப்பட மருந்து குடிச்சதினால் மூளை இறந்துவிட்டதாகவும் அவன் இருந்தும் பயனில்லை அதனால் அவர்கள் மேற்கொண்டு ஆவதை பார்க்கலாம் என்று சொன்னார்.
அருகிலிருந்த கீதா தான் குப்பம்மாவை சமாதானப் படுத்தி தான் படித்திருந்த செய்தி படி அப்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்னு சொன்னாள்.
குப்பம்மா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை ஆனால் கீதா விடாப் பிடியாக உறுதியாக இருக்கவே அதே ஆஸ்பத்திரியில் ஒருவருக்கு இருதயம் தேவை படுவதால் அவர்கள் மற்ற ப்ளட்டெஸ்ட் எல்லாம் செய்து பிறகு வந்து பார்ப்பதாகவும் சொல்லி, ஒரு பார்மில் கையெழுத்து போடும் படி சொன்னார்கள்.
அப்போது அங்கு வந்த மாணிக்கத்தை பார்த்த குப்பம்மாவிற்கு ஆத்திரம் பொத்திக்கொண்டு வந்தது , அவனோட சர்ட் காலரைப் பிடித்து கன்னத்தில் நன்றாக அறைந்து கூச்சப் போட்டாள்.
மாணிக்கத்திற்கு ஒன்றுமே புரியாததால் அவன் ஒன்றும் செய்யாமல் பே அறைந்த மாதிரி இருந்தான், அவன் பின்னாடியே வந்த தலைவருடைய மனைவி , சுஷீலா என்ன ஏது என்று கேட்க குப்பம்மா அழுதுகொண்டே நடந்ததை எடுத்து சொன்னாள்.
சிறிது நேரம் கழித்து வந்த டாக்டர் சுஷீலாவிடம் அவள் கணவனுக்கு மாற்று இருதயம் கிடைத்து விட்டதாக சொல்லவே அவள் ரொம்பவே சந்தோசமாக டாக்டருக்கு நன்றி சொன்னாள். அதற்கு டாக்டர் அவளிடம் குப்பம்மாவையும் கீதாவையும் காட்டி அவர்களுக்கு நன்றி சொல்லும்படி சொன்னார்.
குழப்பமடைந்த சுஷீலா விவரம் தெரிந்ததும் , அவர்கள் நிலத்தை மட்டும் இல்லை,அவர்களுக்கு வீடும், கீதாவிற்கு ஒரு வேலையும் வாங்கித்தருவதாக உறுதி மொழிந்தாள்.
ஆக நாய் விற்ற காசு குறைத்தது!
செத்தும் கொடுத்தான் மாடசாமி!
No comments:
Post a Comment