Monday, March 7, 2011

எட்டரைகுள்ளே

வைதேஹி ஆபேரஷன் ஆகி ரெஸ்ட்ல இருந்தாலும் காத்தாலை எட்டரை ஆச்சுன்னா தினமும் இதே பாட்டு தான் பாடுவா.

என்ன பாட்டுன்னு  கேக்கறேளா , இதோ ஒரு சாம்பிள் .


 'அம்பி , சீக்ரமா எழுந்து  எட்டரைகுள்ளே டிரெஸ்ஸை ஐயர்ன் பண்ணிக்கோ',

'சீனு மடமடனு  எட்டரைகுள்ளே  குளிச்சிட்டு வா '

 'ரமணி பாத்திரத்தை தேச்சுட்டு எட்டரைகுள்ளே  பகட்லே தண்ணி பிடிச்சு வைய்யி'

'அடியே ,கோகிலா மச மசன்னு  இருக்காம , துணியெல்லாம் வாஷிங் மஷின்லே  போட்டு  எட்டரைகுள்ளே தோச்சு எடு'

'உங்களை தான் , வாட்டர் ப்யூரிபையர்லே எட்டரைகுள்ளே  தண்ணி பிடிச்சு பாட்டில்ல  றொப்புங்கோ'

'ராதை , சாம்பாருக்கு தேங்காய் போட்டு  எட்டரைகுள்ளே அரைச்சு வச்சுடு' 

கோபமா வந்தது  சின்ன பையன் பையாச்சுககு , நைட் ஷிப்ட் முடிச்சுட்டு வந்து சிவ, சிவான்னு தூங்கலாம்னா இந்த அம்மா தொல்லை தாங்காமா கத்திண்டே இருந்தால் , எப்படி தூங்கறது?

'என்னாம்மா , எட்டரைக்குள்ளே பண்ணலைன்னா என்ன உயிரா போகும்'? 

 இல்லடா கண்ணா , கரண்ட் போயிடும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

2 comments:

  1. suganyabalaji
    Nice very nice. I enjoyed your short stroy very. I finished the story with the laugh.
    ----------------------------

    prana

    simple and good...
    ---------------------

    suupppppppeeeeeeeeeeerrrrrrrrrrrrr.... indha ending naan edhir paarkkavey illa.... ungal nagaichuvai thiramai migavum paaraattathakkadhu... :)
    ILoveTulips
    -----------------
    கதை தமாஷா இருக்கு . உங்க வீட்டுக் கதையா அம்மா ?
    Pushpalatha
    ----------------

    இல்லவே இல்லை, எங்கள் வீட்டில் தலையில் இடியே விழுந்தாலும் ராத்திரி எட்டரைக்குள்ளே வேணுமானாலும் எழுந்துப்பா , கார்தாலை முடியவே முடியாது!!!!!!!!!!!! mathangikkumar
    -----------------------
    இப்படி ஒரு நகைச்சுவையான முடிவை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை....காலத்திற்கேற்ற கதை.
    devapriya
    ----------
    நல்லா இருந்தது.நான் ஏதோ தண்ணி கஷ்டமொனு நினைச்சேன்.
    Latha.
    -----------------

    periamma

    சூப்பர் பதில்.இந்த மின்சாரம் எவ்வளவு tension பண்ணுது.கதை நல்லா இருக்குமா.
    -----------
    Sema Soooooooooooooooppppppppppppeeeeeeeeerrrrrrrrrrrr! !! Very humourous!!!

    என்றென்றும் அன்புடன் ,
    மலர்விழி (A) Malar
    ------------------------

    ReplyDelete
  2. http://www.indusladies.com/forums/showthread.php?t=131436#post1924310
    Posted by: omsrisai
    On: 24th August 2011 09:57 PM

    Arumaiyana kathai....
    ************
    Re: எட்டரைகுள்ளே..................
    http://www.indusladies.com/forums/showthread.php?t=131436#post1924325
    Posted by: knbg
    On: 24th August 2011 10:11 PM

    Dear Madam,
    Lovely one....reminded me of my days in north east India where water was supplied only for a few hrs in the morning....
    Regards,
    Bhargavi
    ************
    Re: எட்டரைகுள்ளே..................
    http://www.indusladies.com/forums/showthread.php?t=131436#post1924522
    Posted by: Lavanyaram
    On: 25th August 2011 02:21 AM

    Nice. this is the true situation.Finished nicely with a humourous touch

    ReplyDelete