அன்புள்ள அம்மாவிற்கு
[உன்னை அம்மா வென்று கூப்பிடவே மனசு வரவில்லை ]
உன்னுடைய அன்பு மகள் நித்யா எழுதும் வெறும் கடுதாசியாக நினைத்து விடாதே ! மனதை தொட்டு விட்டு போன கசப்பான கண்ணீரின் துளிகள் தான் இவை .
உன்னைப் போல் என்னை ஆண்டவன் வாளிப்பாகவும் , நல்ல நிறமாகவும் படைத்து ,சத்யாவை அப்பாவைப்போல் ஒல்லிக்குச்சியாக ,கருப்பாக படைத்ததற்கு யாரை குறை சொல்ல முடியும் , என் விதியை தவிர ?
நான் பிடிவாதமாக ஹாஸ்டலில் தான் படிப்பேன் என்று சொன்னதன் காரணமே என்னுடைய பதினான்காவது வயதில் நடந்த சம்பவம் தான்.
அது என்னுடைய மனதையும், நினைவுகளையும் எவ்வளவு தூரம் பாதித்தது என்று உனக்கு தெரியாது.
என் அப்பா, அதான் உன் உதவாக்கரை கணவன், வீட்டிலே இருக்கானா இல்லையா என்றே தெரியாமல் நானும் சத்யாவும் வளர்ந்தோம் .
அவனுடைய பொறுப்பில்லாத குணம் உனக்கு எல்லா விதத்திலும் நல்லதாகப் போச்சு, உன் பாசமான அண்ணன் ராகவனும் உன் அம்மாவும் சொந்த வீடு இருந்தும் நம் வீடே கதி என்று இருந்தார்கள் .அப்பாவும் கண்டுக்கவே இல்லை [நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன மேலே விழாமல் இருந்தால் சரி].
நீ ஊர் மேய்வதும் அதாவது உன் பழைய ஆபீஸ் பிரெண்ட் அடிக்கடி உன்னுடன் போனில் பேசுவதும் வீட்டிற்கு அப்பா இல்லாத சமயம் வருவதும் எனக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் அதன் அர்த்தம் இப்பொழுது தான் எனக்கு புரிகிறது.
அன்றைக்கு மட்டும் சத்யா வீட்டில் இல்லாமல் போயிருந்தால், நான் இன்றைக்கு உனக்கு கடிதம் எழுதியிருப்பேனா என்பதே சந்தேகம் தான் .
அப்படிதான் ஒரு நாள் நானும் சத்யாவும் வீட்டில் தனியாக இருந்த போது, உன் அழகு அண்ணன் , என் மாமன் என்னை சூறையாட வந்தான் . அப்போ என் வயது என்ன, வெறும் பதினாலு!
அவன் என் பக்கத்தில் எப்பொழுதும் போல வந்தவன் என்னை நைசாக ரூமிற்கு தள்ளிக் கொண்டு வந்தான் . [எனக்கு என்ன நீ என்றைக்காவது ' நல்ல டச்' ,'பேட் டச்' சொல்லிக் கொடுத்து இருக்கிறாயா?] என்னை கட்டி பிடித்தான் . அப்போது தான் என் மண்டையில் சினிமா ஞாபகம் வந்தது .
உடனே நான் ஓட ஆரம்பித்தேன் , அந்த கய வஞ்சகன் என்னை விடாது துரத்திக் கொண்டே வந்து வழியை மடக்கினான் . எனக்கு வந்ததே ஆத்திரம் , பெரிசாக அலறி , கதறி, அவன் கையை கடித்து , அவன் கொடூரப் பிடியிலிருந்து நழுவி,கட்டிலின் மேல் தாவி ஓடப் பார்த்தபோது , அவன் அதை எதிர்பாக்காதால், என் ப்ளவுஸ் கிழிந்தது .
நான் கத்திகூசப் போட்டதை கேட்டு சத்யா ஓடி வந்து 'மாமா', 'மாமா' என்று இன்னும் ஜோராக கத்தவே அந்த கிராதகன் பேசாமல் போயி விட்டான் .
நான் நீ வருவதற்குள் வேறே டிரஸ் மாற்றிக்கொண்டேன் .என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது..
இந்த போராட்டத்திற்கு பிறகு, எனக்கு நல்ல ஜுரம் வந்து நாலு நாள் நான் ஸ்கூலே போகலை ,யாரிடமும் பேசலை, நானே அந்த அதிர்ச்சியிலிருந்து மீளலை.
நீ நல்ல அம்மாவாக இருந்திருந்தால் என்னுடைய நிலைமையைப் பார்த்தும் , உன் கடன்காரன் அண்ணன் ஊரை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் உன் அம்மாவையும் இழுத்துண்டு போனதற்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கணும்னு உன் உள் மனதில் மணிஅடித் திருக்கணுமே? அடிக்கலையே ! அது ஏன்?
உன்னை சொல்லி குற்றமில்லை ,உனக்கு தான் உன் சண்டாளன் அண்ணன் தெய்வத்திற்கு சமானமாச்சே! இல்லா விட்டால் , அவன் தான் ,வயது வந்த பொண்ணையும், பிள்ளையும் மனைவி இறந்ததும் , அவன் மனைவியின் தங்கை, புருசனிடம் விட்டுவிட்டு அக்கடான்னு ,உன்னிடம் தஞ்சம் ஆவானா?
நல்ல தங்கையாக நீ இருந்திருந்தால் அவனை அவனுடைய பசங்களுடன் தானே இருக்க சொல்லியிருக்கணும்?
என்னை சீரழிக்கனும்னுட்டே பசங்களை கழட்டி விட்டுட்டான் போல இருக்கு.
எனக்கு மாற்று உடை எடுக்க நீ என் அலமாரி திறந்த போது, உன் கண்ணில் என் கிழிந்த ப்ளவுஸ் பட்டது, அதை எடுத்த நீ, என்னை கேள்வி கேட்டே , நான் தூங்குவது போல் பாசாங்கு பண்ணவே, சத்யா அதற்கு பதில் சொன்னாள். உனக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
''அன்னிக்கு, மாமா அக்காவை சுத்தி,சுத்தி தொரத்தி விளையாடினா,அக்கா நல்லா கத்தி திட்டிவிட்டுட்டா மாமாவை , அப்ப தான் அக்கா சொக்காய் கிழிஞ்சு போச்சு''.
அப்ப உன் முகத்தை பார்த்து இருக்கணுமே?, உனக்கு ஷாக்கு, கோபம் , அதிர்ச்சி கூடவே நாலு நாள் ஆயியும் விஷயம் தெரியாம போச்சேன்னு ஆத்திரம் .
நீ உடனே என்ன பண்ணி இருக்கணும்?, உன் போக்கத்த புருசனிடம் கொட்டி இருக்கணும் .ஆனால் நீ அப்படி செய்யாமல் ,மறைத்ததுவுமில்லாமல் ,உன் துப்புகெட்ட அண்ணனிடம் ஒன்றுமே நடக்காததுபோல் சொந்தம் கொண்டாடியதுதான் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவேயில்லை.
ஏன் எதற்காக?
உன் பிறந்த வீட்டில் சப்போர்ட் இல்லாததாலும், அண்ணன் விஷயம் தெரிந்தால், அப்பா ,அவனை வீட்டுப்பக்கம் வராமல் செய்துவிடுவாரோ என்று தானே நீ அவரிடம் இருந்து இன்றுவரை விஷயத்தை மறைத்தாய் ?
இல்லை உன் ஊர் மேயும் ரகசியத்தை தண்ட சோறு அண்ணன் உன் புருசனிடம் உடைத்து விடுவானோ என்று பயந்து மறைத்தாயோ ? சவுகரியமாக நான் விடுமுறைக்கு வரும் போதேல்லாம் ,அந்த பாதகன் நம் வீட்டு பக்கமே தலை வைத்துப் பார்க்காதபடிக்கு அவனை மறைந்து போகும் படி மட்டும் உன்னால் செய்ய முடிந்தது .இதுவும் ஏன்?
ஒன்று மட்டும் கிளியராக தெரிந்தது ,உனக்கு உன்னுடைய நலம் தான் முக்கியம், உன் ரத்தம் தான் பெரிசு, உன்னுடைய சொந்த மகள் வாழ்க்கை எப்படி போனால் என்ன? நீயெல்லாம் ஒரு அம்மா? சரியான நம்பர் ஒன் சுயநலவாதி!
இதை எல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒரு விஷயம் நல்லவே புரிந்தது . என் வாழ்க்கைக்கு நான் யாரையும் எதிர் பார்க்க முடியாது. டாக்டர் ஆகணும் என்கிற கனவைக் கலைத்து,வக்கீலுக்கு படிக்க முடிவெடுத்தேன்.
அதன் விளைவு தான் இப்போ நான் படிக்கும் படிப்பு.
நான் என்னைப்போல் பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்காக ப்ரீயாக வாதாடப்போகிறேன். என்னை மாதிரி எத்தனை பெண்கள் அநீதியை சகித்துக்கொண்டிருக்கிரார்களோ ? அவர்களுக்கும் ஒரு விமோசனம் வேண்டாமா?
நான் படித்து முதலில் எடுக்கப்போகிற கேசு என் கேஸ் தான் , உன்னால் முடிந்தால் உன் அண்ணனை காப்பாத்திக்கோ ,அதோட இல்லாமல் சத்யா வை எனக்கு சாதகமாக பேசவும் ,உண்மையை மறைக்காமல் சொல்லவும் ,நான் அவளை எப்பொழுதோ கன்வின்ஸ் பண்ணிட்டேன். அப்பா உனக்கு எதிராகப் திருப்புவதற்கு ஒரு நாழி ஆகாது.
உன் புருஷன் இப்போதும் அதே மாதிரி கண்டும் காணாமல் தான் இருக்கிறானோ?
சத்யா விடம் உன் அண்ணனை பற்றி நிறையவே சொல்லி எச்சரித்திருக்கிறேன் ,உனக்கு சந்தேகமாக இருந்தால் அவள் அலமாரியில் போய் பார் ,மிளகாய்பொடியும், மிளகுபொடியும், ஒரு சின்ன கத்தியும்,வலது டிராயர் மூலையில் இருக்கும்.
அம்மாவான நீ பெயில்ஆகி விட்டாய்!ஆனால் அக்காவான நான் பாசாகித்தானே ஆகணும்!
அவளையும் ப்ளஸ் டூ முடித்ததும் ஹாஸ்டலில் சேத்து விடுவேன் , உன்னால் முடிந்தால் அவளை தடுத்து நிறுத்திக்கோ.
என்னை கல்யாணக் கோலத்தில் பார்க்க ஆசை படாதே, நான் கல்யாணமே செய்துக்கொள்வதாக இல்லை .
இனியும் என்னிடமிருந்து கடிதம் வரும் என்று எதிர் பார்க்காதே, மிஞ்சிப் போனால் என் நோட்டீஸ் வரும்..
இப்படிக்கு

உன்னை என் வாழ்நாள் முழுதும்மறக்க முடியாத
மனம் புண்ணான பொண்ணு ,
நித்யா
Swashika,
ReplyDeleteMathangiKumar - Well written.. you have expressed the girls pain beautifully..
i want to know what that mom is feeling now? so selfish she is..If mother and father is not responsible at home kids situation ends up like this..
-------------------------
devapriya
தாய் இருந்தும்... இல்லாத பிள்ளைகளின் நிலை கொடுமை..
------------------------------