Wednesday, July 6, 2011

சோழியும் குடுமியும்

        
''டி, தண்ணி கொண்டா , ''

உடனே செல்லத்தாய் சொம்புலே தண்ணி கொண்டாரதுக்குள்ளே ,டெலிபோன்அடிக்கவே மாரிசாமி கால் கழுவிண்டு வந்தான் .

செல்லத்தாய் தான் போனை எடுத்தாள்.

கால் கழுவிண்டு வந்த மாரிசாமி , 

''ஏன்டி யாருடி  போன்லே ?"

"அண்ணன் தான்க என்ன விசயமாம்?"

"செல்விக்கா வ ரோடுலே ,மாடு முட்டி அடிபட்டிடிச்சாம்,வந்து பாக்க சொன்னாருங்க "

"அதுக்கு ஒன்னும் நீ இப்ப இந்த வெயிலிலே போயி பார்க்கவேணாம் , பேசாம கெட "

"அதெப்படிங்க அக்காவை போயி பாக்காம இருக்கறது? "

'நான் சொன்னா சொன்னது தான்,போயி வேற வேலையைப் பாரு"
மனசு கேட்காமல் செல்லத்தாயி வேற சேலையை உடுத்திக்கிண்டு வெளியே வந்த போது மாரிசாமி ,"என்ன கொழுப்பு ஜாஸ்த்யாயிடுத்து போல,உள்ளே போடின்னா"

"அதெப்படிங்க பேசாம இருக்கிறது ,அக்காவுக்கு ஒண்ணுன்னா , நமக்கும் தானே?"  

"நீ ரொம்பவே இப்பல்லாம் பதில் பேச ஆரம்பிச்சிட்டே, நீ உங்கண்ணன் சொன்னான்னுட்டு ஒடனே போயாகனுமாக்கம் ?''

என்னங்க விஷயம் தெரியாம பேசறீக ,அடி பட்டது எங்கக்கா செல்வி இல்லேங்க ,உங்கக்கா செல்வி தானுங்க , அண்ணன் எதேச்சையாக அடிபட்ட போது அந்த பக்கமா வரவே ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயி நமக்கு விசயம் சொனாருங்க"

"ஐயோ , இத்தை முதலிலேயே சொல்லி தொலைச்சு இருக்கக் கூடாதா , பயித்தியம் ,எத்தை மொதலிலேசொல்றதுன்னு விவஸ்தையே கிடையாது, 

போயி என்ற துண்டக் கொண்டுட்டுவா அப்படியே வண்டிசாவியையும்கொண்டுட்டுவா.'"
சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா?

செல்வி பையன் பரசுவைதான் தன் மக மங்காக்கு முடிக்கணும்னு ரொம்ப நாளாவே மாரிசாமிக்கு , அதுவும் பத்து ஏக்கரா நிலம்,ரெண்டு மச்சு வீடு,தோட்டம் துரவு எல்லாம் இருக்கப் போ,யாராவது கறக்கற மாடை விப்பாங்களா? 

மாரிசாமி மனசை பார்த்து செல்லத்தாயி மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். அவளுக்குத் தெரியும் ,மங்கா தன் அண்ணன் பையன் விட்டலைத்தான் விரும்புரான்னு!

1 comment:

  1. Re: சோழியும் குடுமியும்
    http://www.indusladies.com/forums/showthread.php?t=140415#post1871632
    Posted by: Padhmu
    On: 13th July 2011 04:17 AM

    Oh! nice title and nice story mathangi.

    ReplyDelete